சச்சின் டெண்டுல்கர்-ஐ ஈர்த்த ஸ்மார்ட்டான நிறுவனம்..!

By Ashok Cr
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவில் ஒரு நிறுவனத்தின் தயாரிப்புப் பொருட்களை மக்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சேர்க்கும் சக்தி யாரிடம் உள்ளது.? சினமா மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்களிடம் தான் உள்ளது. என்ன சரியாக. நட்சத்திரங்களை நிறுவனங்கள் அழைத்து வருவது ஒன்றும் நமக்குப் புதிதல்ல.

 

ஆனால் இன்றோ பல நட்சத்திரங்கள் வளம்பங்கள் சினிமாக்களைத் தாண்டி தங்கள் பணத்தைச் சில முக்கிய நிறுவனங்களிலும் வளர்ந்து வரும் ஸ்டார்ட் அப்-களிலும் முதலீடு செய்வது ட்ரெண்ட் ஆகிக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் திரைப்படங்கள், விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிப்பது போதாது என்று தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து வரும் நட்சத்திரங்களின் பட்டியல், இதோ!

அமிதாப் பச்சன் (ஜிட்டு)

அமிதாப் பச்சன் (ஜிட்டு)

முதலீடுகள் என வந்து விட்டால், பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. மெகாஸ்டார் அமிதாப் பச்சன் ஜிட்டு என்ற சிங்கப்பூரை சார்ந்த ஆன்லைன் க்ளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஷேரிங் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் $2.5 லட்சத்தை முதலீடு செய்துள்ளார்.

விளம்பரங்கள் மூலமாகப் பணம் சம்பாதிக்கும் இந்நிறுவனம், இதன் தளம் மூலம் கோப்புகளைப் பகிர்வதற்குப் பயனர்களுக்குப் பணம் செலுத்துகிறது.

சச்சின் டெண்டுல்கர் (ஸ்மார்ட்ரான்):

சச்சின் டெண்டுல்கர் (ஸ்மார்ட்ரான்):

கிரிக்கெட் உலகில் கடவுள் என் செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஸ்மார்ட்ரான் என்னும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார்.

இந்திய தொழில்நுட்ப தொழில்துறையில் ஸ்மார்ட்ரான் ஒரு புதிய நிறுவனமாகும். அதன் டி-புக் போர்ட்டபிள் அல்டராபுக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்திய இந்நிறுவனத்திடம், வெகு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஸ்மார்ட்போன் மற்றும் டப்ட் டி.போனும் உள்ளது.

"ஸ்மார்ட் திங்ஸ் பார் லைப்" என்ற வாசகத்துடன், தன்னுடைய விளம்பர தூதராகவும், மூலோபாய முதலீட்டாளராகவும் சச்சின் டெண்டுல்கரை கொண்டுள்ளது. இருப்பினும், நம் விளையாட்டு சூப்பர் ஸ்டார் இந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்துள்ளார் என்பதை இந்நிறுவனம் தெரியப்படுத்தவில்லை.

சல்மான் கான் (யாத்ரா):
 

சல்மான் கான் (யாத்ரா):

சல்மான் கானும் தன் பணத்தைத் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்துள்ளார். ஆன்லைன் பயண நிறுவனமான யாத்ரா.காம்-ல் இவர் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்து, நிறுவனத்தின் 5% பங்குகளைக் கொண்டுள்ளார்.

யுவராஜ் சிங் (வ்யோமோ, உபேர்):

யுவராஜ் சிங் (வ்யோமோ, உபேர்):

ஸ்போர்ட்ஸ் உலகத்தின் மற்றொரு கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அழகு மற்றும் ஆரோக்கிய பிரயோகமான வ்யோமோ, மூவோ என்ற சிறிய டிரக்களை இயக்கம் உபேர் மற்றும் தனியார் விமானச் சந்தை இடமான ஜெட்செட்கோ ஆகியவற்றில் முதலீடு செய்துள்ளார்.

