கோகோ கோலா, பெப்சி நிறுவனங்களுக்கு 'செக்' வைக்கும் பாபா ராம்தேவ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: உள்நாட்டு தயாரிப்பு பொருட்களைப் பயன்படுத்துங்கள் என்று கூறி வரும் பாபா ராம்தேவும் ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்)-ம் நிதி மற்றும் சுகாதார துறை அமைச்சகங்களிடம் அதிகமான சர்க்கரை பயன்படுத்தும் தயாரிப்புகள் மீது வரியை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது இது குறித்து ஃபர்ஸ்ட்ஸ்பாட் வெளியிட்ட செய்தியின் மொழிபெயர்ப்பை இங்குப் பார்க்கலாம்

 

2017 ஜனவரி மாதம் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் கூட்டத்தில் கடினமான வரியை அமல்படுத்த வேண்டும் என்று பாபா ராம்தேவும், ஆர்எஸ்எஸ்-ம் வலியுறுத்தி உள்ளதாகச் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது இந்தியாவில் செயல்பட்டு வரும் கோகோ கோலா, பெப்சிகோ நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

சின் டாக்ஸ் (Sin Tax) 40 சதவீதம்

சின் டாக்ஸ் (Sin Tax) 40 சதவீதம்

குளிர்பானங்கள், புகை இலை பொருட்கள் மற்றும் சொகுசு கார்கள் போன்ற பொருட்கள் மீது அதிகப்படியான வரியாக சின் டாக்ஸ் (Sin Tax) வரியாக 40 சதவீதம் அமல்படுத்த வேண்டும் ஜிஎஸ்டி குழுவின் தலைமை பொருளாதார ஆலோசகர் (சிஇஏ) அரவிந்த் சுப்பிரமணியன் பரிந்துரைத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது 17 முதல் 18 சதவீதமாக வரலாம் என நினைக்கும் ஜிஎஸ்டியின் விகிதத்தை விட இருமடங்கு அதிக வரியாக உள்ளது.

100 மிலி கோகோ கோலாவில் 10.6 கிராம் சர்க்கரை இருக்கிறது. இது 250 மிலி குளிர் பானத்தில் ஐந்தரை தேக்கரண்டி சர்க்கரையின் அளவாகும்.

அதிக வரி விதிக்க வேண்டும்

அதிக வரி விதிக்க வேண்டும்

பாபா ராம்தேவ் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் கார்பனேற்றிய பானங்கள் மீது அதிக வரி விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர் என்று நிதி அமைச்சகத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை மேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்தின் மறுப்பு
 

பதஞ்சலி நிறுவனத்தின் மறுப்பு

பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் எஸ்கே டிஜரவாலாவிடம் கோகோ கோலா, பெப்சிகோ நிறுவனங்களுக்குப் போட்டியாக ஏதேனும் குளிர்பானங்கள் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறதா என்ற கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளிக்க மருத்துவிட்டார் ஆனால் மேலும் பல மூலிகை பொருட்களை அறிமுகப்படுத்த இருப்பதாக மட்டும் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் போட்டி

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் போட்டி

ஹரித்வாரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பதஞ்சலி நிறுவனம் மூலிகை நுகர்பொருள் தயாரிப்புகளை விற்பனை செய்துவருவது மட்டும் இல்லாமல் இந்தியா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக விலங்குவது குறிப்பிடத்தக்கது.

பாபா ராம்தேவ் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள்

பாபா ராம்தேவ் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள்

இரண்டு அமைச்சகங்களிடமும் பாபா ராம்தேவ் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரதிநிதிகள் கார்பனேற்றிய பானங்கள் மற்றும் அதிகளவு சர்க்கரை பயன்படுத்தப்படுவதினால் மக்களின் ஆரோக்கியம் மிகவும் பாதிப்படைகிறது என்று மட்டும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் இவர்கள் தனித் தனியாக சென்று தங்களது வாதத்தை வைத்தார்களா அல்லது ஒன்றாகச் சென்று அறிவுறுத்தினார்களா என்று தெரியவில்லை.

