டெலிகாம் நிறுவனங்கள் மீதான ‘ரிலையன்ஸ் ஜியோ’-வின் விலைப்போர் - நீங்க கவனிக்க வேண்டிய 10 விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வியாழக்கிழமை ரிலையன்ஸ் ஜியோவின் வெளியீடு பற்றி நிறுவனத்தின் 42வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் அறிவித்தார்.

 

அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ திட்டம் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொது கூட்டத்தில் முகேஷ் அம்பானி பேசிய உறையில் இருந்து முக்கிய குறிப்புகளை நாம் இங்குப் பார்ப்போம்.

10 வது இடத்திற்கு முன்னேறும்

10 வது இடத்திற்கு முன்னேறும்

மொபைல் பிராட்பேண்ட் இணையதள சேவை வழங்குவதில் 155 வது இடத்தில் இருக்கும் இந்தியா ஜியோ முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் போது 10 வது இடத்திற்கு முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்டம்பர் 5 முதல்

செப்டம்பர் 5 முதல்

செப்டம்பர் 5 முதல் ரிலையன்ஸ் ஜியோ சேவை அளிக்கப்படும் என்றும், வணிக ரீதியாக டிசம்பர் 31 முதல் துவங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

கட்டண போர்

கட்டண போர்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் 50 ரூபாய்க்கு 1 ஜிபி தரவை அளிக்க இந்த புதிய நிறுவனம் முடிவு செய்துள்ளது.

முகேஷ் அம்பானி அவரது உரையில் ஜியோவின் மலிவான டாரிப் கட்டணங்களை அறிவித்துப் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மீது கட்டண போரைத் துவங்கியுள்ளார்.

குறைவான தரவு கட்டணம்
 

குறைவான தரவு கட்டணம்

ரிலையன்ஸ் ஜியோ துவங்குவதினால் தரவு கடனங்கள் அதிகமாக இருக்கும் இந்திய சந்தை குறைவான தரவு கட்டண சந்தையாக உருவெடுக்கும் என்றார்.

இலவச அழைப்புகள்

இலவச அழைப்புகள்

போட்டி தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட 10-இல் இரு பங்கே தரவு கட்டணமாக அறிவித்துள்ள நிலையில் ஜியோ நெட்வொர்க் இணைப்புகளுக்கு இடையில் இலவச அழைப்புகளையும் அளிக்க உள்ளது.

ஒன்றுக்கே கட்டணம்

ஒன்றுக்கே கட்டணம்

வாடிக்கையாளர்கள் கால் அல்லது தரவு ஏதேனும் ஒன்றுக்கே கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், எனவே தொழில் கட்டமைப்பில் பெறும் மாற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

டாரிப் திட்டங்கள்

டாரிப் திட்டங்கள்

டெலிகாம் டார்ப் முறை அனைத்து இந்தியர்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இன்று, நாடு முழுவதும் 22,000 டெலிகாம் டாரிப் திட்டங்கள் இருக்கின்றன. ஜியோ நிறுவனம் 10 முக்கிய டாரிப் திட்டங்களை அறிமுகப்படுத்த இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

குறைந்தபட்சம் 19 ரூபாயில் இருந்து மாதத்திற்கு 149 ரூபாயில் இருந்தும் அதிகபட்சமாக 4,999 ரூபாயாகவும் தரவு பயன்பாட்டிற்கேற்ப அளிக்க உள்ளதாக அம்பானி தெரிவித்துள்ளார்.

குரல் அழைப்புகள்

குரல் அழைப்புகள்

ஜியோ வாடிக்கையாளர்கள் இனி குரல் அழைப்புகளுக்குக் கட்டணம் செலுத்தவே தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் இந்தியாவில் குரல் அழைப்புகளுக்கான கட்டணம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரவு திட்டங்கள்

தரவு திட்டங்கள்

சந்தையில் இப்போது தரவு கட்டணங்கள் ஜிபிக்கு 250 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது, ஆனால் ஜியோ நிறுவனம் 5 இல் இருந்து 10 மடங்கு வரை குறைத்து 25 முதல் 50 ரூபாயாக அறிமுகம் படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எதிர்கால திட்டத்திற்காக தயாராக இருங்கள்

எதிர்கால திட்டத்திற்காக தயாராக இருங்கள்

ஜியோ நெட்வொர்க் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களில் 2017-க்குள் தங்களது சேவையை அளிக்கும் என்றும் இந்தியாவின் 90 சதவீத மக்கள் தொகையை வாடிக்கையாளர்களாகப் பெற இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது எதிர்காலத்திற்கான திட்டம், இன்னும் 5கி, 6ஜி என்ற தொழில்நுட்பம் மாறும் போது எளிதாகப் புதுப்பித்துக்கொள்ள வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கைபேசி

கைபேசி

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2,999 மற்றும் 1,999 ரூபாய்க்குச் சிறந்த 4ஜி லைட் ஸ்மார்ட்போன்களை வழங்குவதாகவும் இதனைப் பயன்படுத்தி எல்லா இந்தியர்களும் எளிதாக ஜியோ நேட்வொர்க் மூலம் பயன்பெறலாம்.

செயலிகள்

செயலிகள்

2017, டிசம்பர் 31 வரை 15,000 மதிப்புள்ள ஜியோ செயலிகளை இலவசமாகப் பயன்படுத்தி அனுபவிக்கலாம்.

மாணவர்களுக்கான சலுகை திட்டம்

மாணவர்களுக்கான சலுகை திட்டம்

மாணவர்களுக்கான சலுகைத் திட்டங்களை அறிவித்துள்ள அம்பானி இதன் மூலம் மாணவர்கள் 25 சதவீதம் வரை ஜியோவின் முதன்மை டாரிஃப் கட்டணங்களில் பெறலாம் என்று கூறியுள்ளார்.

இ-கேஒய்சி

இ-கேஒய்சி

வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவன இணைப்பிற்கு தங்களது ஆவணங்களை மின்னணு வழியாகப் பெறுவதால் 15 நிமிடங்களில் டிஜிட்டல் முறையில் சிம் காரடை பயன்படுத்த துவங்களாம்.

டிஜிட்டல் ஃபண்ட்

டிஜிட்டல் ஃபண்ட்

முக்கிய நகரங்களில் தொழில் முனைவோருக்கு ஜியோ டிஜிட்டல் இந்தியா ஸ்டார்ட் அப் நிதி அளிக்கும் என்றும் இதன் மூலம் இன்னும் பல டிஜிட்டல் தொழில் முனைவுகள் ஏற்படும் வாய்ப்பு உருவாகும்.

இளம் தொழில் முனைவோர்

இளம் தொழில் முனைவோர்

ஆயிரம் கணக்கான இளம் தொழில் முனைவோருடன் ஜியோ நிறுவனம் இணைந்து ஜியோ நிறுவனம் செயல்பட உள்ளதாகவும் இதன் மூலம் அவர்கள் ஜியோ சேவையை பெரிதும் பயன்படுத்துவர் என்றார்.

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில்

பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில்

அதுமட்டும் இல்லாமல் 10,000 பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து மாணவர்களுக்கு விரைவான இணையதள சேவையை வழங்கவும் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio tariff war Things to know about RIL's 42nd AGM

Reliance Jio tariff war: Things to know about RIL's 42nd Annual General Meeting
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X