ரயில் பயணத்திற்கான இன்சூரன்ஸ் திட்டத்தை மதிக்காத இந்திய மக்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ரயில் பயணிகளுக்கு 92 பைசாவில் ரூ.10 லட்சத்துக்கான இன்சூரன்ஸ் வழங்கும் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியது. இது வரை வெறும் 50 லட்ச ரயில் பயணிகள் மட்டுமே பயணத்திற்கான இன்சூரன்ஸ் திட்டத்தை பயன்படுத்தி உள்ளனர்.

விபத்துகள் ஏற்படும்போது இந்திய ரயில்வே அளிக்க வேண்டிய இழப்பீடு தொகைக்கு பதிலாகச் சரியான டிக்கெட் உள்ளவர்களுக்கு இந்தக் காப்பீட்டை வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் திட்டத்தை பயன்படுத்தியோர்?

இன்சூரன்ஸ் திட்டத்தை பயன்படுத்தியோர்?

செப்டம்பர் 1 ஆம் தேதி அறிமுகப்படுத்திய இந்த ரயில் பயணத்திற்கான இன்சூரன்ஸ் திட்டத்தை வியாழக்கிழமை மதியம் இரண்டு மணி வரை 50,03,834 பேர் பயன்படுத்தி உள்ளனர்.

இணையதள டிக்கெட் புக்கிங்களுக்கு மட்டுமே

இணையதள டிக்கெட் புக்கிங்களுக்கு மட்டுமே

சென்ற ரயில்வே பட்ஜெட் உரையின் போது இத்திட்டத்தைப் பற்றி அறிவித்த ரயில்வே அமைச்ச சுரேஷ் பிரபு இது ட்க்கெட் முக் செய்யும் போது வழங்கப்படும் கூடுதல் சேவையே, தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய முறை புறநகர் ரயில்களில் பயணம் செய்பவர்களைத் தவிர்த்து அனைவருக்கும் யாரெல்லாம் இணையதளம் மூலம் டிக்கெட் பதிவு செய்து சரியான வகுப்பில் பயணம் செய்கிறார்களோ அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு அளிக்கப்படும்

யாருக்கெல்லாம் இந்தக் காப்பீடு அளிக்கப்படும்

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் விளிநாட்டவருக்கு இந்தக் காப்பீடு திட்டம் பொருந்தாது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட், ஆர்ஏசி மற்றும் காத்திருப்பில் உள்ள டிக்கெட்களை வைத்திருப்பவர்களுக்கு இந்தக் காப்பீடு அளிக்கப்படும்.

காப்பீட்டின் பயன்

காப்பீட்டின் பயன்

ரயில் பயணங்களின் போது ஏதேனும் பயங்கரவாத தாக்குதல், வழிப்பறி, கலகத்தை, துப்பாக்கிச் சூடு அல்லது தீ வைப்பு உட்பட அசம்பாவித சம்பவம் ஏற்படும் போது மரணம் அல்லது எழுந்திருக்க முடியாத அளவு ஊனம் ஏற்படும் போது ரூ.10 லட்சமும், உடலின் ஏதேனும் பாகத்திற்கு ஊனம் நேர்ந்தால் ரூ.7.5 லட்சமும், 2 லட்சம் வரை மருத்துவ செலவுகள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் இருந்து செல்ல வேண்டிய இடத்திற்குப் போக்குவரத்து செலவாக ரூ. 10,000 காப்பீடாக வழங்கப்படும்.

மூன்று நிறுவனங்கள் தேர்வு

மூன்று நிறுவனங்கள் தேர்வு

இதற்காக 19 நிறுவனங்களிடம் இருந்து ஏலம் நடத்தி ஸ்ரீராம் ஜெனரல், ராயல் சுந்தரம் மற்றும் ஐசிஐசிஐ லம்பார்ட் என மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்களிடம் ஒரு வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுடைய செயல்பாட்டைப் பொருத்து ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என்றும் கூரப்படுகிறது.

 

கட்டாயம் அல்ல

கட்டாயம் அல்ல

எனினும் இது பயணிகளின் விருப்பத் தேர்வே கட்டாயம் அல்ல என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐஆர்சிடிசி இணையதளம் மூலமாக தற்போது 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ரெட் பஸ்

ரெட் பஸ்

இதேப் போன்று தனியார் ரெட் பஸ் டிக்கெட் நிறுவனமும் பயணிகளுக்கான விருப்ப காப்பிட்டு சேவையை ரூ.10-க்கு வழங்குவது குறிப்பிடத்தக்கது.

டிக்கெட் ரத்து செய்தல்

டிக்கெட் ரத்து செய்தல்

டிக்கெட் ரத்து செய்யும் போது காப்பீட்டிற்கான ப்ரீமியம் கட்டணம் திருப்பி அளிக்கப்படாது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over 50 Lakh Passengers Opt For Train Travel Insurance

Over 50 Lakh Passengers Opt For Train Travel Insurance
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X