டெல்லி: இந்திய டெலிகாம் சந்தையை புரட்டி போட்ட ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால் சேவையை இணைக்க ஜியோ தங்களுக்கு கூடுதல் கட்டணத்தை வழங்க வேண்டும் என்று ஏர்டெல் போன்ற முன்னணி நிறுவனங்கள் டிராய் அமைப்பிடம் கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு ஏர்டெல் நிறுவனத்திற்கு தான் எதிர்பார்க்காத பதிலடி கொடுத்துள்ளது.
டிராய் அமைப்பு
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் அதிகளவிலான வாய்ஸ் கால் இணைப்பதன் மூலம் தங்களுக்கு அதிகளவிலான நஷ்டம் ஏற்படுகிறது என்பதை மைய கருத்தாக முன்னிறுத்தி டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பிற்கு ஏர்டெல், ஐடியா, வோடாபோன் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தது.
பதில்..
ஏர்டெல் நிறுவன தலைமையிலான முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் கோரிக்கையை ஆய்வு செய்த டிராய் அமைப்பு, அதனை முழுமையாக ரத்து செய்ய முடிவு செய்துள்ளது.
செத்தான் சேகர்..
டிராய் அமைப்பு டெலிகாம் நிறுவனங்களுக்கு மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், கூடிய விரைவில் ரிலையன்ஸ் ஜியோவிற்கு இண்டர்கனெக்டிங் பாயின்ட் வழங்க வேண்டும் என்வும் வாய்ஸ் கால் இணைப்பை அடுத்த சில நாட்களில் முழுமையாக உறுதி செய்ய வேண்டும் எனவும் கட்டளையிட்டுள்ளது.
இந்த கட்டளையின் மூலம் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் நிறுவனங்கள் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.
14 காசு வேண்டும்..
ஏர்டெல் தலைமையிலான டெலிகாம் நிறுவனங்கள் டிராய் அமைப்பிடம் முன்வைத்த கோரிக்கையில் ஏற்கனவே வாய்ஸ் கால் இணைப்பிற்காக ரிலையன்ஸ் ஜியோ செலுத்தி வரும் தொகையை விடவும் கூடுதலாக ஒரு கால்-க்கு 14 காசுகள் வேண்டும் என தெரிவித்துள்ளது.
அப்படி கொடுத்தால் மட்டுமே எங்களது லாபத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றும் ஜியோ வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் சுனாமி போன்ற வாய்ஸ் கால்-களை சமாளிக்க முடியும் எனவும் தனது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மறுப்புக்கு இது தான் காரணம்..
ஒரு நிறுவனத்தில் வாய்ஸ் இணைப்பை மற்றொரு டெலிகாம் நிறுவனம் மறுப்பதற்கு கால் எண்ணிக்கையும், அதன் நேரமும் காரணமாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு காலமும் ஏற்க முடியாது. இதில் எந்த விதமான லாஜிக்கும் இல்லை என்று டிராய் பதிலளித்து கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
பணமும் போச்சு.. மானமும் போச்சு..
ஜியோவின் கவலை
இந்தியா முழுவதும் முழுமையான நெட்வொர்க் இல்லாமல் டெலிகாம் சேவையை விரிவாக்கம் செய்து வரும் ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளர்களின் வாய்ஸ் கால்களை ஏர்டெல், ஐடியா செல்லூலார், வோடாபோன் இணைக்க மறுப்பதால், தனது வாடிக்கையாளர் சேவையில் மிகப்பெரிய தடையை சந்திப்பதாக டிராய் அமைப்பிடம் முறையிட்டுள்ளது.
டிராய் அமைப்பு விதிகள்
கால் டெர்மினேஷன் கட்டணங்கள் அனைத்தும் டிராய் வகுத்த இண்டர்கனெக்ட் பயன்பாட்டு கட்டணங்கள் விதிகள் படி இந்தியாவில் இயங்கி வருகிறது. இதில் எந்தவிதமான மாற்றம் செய்ய வேண்டும் என்றாலும் அதை டிராய் அமைப்பு தான் முடிவு செய்ய வேண்டும்.
பிரதமர் அலுவலகம்
கால் டெர்மினேஷன் கட்டணங்கள் குறித்தும், நிறுவனங்கள் சந்திக்கும் வருவாய் பாதிப்புகள் குறித்தும் டெலிகாம் நிறுவனங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளது.
பிளிப்கார்ட்
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications