'ஜியோ' கஸ்டமர்களுக்குச் சேவை மறுப்பு.. '52 கோடி' அழைப்புகளை துண்டித்த ஏர்டெல், ஐடியா, வோடபோன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய டெலிகாம் சந்தையில் புதிதாகக் களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் 52 கோடி வாய்ஸ் கால்-களை ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் துண்டாகத் துண்டித்துள்ளது.

 

இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களின் டெலிகாம் சேவை பயன்படுத்தும் தங்களது நண்பர்கள், உறவினர்களைத் தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாய்ஸ் கால் இணைப்பிற்காக ஜியோ-விடம் கூடுதல் கட்டணங்கள் கோரிய ஏர்டெல் நிறுவனத்திற்கு டிராய் அமைப்பு மறுப்பு தெரிவித்த நிலையில் தற்போது ஏர்டெல், ஐடியா நிறுவனங்கள் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

கால் துண்டிப்பு..

கால் துண்டிப்பு..

இந்தியாவில் முழுமையாக நெட்வொர்க் இல்லாமல் ரிலையன்ஸ் ஜியோ சேவை துவங்கப்பட்டது தவறாக இருந்தாலும், வாடிக்கையாளர்களுக்கு நிலையான மற்றும் முழுமையான சேவையை ஏர்டெல் மற்றும் பிற டெலிகாம் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது கடமை.

ஆனால் லாப கணக்குகளைப் பாரத்து நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் ஜியோ வாடிக்கையாளர்களின் சுமார் 52 கோடி வாய்ஸ் கால்-களைக் கட் செய்துள்ளது. இது முற்றிலும் தவறு.

 

இண்டர்கனெக்ட் பாயின்ட்

இண்டர்கனெக்ட் பாயின்ட்

ஏர்டெல் நிறுவனம் டிராய் அமைப்பின் மறுப்பு மற்றும் கட்டளைக்குப் பின் தனது நெட்வொர்கில் கூடுதல் இண்டர்கனெக்ட் பாயின்ட் அளிக்க ஒப்புக்கொண்ட நிலையில் ஜியோ வாடிக்கையாளர்களிடம் இருந்து சூறாவளி காற்றாக வரும் வாய்ஸ் கால்கள் மூலம் தனது ஏர்டெல் நெட்வொர்க் தரமும், லாபமும் அதிகளவில் பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

ஐடியா
 

ஐடியா

இந்தியாவில் அதிக மொபைல் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்டெல் டிராய் அமைப்பின் கட்டளைக்கு ஒப்புக்கொண்ட நிலையில் தற்போது ஆதித்யா பிர்லா குழுமத்தின் முக்கிய டெலிகாம் நிறுவனமான ஐடியா செல்லூலார் நிறுவனமும் ஜியோ வாடிக்கையாளர் பயன்படும் வகையில் கூடுதல் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

தன் நெர்வொர்கில் இல்லாத ஒரு வாடிக்கையாளருக்குப் பிற நெர்வொர்க் வாடிக்கையாளருக்கு ஏற்படுத்தும் இணைப்பு தான் இந்த இண்டர்கனெக்ஷன் பாயின்ட்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ வாடிக்கையாளர் கால் செய்யும் போதும் செய்யப்படும் இணைப்பு தான் இண்டர்கனெக்ஷன் பாயின்ட். ஜியோவிடம் முழுமையான நெட்வொர்க் இல்லாத காரணத்தால் இரு வழி இணைப்பும் ஏர்டெல் மூலம் செய்யப்படுகிறது.

 

சில இடங்கள்

சில இடங்கள்

ஆனால் ஜியோ நெட்வொர்க் (மொபைல் டவர்) வைத்திருக்கும் சில இடங்களுக்கு மட்டும் அனைத்து டெலிகாம் நிறுவனங்கள் இண்டர்கனெக்ஷன் பாயின்ட் வழங்கியுள்ளது.

