ரெப்போ விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி.. வீட்டுக் கடன், வாகனக் கடனின் வட்டி விகிதம் குறையும்

By Super Admin
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வெளியேறிய பின் முதல் முறையாக நடக்கும் இருமாத நாணயக் மறுஆய்வுக் கொள்கை என்பதால் வர்த்தகச் சந்தையில் இக்கூட்டம் முக்கியத்துவம் அடைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தின் கணிப்புகளின் படி ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னரான உர்ஜித் பட்டேல் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி விகிதத்தைச் சுமார் 0.25 சதவீதம் குறைந்துள்ளார்.

நாணய கொள்கை அமைப்பு
 

நாணய கொள்கை அமைப்பு

நாட்டின் பணவீக்கத்தை அடிப்படையாகக் கொண்டு வட்டி விகிதத்தைக் குறைக்க மறுத்த ரகுராம் ராஜன் வெளியேறிய காரணத்தால், புதிதாக அமைக்கப்பட்டுள்ள நாணய கொள்கை அமைப்பின் ஆலோசனைப் படி நுகர்வோர் பணவீக்க குறியீட்டை 5 சதவீதம் அளவில் குறைக்க வாய்ப்புகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி நாணய கொள்கை அமைப்பு ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது.

வட்டி விகிதம் குறையும்

வட்டி விகிதம் குறையும்

ரிசர்வ் வங்கி ரெப்போ விகித்தை குறைத்த நிலையில் வணிக வங்கிகளில் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என அனைத்து விதமான கடனுக்கான வட்டி விகிதம் குறைய வாயப்புள்ளது. மேலும் வங்கிகளின் வைப்பு நிதிக்கான வட்டி விகிதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உர்ஜித் பட்டேல்

உர்ஜித் பட்டேல்

ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் செப்டம்பர் மாதம் பதவியேற்றிய பின் பங்குபெறும் முதல் நாணய கொள்கை கூட்டம் இது என்பதால் வர்த்தகச் சந்தை மத்தியில் இக்கூட்டம் மிகமுக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி
 

ரிசர்வ் வங்கி

ஜனவரி 2015ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி சுமார் 1.50 சதவீதம் அளவிலான ரெப்போ விகிதத்தைக் குறைத்துள்ளது. தற்போது அறிவித்துள்ள வட்டி விகித குறைப்பு மூலம் ரெப்போ விகிதம் 6.5 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச ரெப்போ விகிதமாக 6.75 சதவீதமாக இருந்தது.. ஆறு வருடத்தில் இதுவே அதிகம்.

மேலும் ரிசர்வ் வங்கி சிஆர்ஆர், எஸ்எல்ஆர் விகிதத்தை மாற்றவில்லை.

சைபர் செக்கூரிட்டி

சைபர் செக்கூரிட்டி

நாணய மறுஆய்வுக்கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசரவ் வங்கி நாட்டில் நடக்கும் வங்கியியல் மற்றும் நிதி மோசடிகளைத் தடுக்கச் சைபர் செக்கூரிட்டியை மேம்படுத்தவும், பெரிய அளவில் நடக்கும் நிதி மோசடிகளைத் தடுக்கவும் இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்யவும் தனி ஒரு அமைப்பை உருவாக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.

இந்த ரெப்போ விகிதம் குறைப்பால் பணப் புழக்கம், அதிகரிக்கும் என்று நிதிச் செயலாளர் அஷோக் லவாசா தெரிவித்துள்ளார்.

பணவீக்கம்

பணவீக்கம்

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டின் பணவீக்கத்தின் அளவு 5.05 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதற்கு முக்கியக் காரணம் இக்காலகட்டத்தில் இந்தியாவில் உணவுப் பொருட்களின் உற்பத்தி அளவுகள் அதிகமாக இருந்தது.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

ரிசர்வ் வங்கியின் இந்த வட்டி குறைப்பின் மூலம் இந்தியாவில் அன்னிய முதலீட்டு அளவுகள் அதிகரிப்பது மட்டும் அல்லாமல் வர்த்தகச் சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.

உற்பத்தித் துறை

உற்பத்தித் துறை

செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிற்கு அதிகளவிலான ஆர்டர்கள் மற்றும் விற்பனை அளவு அதிமாக இருந்த காரணத்தால் இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி சிறப்பான நிலையில் இருந்தது. தற்போது ரிசர்வ் வங்கி செய்திருக்கும் இந்த வட்டி குறைப்பின் காரணமாக நாட்டில் வர்த்தக மற்றும் தொழிற்துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் தெரிகிறது.

அதிபர் தேர்தல்

அதிபர் தேர்தல்

மேலும் அடுத்த மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அமெரிக்கப் பங்குச்சந்தை மற்றும் வர்த்தகச் சந்தை கணிசமாகப் பாதிக்கப்படும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய சந்தை அன்னிய முதலீட்டை அதிகளவில் கவரும். தற்போது வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள காரணத்தால் நாளை முதலே அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் இந்திய சந்தையில் முதலீடு செய்யத் துவங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி

வளர்ச்சி

தற்போது இருக்கும் சூழ்நிலையில் வட்டி விகித குறைப்பு இந்திய சந்தைக்கு மிகவும் தாகமானதாகப் பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் எனக் கணிப்புகள் வெளிவந்துள்ளது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை எதிராலியாக இன்று காலை வர்த்தகத் துவக்கம் முதல் மும்பை பங்குச்சந்தை பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும், தொடர்ந்து லாபகரமான நிலையிலேயே வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.

ரெப்போ விகிதம் குறைந்ததை அடுத்துச் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 91.26 புள்ளிகள் உயர்ந்துள்ளது. நிஃப்டி குறியீடு 31.05 புள்ளிகள் உயர்ந்து 8,769.15 புள்ளிகளை அடைந்தது.

வாசகர் ஸ்பெஷல்

வாசகர் ஸ்பெஷல்

ரெப்போ விகிதம் குறைத்ததால் உங்கள் வீட்டுக் கடனில் எவ்வளவு சேமிக்க முடியும்..?

கழுத்தை நெரிக்கும் அளவிற்கு 'கடன்'.. பொருளாதாரத்தில் ஊசலாடும் 10 நாடுகள்..!

வாரிசு கைகளுக்கு மாறும் சாம்ராஜியம்..!

ஐடி நிறுவனங்களில் அதிகப்படியான சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சாட்டைக்கு பயந்து சொத்துக்களை விற்கும் வர்த்தக சாம்ராஜியங்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Repo rate cuts 25bps to 6.25% sensex gains

Repo rate cuts 25bs to 6.25% sensex gains
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X