சாமானிய மக்களுக்கு ரகுராம் ராஜன் என்ன செய்தார்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன், வங்கிகளைச் சீரமைப்பதற்கான மேக்ரோ நடவடிக்கைகளை எடுத்ததற்காக மட்டும் தலைப்புச் செய்திகளில் அடிபடவில்லை.

அவருடைய பதவிக் காலத்தில் பாமர மக்களான வங்கிகளின் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தார்.

அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுதல்

அழுக்கடைந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளுதல்

இந்தியா பொருளாதாரம் இன்னமும் பெருமளவுக்கு ரொக்கப் பணப் பரிவர்த்தனையின் மூலம் இயங்கி வருகின்றது. எனவே இந்தியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் ஒரு மிகப் பெரிய சவால்களில் ஒன்று சிதைந்த ரூபாய் நோட்டுக்கள் ஆகும்.

இந்திய ரிசர்வ் வங்கியானது, ஒரு நபர் இப்போது எந்த ஒரு வங்கிக் கிளைக்குச் சென்று நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ .5,000 மதிப்பு உடைய 20 அழுக்கடைந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது. இந்தச் சேவை முற்றிலும் இலவசமாகும்.

 

வருடத்திற்கு ஒரு முறை இலவச கடன் அறிக்கை

வருடத்திற்கு ஒரு முறை இலவச கடன் அறிக்கை

ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை இலவசமாக அவருடைய கிரெடிட் ஸ்கோரை தெரிந்து கொள்ளும் உரிமையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி, கடன் தகவல் நிறுவனங்கள் (சிஐசி) தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு ஒரு முறை முழுக் கடன் அறிக்கையை மின்னணு வடிவத்தில் கட்டாயமாக அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

 

 

மின்னணு மோசடிகளில் நுகர்வோருக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பு

மின்னணு மோசடிகளில் நுகர்வோருக்கு வரையறுக்கப்பட்ட பொறுப்பு

ஆன்லைன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, மின்னணு மோசடிகளின் பரிமானமும் அதிகரித்துள்ளது.

அதிகாரமற்ற பரிவர்த்தனைகளைப் பற்றிக் கவலை அடையும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க, ரிசர்வ் வங்கியானது வாடிக்கையாளர்கள் எந்த ஒரு ஆன்லைன் மோசடி வழக்கிலும் அவர்களுக்கு முழுப் பொறுப்புக் கிடையாது எனத் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மோசடிகள் பற்றி மூன்று நாட்களுக்குள் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் தெரிவித்தால் அந்த வாடிக்கையாளருக்கு அந்த மோசடியில் முழுப் பொறுப்புக் கிடையாது. அதே சமயம் ஒரு வாடிக்கையாளர் ஆன்லைன் மோசடியைப் பற்றி மூன்று முதல் ஏழு நாட்களுக்குள் வங்கிக்குத் தகவல் தெரிவித்தால், வங்கிகளின் மோசடிப் பொறுப்பு ரூ .5,000 மட்டுமே.

 

 சேமிப்பு கணக்கிற்கு அபராத வட்டி கிடையாது

சேமிப்பு கணக்கிற்கு அபராத வட்டி கிடையாது

வங்கிகள் குறைந்தபட்ச சமநிலையைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களை இனி மேலும் கசக்கி பிழிய முடியாது. ஏனெனில் ரிசர்வ் வங்கியானது, வங்கிகள் சேமிப்பு கணக்கிற்கு அபராத வட்டி வசூலிக்கக் கூடாது என அறிவித்துள்ளது.

ஒரு வாடிக்கையாளரின் சேமிப்புக் கணக்கில் உள்ள நிலுவைத் தொகை நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச தொகைக்குக் கீழ் சென்றால், வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். மேலும் அந்த வங்கிகள் வாடிக்கையாளருக்குக் குறைந்த பட்ச நிலுவைத் தொகையை மீட்டெடுக்க ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்க வேண்டும்.

மிக முக்கியமாக, சேமிப்பு கணக்கின் நிலுவைத் தொகை, அபராத கட்டணம் வசூலிப்பதன் மூலம் எதிர்மறையாக இருக்கக் கூடாது. அபராத கட்டணம் ஏதேனும் விதிக்கப்பட்டால் அந்த அபராதத் தொகையானது பற்றாக்குறை அளவிற்கு நேர் விகிதத்தில் இருக்க வேண்டும்.

 

அட்டைகள் மூலமான பரிவர்த்தனை மீதான மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்

அட்டைகள் மூலமான பரிவர்த்தனை மீதான மோசடிகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்

அட்டைத் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, ரிசர்வ் வங்கியானது சிப் அடிப்படையிலான மற்றும் பின்-செயல்படுத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடித் அட்டைகளை வெளியிட வேண்டும் என வங்கிகளுக்குக் கட்டாய உதிரவிட்டுள்ளது.

இது கார்டுகளைத் தேய்ப்புச் சம்பந்தப்பட்ட அபாயங்களை நீக்குவதுடன், திருடப்பட்ட அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கின்றது.

ரிசர்வ் வங்கி அட்டைகளுக்கான பாதுகாப்பை அதிகப்படுத்தினாலும், அது புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கத்தை அளிக்கத் தவறுவதில்லை. அது ரூ .2,000 கீழே குறைந்த-மதிப்பு உடையப் பரிவர்த்தனைகளுக்கான இரு-காரணி அங்கீகாரத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.

இது NFC- செயல்படுத்தப்பட்ட அட்டைகள் மற்றும் ஏற்பு சாதனங்களைப் பெரும் முதலீட்டில் வாங்குவதற்கு வங்கிகளைத் தூண்டியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Raghuram Rajan did to protect customers like you and me

What Raghuram Rajan did to protect customers like you and me - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X