'ஜியோ' கோரிக்கையை ஏற்க முடியாது.. டெலிகாம் நிறுவனங்கள் தடாலடி 'மறுப்பு'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய டெலிகாம் சந்தை மட்டும் அல்லாமல் உலகத் தொலைத்தொடர்பு சந்தையையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகம் இந்தியாவில் மிகப்பெரிய பிரிவினையை உருவாக்கியுள்ளது.

 

ஜியோ அறிமுகத்தால் இந்நிறுவனத்திற்குப் புதிய வாடிக்கையாளர்கள் சேர்ந்தார்களோ இல்லையோ.. ஏர்டெல், ஐடியா, வோடபோன் போன்ற நிறுவனங்களுக்கு அதிகளவிலான எதிர்ப்புகள் உருவாகியுள்ளனர்.

இந்தக் கடுப்பில் தான்.. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இண்டர்கனெக்ஷன் பாயின்ட் கோரிக்கையை ஏற்க முடியாதென்று டெலிகாம் நிறுவனங்கள் கடுமையாக மறுத்துள்ளது.

அப்படி என்ன கோரிக்கை வைத்தது...?

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ துவக்கமே அதிரடியாக இருந்த நிலையில், 10 கோடி வாடிக்கையாளர்களின் இணைப்பு டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதை நாம் மறுக்க முடியாது.

COAI கடிதம்..

COAI கடிதம்..

ஜியோ வாடிக்கையாளர்களின் சுனாமி போல வரும் வாய்ஸ் கால் மூலம் இந்தியா டெலிகாம் நிறுவனங்களின் சராசரி அளவான 30-40 பைசா லாபம், 22-25 பைசா அளவையும் தாண்டி குறையும், இதனால் டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகும் எனப் பிரதமர் அலுவலகத்தின் தலைமை செயலாளர் நிர்பென்திர் மிஸ்ரா-விற்கு 5ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் ஜியோ-வின் தாக்கத்தை முன்கூட்டியே கணித்த செல்லூலார் ஆப்ரேட்டார்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா கடிதம் எழுதியது.

ஒத்த ரூபா சேர்க்க முடியல.. நாடு நாடா சுத்தி என்ன பயன்.?!ஒத்த ரூபா சேர்க்க முடியல.. நாடு நாடா சுத்தி என்ன பயன்.?!

 

 

COAI அமைப்பு..
 

COAI அமைப்பு..

இந்திய ஜிஎஸ்எம் நிறுவனங்களின் மிகப்பெரிய ஆளுமை அமைப்பு தான் இந்தச் செல்லூலார் ஆப்ரேட்டார்ஸ் அசோஷியேஷன் ஆஃப் இந்தியா (COAI).

ஜியோ தாக்கத்தால் வாய்ஸ் கால் வருமானத்தில், டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் எனவும் எச்சரித்துள்ளது.

 

இலவசங்கள்

இலவசங்கள்

ஜியோவின் இந்த இலவசங்கள் பிற டெலிகாம் நிறுவனங்களின் வாய்ஸ் கால் எண்ணிக்கை இரட்டிப்பாக உள்ளது.

COAI அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, தற்போது மொத்த டெலிகாம் நிறுவனங்கள் மத்தியிஸல் இன்கம்பிங் மற்றும் ஆவுட்கோயிங் கால் எண்ணிக்கை 1:1 ஆக உள்ளது. சந்தையில் ஜியோவின் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் இணைப்பின் மூலம் இதன் அளவு 10:1 ஆக உயர்ந்துள்ளது.

அடுத்தச் சில வாரங்களில் இதன் அளவு 15:1ஆக உயர்ந்தாலும் தடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

மறுப்பு..

மறுப்பு..

இத்தகைய தருணத்தில் தான் ஜியோ நிறுவனம் பிற டெலிகாம் நிறுவனங்களிடம் இண்டர்கனெக்ஷன் பாயின்ட் வழங்கக் கோரியுள்ளது.

இந்தியாவில் முழுமையான டெலிகாம் சேவைக்கு ஏற்ற நெட்வொர்க் வசதிகள் இல்லாமல் இருக்கும் ஜியோ நிறுவனத்திற்கு எப்படி இண்டர்கனெக்ஷன் பாயின்ட் வழங்க முடியும், இதனால் எங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் எனத் தெரிவித்து ஜியோ கோரிக்கைக்கு முழுமையான மறுப்பு தெரிவித்துள்ளது.

 

இண்டர்கனெக்ஷன் பாயின்ட்

இண்டர்கனெக்ஷன் பாயின்ட்

தன் நெர்வொர்கில் இல்லாத ஒரு வாடிக்கையாளருக்கு தன் நெர்வொர்க் வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தும் இணைப்பு தான் இந்த இண்டர்கனெக்ஷன் பாயின்ட்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வாடிக்கையாளர் கால் செய்யும் போதும் செய்யப்படும் இணைப்பு தான் இண்டர்கனெக்ஷன் பாயின்ட்.

 

சில இடங்கள்

சில இடங்கள்

ஆனால் ஜியோ நெட்வொர்க் (மொபைல் டவர்) வைத்திருக்கும் சில இடங்களுக்கு மட்டும் அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் இண்டர்கனெக்ஷன் பாயின்ட் வழங்கியுள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும் ஜியோ நெட்வொர்க் இருந்தால் டெலிகாம் நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.

 

 

பாதிப்பு

பாதிப்பு

இதனால் புதிதாக இணைந்த ஜியோ வாடிக்கையாளர்கள் பற நெட்வொர்க் வாடிக்கையாளரிடம் தங்களது சேவையைப் பயன்படுத்த போராடி வருகின்றனர்.

இது என்ன புது கதை..?!

இது என்ன புது கதை..?!

இந்திய மக்களை டெலிகாம் நிறுவனங்கள் ஏமாற்றுகிறதா..?இந்திய மக்களை டெலிகாம் நிறுவனங்கள் ஏமாற்றுகிறதா..?

 

 

யுபிஐ செயலி

யுபிஐ செயலி-ஐ பயன்படுத்துவது எப்படி..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Telcos aganist to JIO's request, Huge loss on voice call tsunami

Telcos against to JIO's interconnect points request, Huge loss on JIO customers voice call tsunami. COAI Writes to PMO.- Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X