ஆன்லைன் பேஷனில் என் இவங்கல்லாம் ஆர்வமா இருக்காங்க?

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜபாங் போன்ற நிறுவனங்கள் தங்களது தளத்தில் உள்ள போருட்களை வாங்க ஆட்களைப் படாத பாடுபட்டுத் தேடிவரும் நிலையில் தலையை பிய்த்துக்கொண்டிருந்தாலும் சில முதலீட்டாளர்கள் ஆன்லைன் பேஷன் வர்த்தகத்திற்குத் தொடர்ந்து ஆதரவு அளித்த வண்ணம் உள்ளனர்.

 

இது போன்ற வர்த்தகத்தில் ஆர்வம் காட்ட துடிப்புடன் இருக்கும் தொழில் முனைவோரைப் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

அங்கித் பஜாஜ் மற்றும் மேஹாக் சூரி

அங்கித் பஜாஜ் மற்றும் மேஹாக் சூரி

விவரம் : நிறுவனர்கள் - ஷாப்வதி - இது ஒரு சமூக பேஷன் கண்டுபிடிப்புத் தளம் (டிஸ்கவரி பிளாட்பார்ம்) - துவக்கம் செப்டம்பர் 2015.

தனிச் சிறப்பு என்ன? ரகசிய மூலதனத்தை இந்த வருடம் ஜூன் மாதத்தில் பெற்றது.

இலாபத்திற்காக அறிகுறிகள் : 60000 உபயோகிப்பாளர்கள், 1000 வடிவமைப்பாளர்கள் மற்றும் 2 லட்சம் மாதாந்திர பரிவர்த்தனைகள்

வடிவமைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை இதில் வெளியிடுவதன் மூலம் கிடைக்கும் சந்தாவில் இயங்குகிறது.

அங்கித் பஜாஜ் தரும் குறிப்பு? "ஆர்வம் மற்றும் கண்டுபிடிப்பு ஆகிய இரண்டும்தான் இந்த ஆன்லைன் வர்த்தகத்தின் மந்திரச் சொற்கள் "

 

பாவிக் ஜாவேரி

பாவிக் ஜாவேரி

விவரம்: ப்ரேட்டர் (Pretr) - இது ஒரு தனிப்பட்ட பேஷன் சந்தை - துவக்கம் : பிப்ரவரி 2016

தனிச் சிறப்பு என்ன : குறைந்த முதலீடு என்பதால் முதலீட்டாளர்கள் ஆர்வம்

மும்பையில் நூற்றுக்கும் அதிகமான பிராண்டுகள், நான்கு பெரும் கடைகள் மற்றும் இரண்டு மால்கள்

ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் 20 சதவிகித கமிஷனைப் பெற்றுக் கொள்ளும்.

இவர் என்ன சொல்கிறார்? "ஆன்லைனில் மட்டுமே நாம் செய்யமுடியாது. உலகில் மற்ற சந்தையையும் இணைக்க வேண்டும்.

 

அவினாஷ் சக்சேனா
 

அவினாஷ் சக்சேனா

விவரம் : ரோபோஸ்க்கோ பேஷன் சமூக வலைத்தளம், துவக்கம் 2014

தனிச் சிறப்பு : 21 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது கடைசியாக இந்த வருடம் ஏப்ரல் மாதம்.

30 லட்சம் தொடர்ச்சியான உபயோகிப்பாளர்கள், 30 லத்தச்சத்திற்கும் அதிகமான ஆப் பதிவிறக்கம் மற்றும் மாதத்திற்கு 2 லட்சம் பதிவுகள் தேவையான வருமானத்தை கமிஷன் மற்றும் விளம்பரம் மூலம் ஈட்டுவது இதன் சிறப்பு.

இவருடைய குறிப்பு: "எங்களுடைய வர்த்தக சூழல் மற்ற இணைய வர்த்தகத்திலிருந்து மாறுபட்டது. பேஷனை முழுமூச்சாகக் கொண்டது எங்கள் நெட்ஒர்க்" என்கிறார் இவர்

 

அமித் பரத்வாஜ்

அமித் பரத்வாஜ்

விவரம் : 6digiree எனப்படும் பேஷன் மற்றும் தொழில் நுட்ப தொழில் முயற்சியின் நிறுவனர் - தொடக்கம் ஜூலை 2015

தனிச் சிறப்பு? 2 லட்சம் டாலர் முதலீட்டை இந்தியன் ஏஞ்சல் நெட்ஒர்க் இடமிருந்து கடந்த ஜூன் மாதத்தில் பெற்றது

3000 வடிவமைப்பு நிறுவனர்கள் கொண்டு வருவாய் பகிர்வு முறையில் பணிபுரிகிறது.

குறிப்பு : "முதலீட்டாளர்களின் முதலீட்டின் மீதான வருவாயினை ஏடுகளில் அல்லாமல் உண்மையான பணத்தைக் கொண்டு நிரூபிக்கவேண்டும்" என்கிறார் இவர்.

 

சுஜாயாத் அலி

சுஜாயாத் அலி

விவரம் : வூனிக் நிறுவன இணை நிறுவனர் - இது ஒரு பெஷன் பொருட்களை வாங்கும் ஆப், துவக்கம் 2013 மார்ச்.

தனிச் சிறப்பு : 27 Millan டாலர் முதலீடுகளைப் பெற்றது

அண்மையில் கடந்த ஜூன் மாதம் 20 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றது கூடுதல் சிறப்பு.

ஒரு கோடி ஆப் பதிவிறக்கம் மற்றும் ஒரு நாளைக்கு 30000 சரக்கு அனுப்புதல்கள் (ஷிப்மென்ட்)

விற்பனையாளர்களிடம் இருந்து 20 சதவிகிதம் கமிஷன்

என்ன சொல்கிறார் ? "ஆன்லைன் பேஷன் வெற்றியாளர்கள் மட்டுமே புழங்கும் இடமல்ல. மாறாக அது முதலீட்டாளர்களை ஈர்க்கும் இடமாகவும் உள்ளது" என்கிறார் சுஜாயாத்.

 

ஆகாஷ் ஆனந்த் மற்றும் ராகுல் ஆனந்த்

ஆகாஷ் ஆனந்த் மற்றும் ராகுல் ஆனந்த்

விவரம் : விட்டிபே எனப்படும் பேஷன் வர்த்தகத்தின் நிறுவனர்கள், துவக்கம் 2016 மே மாதம்.

தனிச் சிறப்பு என்ன? ஜூன் மாதத்தில் ரகசிய முதலீடு ஒன்றைப் பெற்றது.

அனைத்து டிசைன்களையும் ஆஸ்திரேலியாவில் இருந்து தருவிக்கிறது. தினமும் 150 முதல் 200 பரிவர்த்தனைகள் நடப்பதாகத் தெரிவிக்கிறது.

குறிப்பு : "ஜபாங்கின் தோல்வி நிர்வாகத் தவறுகளினாலும் உயர் அதிகாரிகளின் கசப்புணர்வாலும் ஏற்பட்ட ஒன்று" என்கிறார் ராகுல்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Entrepreneurs who are bullish about online fashion

Entrepreneurs who are bullish about online fashion
Story first published: Thursday, October 13, 2016, 16:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X