விழாக் கால சலுகையில் கார் வாங்க சிறந்த ‘வாகன கடன்’ வழங்கும் வங்கிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: பெரும்பாலான இந்தியர்கள் விழாக்காலங்களில் சலுகைகள் கிடைக்கும் அதில் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிவிடலாம் என்று எண்ணத்தில் இருப்பர்.

 

அதே போன்று கார், பைக் போன்று வாங்கனங்கல் வாங்கும் போது வாகன கடன் பெறுவதும் உண்டு. கார் லோன் எடுக்கும் போது உங்களது சிபில் ஸ்கோரைப் பொருத்து வட்டி விகிதம் மாறுபடலாம்.

விழாக் கால சலுகையில் கார் வாங்க சிறந்த ‘வாகன கடன்’ வழங்கும் வங்கிகள்..!

இந்த வட்டி விகிதம் எந்த மாதிரியான கார், விலை, புதிய காரா அல்லது பழைய காரா என்பதைப் பொருத்து மாறுபடலாம்.

வாகன கடன் வாங்கும் போது விண்ணப்பத்துடன் வருமான சான்றிதழ், கடைசி மூன்று மாத பே ஸ்லிப்புகள், வருமான வரி ஒப்புதல் சீட்டு, அடையாள மற்றும் முகவரி சான்றிதழ் போன்றவற்றை பான் கார்டுடன் சமர்ப்பித்தல் வேண்டும்.

இப்போது நாம் சிறந்த 'வாகன கடன்' வழங்கும் வங்கிகள் பற்றி இங்குப் பார்ப்போம்.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஒவ்வொரு மாதமும் லட்சத்திற்கு 2,108 முதல் 2,280 ரூபாய் வரை தவணையாக செலுத்த வேண்டியதைப் பொருத்து கார் லோன் திட்டங்களில் வட்டி விகிதம் 9.65% முதல் 13.10 சதவீதம் வரை அளிக்கிறது.

பதிவு, காப்பீடு மற்றும் நீட்டிக்கப்பட்ட வாரண்டி உபரிசாதனங்கள் / வருடாந்தர பராமரிப்பு ஒப்பந்தம் சாலை விலை என அனைத்தையும் கடனாக பெறலாம்.

எச்டிஎஃப்சி

எச்டிஎஃப்சி

எச்டிஎஃப்சி வங்கி கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,093 முதல் 2,314 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 வரையில் அமைத்துள்ளது.

மேலும் லோன் செயல்பாட்டு கட்டணமாக 2,825 முதல் 5,150 ரூபாய் செலுத்த வேண்டும். எச்டிஎஃப்சி வங்கி உங்கள் லோன் தகுதியை 1 நிமிடத்தில் சரிபார்த்து 30 நிமிடத்தில் துரிதமாக கடனை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி
 

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,093 முதல் 2,365 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 வரையில் அமைத்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியைப் போன்று ஐசிஐசிஐ வங்கியிலும் 2,500 முதல் 5,000 ரூபாய் வரை செயல்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டும்.

ஐசிஐசிஐ வங்கி புதிய கார்களுக்கு 100 சதவீத விலையையும் 7 வருட தவணையாகவும், பழைய கார்களுக்கு 80 சதவீத விலை வரை 5 வருடத்திற்கும் கடனாக அளிக்கிறது.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,095 முதல் 2,458 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 சதவீதம் வரையில் அமைத்துள்ளது. எச்டிஎஃப்சி வங்கியைப் போன்று ஆக்ஸிஸ் வங்கியிலும் 3,500 முதல் 5,500 ரூபாய் வரை செயல்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டும்.

கார் லோனிற்கு தகுதி உள்ளவர்கள் மொத்த கார் விலையில் 85% வரை கடனாக 7 வருடத் தவனை வரை பெற இயலும்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி

பஞ்சாப் நேஷ்னல் வங்கி கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,105 முதல் 2,122 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.35 சதவீதம் 13.75 சதவீதம் வரையில் அமைத்துள்ளது. பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் குறைந்தது 1 சதவீதம் முதல் அதிகபட்சம் 6000 ரூபாய் வரை செயல்பாட்டு கட்டணம் செலுத்த வேண்டும்.

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா கார் லோனில் லட்சத்திற்கு மாதாந்திர தவணையை தொகை 2,108 முதல் 2,194 ரூபாய் பொருத்து வட்டி விகிதத்தை 9.65 சதவீதம் 11.40 சதவீதம் வரையில் அமைத்துள்ளது.

கார் லோன் செயல்பாட்டு கட்டணமாக 0.50 சதவீதம் செலுத்த வேண்டும். மேலும் வாகன கடனை 100 லட்சம் ரூபாய் வரை கடனாக பெற இயலும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Best Car Loans With Low Interest Rates To Avail This Festive Season

Most Indians wait to buy a car or any asset during festive season as buying on particular days is considered as auspicious and luring interest rates are offered by many banks and financial institutions. Some banks even tend to waive off processing charges.
Story first published: Monday, September 26, 2016, 14:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X