கிரேடிட் கார்டை 'சரியான முறை'யில் பயன்படுத்துவது எப்படி..?

By Ashok
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சராசரி இந்தியனின் கடனானது (குறிப்பாகக் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்) ஆபத்தான விகிதத்தில் உயர்ந்து கொண்டுள்ளது. சமீபத்திய ஆர்.பி.ஐ. தரவு படி, மே 2016 முடிய கிரெடிட் கார்டு நிலுவை தொகையானது ரூ. 42,100 கோடியாக உள்ளது. இதுவே 2008 நெருக்கடி காலத்தின் போது ரூ. 27,000 கோடியாக இருந்துள்ளது. ஷாப்பிங் செய்வதற்கு இது அதிகமான தொகையே!

 

மேலும் இந்தியாவில் கிரேடிட் கார்டு பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள காரணத்தால் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் என இரண்டுமே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கிரெடிட் கார்டு கடன்

கிரெடிட் கார்டு கடன்

கிரெடிட் கார்டு கடன் என்பது ஆக்கப்பூர்வமற்ற கடன் மற்றும் அது உங்கள் நிதி நிலையின் மீது அழிவை உண்டாக்கி விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும்..?

உங்கள் கார்டில் மிகப்பெரிய கடன் தொகை நிலுவையாக உள்ளதென்றால், மேலும் புதிய பர்சேஸ் செய்வதை உடனே நிறுத்துங்கள். முடிந்த வரை நிலுவை தொகையைச் சீக்கிரமாக அடைப்பதற்கான திட்டத்தைத் தீட்டுங்கள். அது 1-3 மாதங்களுக்குள் இருந்தால் நல்லது.

இப்படிக் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய 9 விஷயங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்:

கிரெடிட் நிலுவை தொகையை நீட்டிக் கொண்டே செல்லாதீர்கள்

கிரெடிட் நிலுவை தொகையை நீட்டிக் கொண்டே செல்லாதீர்கள்

ஒவ்வொரு மாதமும் நிலுவை தொகையில் 5 சதவீதம் மட்டுமே கட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாது.

மாறாக, காலக்கெடு அன்று முழுத் தொகையையும் செலுத்த முயற்சி செய்யுங்கள். நிலுவை தொகையை அடுத்தப் பில் எனக் கடத்திக் கொண்டே சென்றால் 2-4 சதவீதம் வரை மாதாந்திர வட்டி கட்டப்பட வேண்டியிருக்கும்.

நிலுவை தொகையைக் கடத்திக் கொண்டே சென்று, ஒவ்வொரு மாதமும் புதிய பர்சேசையும் செய்து கொண்டே வந்தால், வட்டி பலூன் போல எகிறி விடும். நீங்கள் இந்தக் கடன் வலையில் விழுந்து விடக் கூடாது.

மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு
 

மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாடு

கிரெடிட் கார்டு பர்சேஸிற்கு இலவச வட்டி காலம் உள்ளது. அது 45 நாட்களுக்கும் அதிகமான நாட்கள் வரை செல்லும். இந்தப் பயனை பெற, நிலுவை தொகை எதுவும் இருக்கக்கூடாது. ஒரு தொகையை நீங்கள் அடுத்த மாதத்திற்குக் கடத்தினால், புதிய பர்சேஸிற்கு வட்டியில்லாத காலம் கிடைக்காது.

பலரும் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளைக் கொண்டுள்ளனர். சிலர் 12 கார்டுகள் கூட உபயோகப்படுத்துகிறார்கள். எப்போதுமே கார்டின் 50 சதவீத மொத்த கடன் வரம்பிற்கு மேல் பயன்படுத்தாதீர்கள்.

சிலர் மொபைல் அல்லது மின்னஞ்சல் மூலமாக எச்சரிக்கை செய்யும் படி செய்திருப்பர். அதனால் பர்சேஸ்களைக் கண்காணித்துக் கொள்ளலாம்.

கிரெடிட் புள்ளிகள்

கிரெடிட் புள்ளிகள்

நாட்டில் உள்ள கிரெடிட் பீரோக்களிடம் கிரெடிட் கார்டு பதிவுகள் மற்றும் வரலாறுகளை வங்கிகள் பகிர்ந்து வருகிறது என்பதை மறந்து விடாதீர்கள். அளவுக்கு அதிகமான பயன்பாடு அல்லது சீரற்ற முறையில் திருப்பிச் செலுத்துதல் போன்றவை கிரெடிட் புள்ளிகள் மீது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தி விடும்.

பணம் வித்டிரா செய்வதைத் தவிர்க்கவும்

பணம் வித்டிரா செய்வதைத் தவிர்க்கவும்

உங்கள் கார்டில் பணம் வித்டிரா செய்வது வட்டியில்லா காலத்தில் அடங்காது. இதற்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் பணத்தை எடுத்த நாளில் இருந்து நீங்கள் அதைத் திருப்பிச் செலுத்தும் வரை வட்டி வசூலிக்கப்படும்.

ஈ.எம்.ஐ.-க்கு மாற்றலாம் அல்லது வேறு கணக்கிற்கு மாற்றலாம்

ஈ.எம்.ஐ.-க்கு மாற்றலாம் அல்லது வேறு கணக்கிற்கு மாற்றலாம்

ஏதோ காரணத்தினால் உங்களால் முழுத் தொகையையும் செலுத்தக் முடியவில்லை என்றால், அவற்றை ஈ.எம்.ஐ.-யாக மாற்ற உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் கூறுங்கள். இயல்பு கிரெடிட் கார்டு நிலுவைக்கான வட்டி விகிதத்தை விட இதற்குக் குறைவாகவே வசூலிக்கப்படும். மாற்றிய பிறகு (1 சதவீத செயற்படுத்துதல் கட்டணம் இருக்கலாம்), கார்டு வசூலிக்கும் இயல்பு வட்டி விகிதத்தை விட 18-24 சதவீதம் குறைவாகவே இருக்கும்.