அனைத்துப் பகுதிகளிலும் ஜியோ நெட்வொர்க் இருந்தால் டெலிகாம் நிறுவனங்கள் மறுப்பு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இருபக்கமும் பரிமாற்ற முறையில் எவ்விதமான கூடுதல் கட்டணமும் அளிக்க அவசியமில்லை.

 

200க்கு 1

200க்கு 1

ஜியோ சேவை அறிமுகம் செய்யப்பட்டுச் சில வாரங்கள் ஆன நிலையில், டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது, இதனுடன் இண்டர்கனெக்ட் பாயின்ட் அளிப்பதில் 200 வாய்ஸ் கால்களுக்கு 1 காலுக்கு மேல் துண்டிப்பு நிகழக் கூடாது எனவும் கண்டிப்பான கட்டளையை விடுத்துள்ளது.

இதனால் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து நிறுவனங்களுக்கு டிராய் ஆணைக்கு இணங்க நிலையான சேவை அளிக்கும் வகையில் இண்டர்கனெக்ட் பாயின்ட் வழங்க முடிவு செய்துள்ளது.

 

 

துண்டிப்பு உச்சம்

துண்டிப்பு உச்சம்

கடந்த வாரம் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ வின் 100 வாய்ஸ் கால்களுக்கு 75 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 10 நாட்களில் 22 வாய்ஸ் கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடித்தக்கது.

மறுமுனை..

மறுமுனை..

மறுமுனையில் ஜியோ வாடிக்கையாளர்களுக்குப் பிற நெட்வொர்க் வாடிக்கையாளர் சராசரியாக ஒரு மணிநேரத்திற்கு 2 கால் செய்யப்படுவதாக ஆய்வுகள் கூறப்படுகிறது.

இப்படிப் பட்ட வித்தியாசத்தை இந்திய டெலிகாம் துறையில் யாரும் பார்த்திருக்க முடியாது. ஆனால் இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது.

 

விடை கிடைத்தது

விடை கிடைத்தது

இந்த வார இறுதியில் பார்தி ஏர்டெல், வோடபோன் இந்தியா, ஐடியா செல்லூலார் ஆகிய நிறுவனங்கள் ஜியோ இன்போகாம் உடன் முக்கிய ஆலோசனையை நடத்த உள்ளது.

இக்கூட்டத்தில் இண்டர்கனெக்டிங் பாயின்ட் வழங்குதல் மற்றும் கால் டிராப் குறித்த முக்கிய விவாதம் நடைபெற்ற உள்ளதாகத் தெரிகிறது.

 

14 பைசா மறுப்பு..

14 பைசா மறுப்பு..

டிராய் அமைப்பு மூலம் மிகப்பெரிய ஏமாற்றத்தைச் சந்தித்த டெலிகாம் நிறுவனங்கள் ஒரு கால் இணைப்பிற்கு 14 பைசா கூடுதல் கட்டணத்தை ஜியோவிடம் நேரடியாக வலியுறுத்த உள்ளது.

அரசு வைவிட்ட நிலையில் ஜியோவிடம் தங்களது பாதிப்பை நேரடியாக விவரிக்க உள்ளது இந்த மூன்று நிறுவனங்கள்.

 

ஜியோ-வின் தேவை

ஜியோ-வின் தேவை

தற்போதைய நிலையில் இந்தியா முழுவதிலும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகிய 3 நிறுவனங்களிடம் சுமார் 7,000 இண்டர்கனெக்டிங் பாயின்ட் உடனடி தேவையாக ஜியோ முன்வைக்க உள்ளது.

இதனை ஒப்புக்கொண்டதால் ஜியோ கூடுதல் கட்டத்தை அளிக்க முன்வரும் என்பது சந்தை கணிப்புகள். டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கைக்கு முழுமையாக டிராய் மறுத்த நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஜியோ-வின் ஆதிக்கம் அதிகளவில் இருக்கும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Top telcos Airtel, Vodafone, Idea terminates 52 crore voice calls abruptly from Reliance Jio

Top telcos Airtel, Vodafone, Idea terminates 52 crore vioce calls abruptly from Reliance Jio- Tamil Good returns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X