92 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்த 'ரயில்வே பட்ஜெட்' ரத்து.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1924 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரயில்வே பட்ஜெட் வழக்கம் இன்றோடு வைவிடப்போகிறது. இனி வரும் நிதியாண்டுகளில் மத்திய அரசு, பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைக்க உள்ளது.

 

இப்புதிய மாற்றத்திற்கு நாடாளுமன்றத்தில் முழுமையான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெள்ளையர்கள் விட்டுச்சென்ற மற்றொரு பழக்கத்திற்கும் மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

எதற்காக இந்த முடிவு..?

அருண் ஜேட்லி

அருண் ஜேட்லி

புதன்கிழமை நாடாளுமன்றம் கூட்டம் முடித்த உடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-18ஆம் நிதியாண்டு முதல் பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்படும். இதன் மூலம் இனி மத்திய அரசு ஒன்றை பட்ஜெட் தாக்கல் முறையே நடைமுறைப்படுத்த உள்ளது.

இதனால் ரயில்வே துறை செயல்முறையில் எவ்விதமான மற்றமும் இருக்காது என்பதையும் குறிப்பிட்டார் அருண் ஜேட்லி.

காரணம்

காரணம்

1996ஆம் ஆண்டுக்குப் பின் இந்தியாவில் அமைந்து வரும் தொடர் கூட்டணி ஆட்சியின் பின்னர் மத்திய அரசுகள் தொடர்ந்து பொதுப் பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்-ஐ இணைக்க வலியுறுத்தி வருகிறது.

நாடாளுமன்றத்தில் தனியாகத் தாக்கல் செய்யப்படும் ரயில்வே பட்ஜெட் அறிக்கையின் மூலம் மக்களுக்கு அதிகளவிலான சலுகை மற்றும் நல்ல திட்டங்களை அறிவித்து ஆளும் கட்சிகள் தங்களை மேன்படுத்திக் காட்டிக்கொள்ளப் பயன்படுத்தியது.

பிராந்தியம்
 

பிராந்தியம்

மேலும் ரயில்வே பட்ஜெட் மூலம் கட்சியின் பிராந்தியத்தைச் செல்வாக்கு மற்றும் ஆதிக்கத்தை மேம்படுத்திக்கொள்ள அதிகளவிலான திட்டங்கள் இப்பகுதிகளில் செயல்படுத்தவும் இந்த ரயில்வே பட்ஜெட் அறிக்கையைப் பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

சுரேஷ் பிரபு

சுரேஷ் பிரபு

கடந்த 20 வருடங்களாகத் தொடர்ந்து விவாதம் செய்யப்படும் வரும் இத்திட்டத்தைத் தற்போதைய ரயில்வே துறை சுரேஷ் பிரபு எதிர்கொண்டு, லோக் சபாவில் ஆதிக்கம் பொருந்திய பிஜேபி அரசு தலைமையில் 92 வருடமாகப் புழக்கத்தில் இருந்த ரயில்வே பட்ஜெட் தாக்கலை முழுமையாக ரத்து செய்துள்ளது.

இது தற்போது ஆட்சியில் இருக்கும் பிஜேபி அரசுக்கு மிகவும் சாகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

நிட்டி அயோக்

நிட்டி அயோக்

மோடி தலைமையிலான ஆட்சிக்குப் பின் அமைக்கப்பட்ட நிட்டி அயோக் உறுப்பினர்கள் பிபெக் டிப்ராய் மற்றும் கிஷோர் தேசாய் அவர்களின் பரிந்துரையின் படி ரயில் பட்ஜெட் ரத்துக்குத் துரிதமான முறையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தமாகப் பட்ஜெட் தாக்கலில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீடு மூலம் ரயில்வே துறையை மேம்படுத்தவும் முடியும் என்பதே நிட்டி அயோக் அமைப்பின் கருத்து.

பொதுப் பட்ஜெட்

பொதுப் பட்ஜெட்

மத்திய அரசு வழக்கமாகப் பிப்ரவரி மாதம் கடைசி நாளில் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும், அதன் பின்னர்ப் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதிகளை மே மாத முதல் செலவிடத் துவங்கும் இதுவே இந்திய அரசு காலங்காலமாகப் பயன்பாட்டில் வைத்துள்ளது.