தன்னுடைய முதலீட்டைத் தீவிரமாக எடுத்துக் கொண்ட அவர், பல்வேறு ஸ்டார்ட்-அப் களுக்குப் பக்க பலமாக விளங்க யூவீகேன் என்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.

மாதுரி தீட்சித் ('டான்ஸ் வித் மாதுரி'):

மாதுரி தீட்சித் ('டான்ஸ் வித் மாதுரி'):

மாதுரி தீட்சித் பற்றிப் பேசுகையில், அவருடைய நடன ஆற்றல்களைப் பற்றிக் கூறாமல் இருக்க முடியாது. பல்லாயிரக்கணக்கான தன் ரசிகர்களின் வேண்டுதலுக்குப் பதிலளிக்கும் விதமாகத் தன்னுடைய சொந்த ஆன்லைன் நடன அகாடமியை திறந்தார். 'டான்ஸ் வித் மாதுரி' எங்கு இருந்து வேண்டுமானாலும் மாதுரி மூலமாகவே நடனம் கற்றுக் கொள்ள உதவுகிறது.

மாதுரி தவிர, நடன ஜாம்பவான்களான சரோஜ் கான், பண்டிட் பிர்ஜு மகாராஜ், ரெமோ டிசௌசா மற்றும் டெரன்ஸ் லெவிஸ் போன்றவர்களிடம் இருந்து நடனம் கற்றுக் கொள்ளப் பயனர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் வழிவகையும் செய்து தரப்பட்டுள்ளது. இதை விட வேறு என்ன வேண்டும்?

அணில் கபூர் (இண்டி):

அணில் கபூர் (இண்டி):

அணில் கபூர், வெளியிடப்படாத தொகையை ஒரு ஆன்லைன் வீடியோ சமூக வலைத்தளமான இண்டியில் முதலீடு செய்துள்ளார். உலகளாவிய வீடியோ தளமான இதில், தனி நபர்களும் பிராண்ட்களும், உள்ளடக்கத்தை உருவாக்கி, காசாக்க வழிவகுக்கிறது.

அதே நேரம், பயனர்கள் தங்கள் உள்ளடக்கத்தைப் பல்வேறு சமூக வலைத்தளங்களில் இண்டி மூலமாக ஒருங்கிணைக்கலாம். இந்தச் சமூக வலைத்தளம் விரைவில் இந்தியாவிலும் கால்பதிக்கப் போகிறது.

கரிஷ்மா கபூர் (பேபிஓய்.காம்):

கரிஷ்மா கபூர் (பேபிஓய்.காம்):

பாலிவுட்டின் கனவுக்கன்னிகள் மட்டும் லேசுப்பட்டவர்களா என்ன, அதுவும் தொழில்நுட்பத்தில் முதலீடு என வரும் போது? பேபிஓய்.காம் என்ற இ-காமர்ஸ் நிறுவனத்தின் 26% பங்குகளைக் கரிஷ்மா கபூர் வைத்துள்ளார். குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் பராமரிப்புப் பொருட்களை விற்பவர்கள் இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

லியோனார்டோ டி காப்ரியோ (ரூபிகான் குளோபல், பிஸ்கெர் ஆட்டோமோட்டிவ், மொப்லி, க்யூ, டைமண்ட் ஃபவுண்டரி மற்றும் காஸ்பெர்):

லியோனார்டோ டி காப்ரியோ (ரூபிகான் குளோபல், பிஸ்கெர் ஆட்டோமோட்டிவ், மொப்லி, க்யூ, டைமண்ட் ஃபவுண்டரி மற்றும் காஸ்பெர்):

ஆஸ்கார் நாயகனான காப்ரியோ தன்னுடைய பணத்தைக் குறைந்தது ஆறு தொழில்நுட்ப நிறுவனத்தில் கடந்த எட்டு வருடங்களாக முதலீடு செய்து வருகிறார். லியோனார்டோ டி காப்ரியோ முதலீடு செய்துள்ள ஆறு நிறுவனங்கள் இவை தான்: ரூபிகான் குளோபல், பிஸ்கெர் ஆட்டோமோட்டிவ், மொப்லி, க்யூ, டைமண்ட் ஃபவுண்டரி மற்றும் காஸ்பெர்.

