'என்னால்' தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் விலையை குறைத்தது: பாபா ராம்தேவ் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம். இதனால் நுகர்பொருள் சந்தையின் ட்ரெண்ட் செட்டராகவே பாபா ராம்தேவ் மாறியுள்ளார் என்றால் அது மிகையல்ல.

 

இப்படிப்பட்ட நிலையில் வணிகம் மற்றும் தேசப்பற்று பற்றி பாபா ராம்தேவ் எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த சூடான பேட்டி.

இந்தியாவின் நிதி சுதந்திரம்

இந்தியாவின் நிதி சுதந்திரம்

இந்தியாவின் நிதி சுதந்திரம் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற முதல், நாம் இன்னும் நிதிப் பற்றாக்குறைக்கு பிறரைச் சார்ந்து இருக்கிறோம். இந்தியாவிற்கு நிதி சுதந்திரம் தேவை என்றார்.

சிந்தனை, வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளில் அந்நியர்களின் அடிமைகளாக மக்கள் உள்ளனர்.

நிதிக்காக அடிமை

நிதிக்காக அடிமை

நாம் நிதிக்காகப் பிறரிடம் அடிமையாக இருப்பதினால் தான் எம்என்சி நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்தது மட்டும் இல்லாமல் லீவ்-இன் மற்றும் ஓரினச்சேர்க்கை போன்றவற்றிற்கும் மூல காரணமாக உள்ளது என்று கூறினார்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பிரச்சாரம்
 

பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பிரச்சாரம்

இவருடைய தயாரிப்புகளின் விளம்பரம் அதிகமாக வருவதைப் பற்றிய கேள்விக்கு, இது நீண்டகாலமாகவே நிறைவேற்றப்படாமல் இருந்தது, தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலிகள் எல்லாம் ஏன் பாபா ராம் தேவிற்கு முன்னுரிமை அளிக்கின்றன என்று எனது விளம்பத்திற்கு நிறையக் கேள்விகள் எழுந்தன. இதே கேள்விகளை இவர்கள் பன்னாட்டு நிறுவனங்களைக் கேட்டதுண்டா?

இந்திய ஊடகங்களை பாராட்ட வேண்டும்

இந்திய ஊடகங்களை பாராட்ட வேண்டும்

நிச்சியமாக இந்திய ஊடகங்களை எனது விளம்பரத்தை ஏற்றுக்கொண்டதற்குப் பாராட்டியே ஆக வேண்டும். இன்னும் இந்திய ஊடகங்கள் தேசப்பற்றுடன் உள்ளன என்றார்.

முன்பெல்லாம் பிரபலங்களுக்காக எம்என்சி நிறுவனங்கள் நிறையச் செலவழித்து வந்தன, தொண்டு நிறுவனங்கள் பற்றி இவர்கள் கவலை கொண்டதில்லை. நாங்கள் இதை மற்ற விரும்பினோம். இப்போது எங்களால் தங்களது தயாரிப்புகளின் விலையைக் குறைத்துள்ளனர்.

கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை

கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை

பதஞ்சலி நிறுவனத்தின் வெற்றியே கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கை தான். இதுவே எம்என்சி நிறுவனங்களுடனான எங்களது போட்டிக்கான ஊக்குவிப்பு மற்றும் அவர்களிடம் இருந்து எங்களை வெற்றி அடையச் செய்ததற்கான காரணம் என்று பதில் அளித்தார்.

மீண்டும் சுதேசி

மீண்டும் சுதேசி

மீண்டும் சுதேசி தயாரிப்புகள் அதிகம் செலுத்துகின்றனவா என்ற கேள்விக்கு, சுதேசி மீண்டும் துவங்கி உள்ளது. சுதேசி தயாரிப்புகளை வாங்காமல் பன்னாட்டு நிறுவன தயாரிப்புகளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் உங்களது பணத்தை நீங்கள் அவர்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுகிறீர்கள் என்றே அர்த்தம்.

நீங்கள் நமது தயாரிப்புகளை வாங்கினால் மட்டுமே இந்தியாவை விட்டு நமது பணம் வெளியேறாமல் இருக்கும். தேன் மற்றும் நெய் நாங்கள் தான் பெரிய நிறுவனம். சுதேசி தயாரிப்புகள் கண்டிப்பாக தங்களது வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றார்.

பதஞ்சலியின் லாபம் தனிநபருக்கானது அல்ல

பதஞ்சலியின் லாபம் தனிநபருக்கானது அல்ல

பதஞ்சலி நிறுவனத்தின் லாபம் யாருக்கு என்ற கேள்விக்கு பதில் அளித்த ராம் தேவ் நமது வாழ்க்கை உணர்வுகளுக்கு உட்பட்டது. உண்மையில், அனைத்து உறவுகளும் உணர்வுகளுக்கு உட்பட்டது தான்.

பதஞ்சலியின் லாபம் தனிநபருக்கானது அல்ல இது ஒரு அறக்கட்டளைக்கானது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பயன் அடைவர் என்றும் யாருக்கும் எந்த லாபமும் கிடையாது என்று கூறினார்.

லாபம் நாட்டிற்கே

லாபம் நாட்டிற்கே

லாபம் அனைத்தும் நாட்டிற்காகவே செலவிடப்படும். பதஞ்சலி தேசப்பற்றுடன் செயல்படுகிறது என்றும் பிறாண்டுகள் நுகர்வோருடன் உண்மையாக, உணர்ச்சி உருவமாக இருக்க வேண்டும் என்றும் பதில் அளித்தார்.

இந்தியா சந்தை அல்ல குடும்பம்

இந்தியா சந்தை அல்ல குடும்பம்

போலியான தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது குறித்து கேட்கப்படக் கேள்விக்கு இது சரியான முறையே. ஆனால் இது எந்த அளவுக்குச் சாத்தியம் ஆகும் என்று தெரியவில்லை. இதற்குப் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விளம்பரப் படுத்த பெரும் தொகையை பெறும் பிரபலங்கள் தார்மீக பொறுப்பேற்காமல் பயப்படுவது ஏன்? இந்தியா சந்தை அல்ல இது குடும்பம் என்றார்.

பிரபலங்கள் போலியான தயாரிப்பு விளம்பரத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த தயாரிப்புகள் மக்களுக்கு உகந்ததா எந்த ஒரு தீங்கும் விளைவிக்காதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இவர்கள் எப்படி நமது நலனில் ஆக்கரைக் கொள்வார்கள்?

இவர்கள் எப்படி நமது நலனில் ஆக்கரைக் கொள்வார்கள்?

இதில் சோகமான விஷயம் என்னவென்றால் பல பிரபலங்களுக்கு அந்த தாரிப்பு பொருட்கள் பற்றிய விவரம் தெரிந்துகொள்ளாமல் விளம்பரப் படுத்துகின்றனர். சாராயம், புகையிலை போன்ற பொருட்களை விளம்பரப் படுத்தும் இவர்கள் எப்படி பொது மக்கள் மீதான நலனில் ஆக்கரைக் கொள்வார்கள் என்று கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev talks about Pthanjali, MNC's and Freedom

Baba Ramdev talks about Pthanjali, MNC's and Freedom
Story first published: Tuesday, September 6, 2016, 15:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X