ஜனவரியில் பட்ஜெட் தாக்கல்

ஜனவரியில் பட்ஜெட் தாக்கல்

பிப்ரவரி மாத கடைசி நாள் பட்ஜெட் தாக்கல் முறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு. 2017ஆம் ஆண்டு முதல் ஜனவரி கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் என்ன லாபம்..?

இதன் மூலம் என்ன லாபம்..?

ஜனவரி மாதம் மத்திய பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பட்ஜெட் அமலாக்கத்திற்கான அனைத்துப் பணிகளும் விரைவாக முடிவடைந்துவிட்டால் அரசு நிறுவனங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிதியாண்டின் துவக்கத்தின் முதலே பயன்படுத்த துவங்கலாம்.

தற்போது நடைமுறையில் இருக்கும் முறையில், மே மாதத்தில் தான் அரசு தங்களுக்கான ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறுகிறது. இது நாட்டின் வளர்ச்சியில் தொய்வு ஏற்படுவதாக மத்திய அரசு கருதுகிறது.

ஜனவரி 25

ஜனவரி 25

இத்தகைய சூழ்நிலையில் ஜனவரி 25ஆம் தேதி முதலே பட்ஜெட் கூட்டத்தில் நாடாளுமன்றத்தில் துவக்க மத்திய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.

 அக்டோபர் முதல்..

அக்டோபர் முதல்..

இதற்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால் அக்டோபர் மாதம் துவக்கத்திலேயே பட்ஜெட் பணிகளைத் துவக்க வேண்டும். இதன் முடிவுகள் அனைத்தும் ஜனவரி மாதம் 7ஆம் தேதி முடிக்க வேண்டும் என்பது மத்திய அரசு திட்டம்.

ரயில்வே பட்ஜெட் ரத்துச் செய்யப்பட்ட நிலையில் அடுத்தச் சில நாட்களில் பொதுப் பட்ஜெட் தாக்கல், இதர பணிகளின் துவக்கம் என அனைத்துப் பணிகளுக்கான தேதிகள் முடிவு செய்யப்படும்.

மே மாதம்

மே மாதம்

ஒவ்வொரு நிதியாண்டின் மே மாதத்தின் 2வது வாரத்திற்குள் மத்திய பட்ஜெட் அறிக்கையின் படி நிதி சார்ந்த அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் பெற்றப்படும்.

புதிய நடைமுறையில் இந்தப் பணிகள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதனால் அனைத்து அரசு நிறுவனங்களும் துறைகளும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் (புதிய நிதியாண்டின் துவக்கம்) தங்களுக்கான நிதியைப் பயன்படுத்த முடியும்.

புதிய பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்

புதிய பொருளாதார வளர்ச்சி திட்டங்கள்

மத்திய அரசு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாகப் புதிய பட்ஜெட் தாக்கல் முறை வடிவமைத்துள்ள நிலையில் வளர்ச்சி திட்டங்களின் வெற்றிக்குச் சந்தையில் சிறப்பான சூழ்நிலையை உருவாக்கும்.

மாலை 5 மணிக்கு..

மாலை 5 மணிக்கு..

1999ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயேர் ஆட்சி பாணியில் நாடாளுமன்றத்தில் மாலை 5 மணிக்குப் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடல் பிஹாரி வாஜ்பாய்

அடல் பிஹாரி வாஜ்பாய்

1999ஆம் ஆண்டு முதல் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசே பட்ஜெட் தாக்கல் நேரத்தை மாலை 5 மணியில் இருந்து காலை 11 மணியாக மாற்றியது.

தற்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசு பிப்ரவரி மாதத்தை ஜனவரியாக மாற்றத் திட்டமிட்டுள்ளது.

இந்த மாற்றம் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்குமா..?

சூப்பர் ஐடியா..!

10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

No more railway budget in India.. this is reason behind it?

No more railway budget in India: amalgamation with general budget. what is the reason behind to scrapping the railway budget- Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X