ஆஷ்டன் கட்சர் (ஸ்கைப், ஏர்பிஎன்பி, ஃபோர்ஸ்குவேர், இப்மன்க், ஃபிலிப்போர்டு, பாத் மற்றும் லைக்எலிட்டில்):

ஆஷ்டன் கட்சர் (ஸ்கைப், ஏர்பிஎன்பி, ஃபோர்ஸ்குவேர், இப்மன்க், ஃபிலிப்போர்டு, பாத் மற்றும் லைக்எலிட்டில்):

"டூ அண்ட் எ ஹாஃப் மென்" மற்றும் "ஜாப்ஸ்" படங்களில் நடித்த ஆஷ்டன் கட்சருக்கு கண்டிப்பாகத் தொழில்நுட்பத்தின் மீது ஈடுபாடு இருப்பது அவருடைய முதலீடுகள் பிரதிபலிக்கிறது. இந்த ஹாலிவுட் நடிகர் தன்னுடைய பணத்தை ஸ்கைப், ஏர்பிஎன்பி, ஃபோர்ஸ்குவேர், இப்மன்க், ஃபிலிப்போர்டு, பாத் மற்றும் லைக்எலிட்டில் ஆகிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.

அதனால் ஆஷ்டன் கட்சரின் முதலீட்டுப் பிரிவில் வீடியோ சாட் மெசெஞ்சர் முதல் சமூகச் செய்திகள் பத்திரிக்கை மற்றும் புகைப்படம் பகிர்வு பிரயோகம் வரை அனைத்தும் அடங்கியிருக்கும்.

கிம் கர்தஷியான் (ஷூ டாசில்):

கிம் கர்தஷியான் (ஷூ டாசில்):

சோசியலைட் மற்றும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சி நட்சத்திரமான கிம் கர்தஷியான் ஒரு ஆன்லைன் காலணிகள் மற்றும் உபரி பாகங்கள் வலைத்தளத்தைத் தன்னுடைய பிற மூன்று கூட்டாளிகளுடன் தொடங்கியுள்ளார்.

இந்த வலைத்தளம் இப்போது மிகவும் பிரபலமாகி விட்டது. இது தன் பயனர்களைக் காலணிகள், ஆபரணங்கள் மற்றும் கைப்பைகளை மாதாந்திர கட்டணத்திற்குப் பயன்படுத்த அனுமதிக்கிறது. ஆண்ட்ரீஸ்ன் ஹோரோவிட்ஸ் என்ற வென்ச்சர் கேப்பிடல் நிறுவனம் மூலமாக ஷூ டாசில் $40 மில்லியனை முதலீடாகவும் பெற்றுள்ளது.

புகைப்படம்: usmagazine

மனோஜ் பாஜ்பாய் (மூவீஸ்):

மனோஜ் பாஜ்பாய் (மூவீஸ்):

2015-ல், பாலிவுட் நடிகரான மனோஜ் பாஜ்பாய் மூவீஸ் என்ற ஓவர் தி டாப் (ஓ.டி.டி) அல்லது வீடியோ ஆன் டிமாண்ட் (வி.ஓ.டி) தளத்தில் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனம் வழிபாட்டு மரபு, கிளாசிக் மற்றும் சார்பில்லா திரைப்படங்களைப் பயனர்களுக்கு அளித்து வருகிறது.

rn

யுபிஐ செயலி

யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Unknown Relationship between Sachin Tendulkar and Smartron

Unknown Relationship between Sachin Tendulkar and Smartron. Nowadays Cricket and movie stars eager to invested in startups. Do you know why?-Tamil goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X