சர்க்கரை பற்றி ஆய்வு

சர்க்கரை பற்றி ஆய்வு

கடந்த ஆண்டு லண்டனைச் சேர்ந்த நிறுவனம் சர்க்கரை பற்றி ஆய்வு செய்தபோது கோலா பாணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளில் சர்க்கரையின் அளவ இரட்டிப்பகிதை கண்டுபிடுத்துள்ளனர்.

உதாரணத்திற்கு ஃபேண்டா குளிர்பானத்தில் ஐர்லாந்து, அர்ஜெண்டினா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் 6 டீ ஸூபூன் அளவே சர்க்கரை கலக்கப்பட்டி இருந்துள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் இது இரண்டு மடங்காக உள்ளது.

உலக சுகாதர அமைப்பு

உலக சுகாதர அமைப்பு

உலக சுகாதர அமைப்பு 2019-2020-இல் இந்தியாவில் சர்க்கரை பயன்பாடு 29.35 சதவீதத்தை எட்டும் என்றும் இது இப்போது இருப்பதை விட 15 சதவீதம் அதிகம் என்றும், உலகில் சர்க்கரையை அதிகம் பயப்படுத்துவோராக இந்தியர்கள் இருப்பர் என்றும் கூறியுள்ளது.

 கேரளா மாநிலம்

கேரளா மாநிலம்

சென்ற ஜூலை மாதம் கேரளா மாநிலம் பர்கர்கள், பீசாக்கள்,

டோனட்ஸ் மற்றும் டகோஸ் போன்ற கொழுப்பு அதிகமாக உள்ள உணவுகள் மீது 14.5 சதவீதம் கொழுப்பு வரியை விதித்துள்ளது.

இதேப் போன்று 2013 ஆம் ஆண்டு டென்மார்க்கில் வாடிக்கையாளர்கள் கொழுப்பு அதிகம் உள்ள உணவை உட்கொள்ளுகிரார்கள் என்று அறிந்தவுடன் கொழுப்பு வரி விதித்தது குறிப்பிடத்தக்கது.

பதஞ்சலி நிறுவனம்

பதஞ்சலி நிறுவனம்

சென்ற ஏப்ரல் மாதம் பதஞ்சலி நிறுவனம் கோல்கேட், யூனிலிவர் மற்றும் நெஸ்ட்லே போன்ற நிறுவனங்களை முந்திச்செல்லும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போதே கோல்கேட்டின் வர்த்தகம் பதஞ்சலி நிறுவனத்தை விடக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2016-2017-ஆம் நிதி ஆண்டில் 10,000 கோடி லாபம் பெற வேண்டும் என்று பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கோலா நிறுவனங்கள்

கோலா நிறுவனங்கள்

கோலா நிறுவனங்கள் மிகவும் இக்கட்டாக உள்ள நிலையில் இந்தியாவில் தினமும் மக்கல் 15 சதவீதம் வரை தங்களது உணவில் சர்க்கரை பயன்படுத்துகின்றனர். அதில் கோலா நிறுவனங்கள் 2.4 சதவீதம் மட்டுமே பயன்படுத்துகிறோம் என்று சிஇஏ அதிகாரிகளுடன் தெரிவித்துள்ளனர்.

கோகோ கோலா நிறுவனம்

கோகோ கோலா நிறுவனம்

அதுமட்டும் இல்லாமல் 2015 டிசம்பர் மாதம் கோகோ கோலா நிறுவனம் 40 சதவீதமாக வரியை உயர்த்தும் போது எங்களது பல ஆலைகளை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம் என்று தெரிவித்தது. மேலும் இது இந்தியாவில் குளிர்பான நிறுவனங்களை மிகவும் பாதிக்கும் என்றும் கூறியது.

இப்போது அரசு எடுக்க இருக்கும் முடிவை பொறுத்தே கோலா நிறுவனங்கள் சுதேசி தயாரிப்புகளைத் தாக்கு பிடிக்குமா இல்லையா என்று கூற இயலும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Baba Ramdev and RSS lobbying govt to tax Coca Cola PepsiCo heavily

Baba Ramdev and RSS lobbying govt to tax Coca Cola PepsiCo heavily
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X