நாடு தழுவிய வேலை நிறுத்தம்: கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நாடு முழுவதும் 15 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம். வங்கி, போக்குவரத்து போன்ற பல அத்தியாவசிய சேவைகள் முடக்கம், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

 

தமிழகத்தில் குறிப்பிடும் அளவுக்குப் பாதிப்பு இல்லை என்றாலும் நாம் எதற்காக இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தம் என்று பார்ப்போம்.

தொழிலாளர் விரோத கொள்கை

தொழிலாளர் விரோத கொள்கை

மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கையை எதிர்த்தும் மேலும் சம்பளத்தை உயர்த்தக் கூறியும் ஊழியர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈட்டுப்பட்டு வருகின்றனர்.

மேலும் ரயில்வே, பாதுகாப்பு, இன்ஷூரன்ஸ் போன்ற பொதுத் துறைகளில் நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பதை எதிர்த்தும் ஊழியர்கள் சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

 

டெல்லியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்

டெல்லியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்

டெல்லியில் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஊழியர்கள் போராட்டத்தை விட இந்த ஆண்டு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பொதுப் பயன்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள்
 

பொதுப் பயன்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள்

மத்திய அரசு அனைத்து அமைச்சர்களையும் பொதுப் பயன்பாடுகள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படாத வகையில் பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

பொதுத் துறை வங்கிகளில் ஏடிஎம் வாடிக்கையாளர்களுக்கு பண பற்றாக்குறை இல்லாதவாறு உறுதி செய்து கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

 

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான போனஸ் அளிப்பதாகவும், ஊழியர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவதாக நிதி அமைச்சர் அருண் ஜேட்லி செவ்வாய்க்கிழமை அறிவித்தும் ஊழியர் சங்கங்கள் போராட்டத்தைக் கைவிடவில்லை.

பாரதிய மசூதூர் சங்கம்

பாரதிய மசூதூர் சங்கம்

பெரிய ஊழியர் சங்கமான பாரதிய மசூதூர் சங்கம் எப்போதும் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடாது.

இவர்கள் மட்டும் அரசின் முடிவை ஆதரித்தும், குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.350 உயர்த்தியதை வரவேற்றும் இரண்டு ஆண்டுக்கான போனஸ் வழங்குவதை மகிழ்ச்சியுடன் ஆதரித்தும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 

ரயில்வே சேவையில் பாதிப்பு இல்லை

ரயில்வே சேவையில் பாதிப்பு இல்லை

இந்த வேலை நிறுத்தத்தை ரயில்வே ஊழியர் சங்கங்கள் ஆதரித்தாலும் அவர்களால் பங்கு பெற இயலவில்லை என்று ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்தினர்.

பணவீக்கத்திற்கான கவன ஈர்ப்பு போராட்டம்

பணவீக்கத்திற்கான கவன ஈர்ப்பு போராட்டம்

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவோர் பணவீக்கத்தைப் பற்றிக் குறிப்பிட்டு விலை வாசி உயர்வை பான்-இந்தியா பொது விநியோக அமைப்பு சரிபார்க்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெருகி வரும் வேலையின்மை குறித்தும் கவலை தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரிக்கின்றனர்.

மேலும் எல்லா தொழிலாளர் சட்டங்களும் நடைமுறைப் படுத்த வேண்டும் என்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான சமூகப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

பணிக்கொடை உயர்த்த வேண்டும்

பணிக்கொடை உயர்த்த வேண்டும்

ஓய்வு பெறும் போது அளிக்கப்படும் பணிக்கொடை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் பிஎப் நிதி கட்டணம் மற்றும் போனஸ் வழங்குவதை மேலும் பரிசீலனை செய்ய வேண்டும் கேட்டுக் கொண்டனர்.

காங்கிரஸ் உட்படப் பிற கட்சிகள் ஆதரவு

காங்கிரஸ் உட்படப் பிற கட்சிகள் ஆதரவு

எதிர் கட்சியான காங்கிரஸ் மற்றும் பிற கட்சியினர்கள் ஊழியர்களின் 12 அம்ச கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இவர்கள் கோரிக்கையில் குறைந்த பட்ச மாத ஊதியத்தை 18,000 ரூபாய் எனவும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியத்தை 3,000 ரூபாய் என உயர்த்தவும் பணவீக்கத்தைச் சரிபார்க்கவும் தங்களது கோரிக்கை வலியுறுத்தியுள்ளனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

National Bandh Facts to Know about trade unions' strike

National Bandh: Facts to Know about trade unions' strike
Story first published: Friday, September 2, 2016, 16:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X