இதற்கு மாற்றாக, நிலுவை தொகையைக் குறைந்த வட்டி விகிதத்திலான வேறு ஒரு கிரெடிட் கார்டுக்கு மாற்றிக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு வைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியம்.

வெகுமதி புள்ளிகளின் உண்மையான மதிப்பு

வெகுமதி புள்ளிகளின் உண்மையான மதிப்பு

வெகுமதி புள்ளிகளைச் சம்பாதிப்பது என்பது கிரெடிட் கார்டு உடைமையாளர்கள் மத்தியில் ஒரு ஆர்வமாகவே மாறி விட்டது. கார்டு வகையைப் பொறுத்து (புதிது, நடுத்தரம் மற்றும் மேல் தட்டு), ஒவ்வொரு பர்சேஸிற்கும் ஒரு கார்டு உடைமையாளர் வெகுமதி புள்ளிகளைப் பெறுவார். உதாரணத்திற்கு, செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 1 புள்ளி கிடைக்கும்.

அதிகமாகச் செலவு செய்தால் அதிகளவில் புள்ளிகளையும் பெறலாம், உதாரணத்திற்கு 2 அல்லது 4 புள்ளிகள். நீங்கள் பெறப்போகும் மதிப்பினாது 1 புள்ளிக்கு 25 முதல் 50 பைசா என்ற எல்லையில் இருக்கும். சில கோ-பிராண்டட் கார்டுகள் இந்தப் புள்ளிகளைப் பெட்ரோல் போட அனுமதிப்பார்கள் அல்லது பில் தொகையை அடைக்க அனுமதிப்பார்கள்.

பரிசுகள் வாங்குவதற்குப் பதிலாக மேற்கூறிய இரண்டில் எதையாவது தேர்ந்தெடுங்கள். கார்ட்டில் புள்ளிகளைச் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் அளவுக்கு அதிகமாகச் செலவு செய்யாதீர்கள்.

ஆட்டோ-டெபிட்

ஆட்டோ-டெபிட்

ஒவ்வொரு மாதமும் முழு நிலுவை தொகையை உங்கள் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும்படி உங்கள் வங்கிக்கு அறிவுறுத்துங்கள். இதனால் உங்கள் கடனை அடுத்த மாதத்திற்கு நீங்கள் கடத்தி செல்ல வேண்டிய அவசியமிருக்காது. வெறும் 5 சதவீதம் மட்டும் காட்டும் மற்றொரு தேர்வும் உள்ளது. ஆனால் நிலுவைத் தொகையை முழுவதுமாகக் காட்டுவதே நல்லது.

ஒவ்வொரு மாதமும் நிலையான ஒரு தொகையையும் கூடக் கட்டி வரலாம்.

கூர்மையான கண்

கூர்மையான கண்

கிரெடிட் கார்டு அறிக்கையில் ஏதேனும் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கூர்ந்து கவனியுங்கள், இல்லையென்றால் அவற்றுக்கும் சேர்த்து நீங்கள் வட்டி கட்ட வேண்டி வரும். காலத் தாமதமாகப் பணம் கட்டுவதால் காலத் தாமதக் கட்டணத்துடன் சேர்த்து வட்டி தொகையையும் கட்ட வேண்டும்.

நீங்கள் செலவு செய்த தொகை நிழலில் சரியாக வருகிறதா என்பதைச் சரிபார்க்கும் வரை பர்சேஸ் செய்த கஸ்டமர் காப்பித் துண்டை வைத்துக் கொள்ளவும். சேமித்த பணம் சேர்த்து வைத்த பணத்திற்குச் சமம் அல்லவா?

செலவு செய்யும் முறை

செலவு செய்யும் முறை

நீங்கள் செலவு செய்யும் முறையைத் தெரிந்து கொள்ள உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கையைப் பகுப்பாய்வு செய்வது முக்கியமாகும். இதனால் செலவுகளை எங்குக் குறைக்கலாம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஆடைக்குச் செலவு செய்வது அல்லது அளவுக்கும் அதிகமாக வெளியே உண்ணுவது போன்றவற்றைக் குறைப்பதால் உங்கள் வீட்டு பட்ஜெட்டும் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தள்ளிப் போடுங்கள்

தள்ளிப் போடுங்கள்

உங்கள் பர்சில் கிரெடிட் கார்டு இருந்தால் இந்த உலகமே ஒரு சந்தையாகி விடும். உணர்ச்சி வசப்பட்ட பர்ச்சேஸ் என்றால், அதனை 2-5 நாட்களுக்குத் தள்ளி போடுங்கள். இது சரியான முடிவை எடுக்க உங்களுக்கு உதவும்.

சர்வதேச பயன்பாடு

சர்வதேச பயன்பாடு

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது விலையுயர்ந்ததாக இருக்கும். பணம் எடுத்துச் செல்ல முடியாத அவசர சூழ்நிலைகளில் மட்டும் இதனைப் பயன்படுத்தவும். ஒவ்வொரு சர்வதேச பரிவர்த்தனைக்கும் கூடுதல் கட்டணம் இருக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Credit Card usage: very important things to keep in mind always

Credit Card usage: very important things to keep in mind always - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X