கார்பரேட் நிறுவனத்தில் பிங்க் ஸ்லிப் என்ற வார்த்தையை கேட்டாலே போதும் பலருக்கு கை, கால் உதரும்.. அப்படி 2016ஆம் ஆண்டில் பிங்க் ஸ்லிப்ஸ் கொடுத்து ஊழியர்களை மிரள வைத்த நிறுவனங்கள் எது..?
கார்ப்ரேட், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எனப் போட்டி போட்டுக் கொண்டு 2016 ஆம் ஆண்டு தங்களது ஊழியர்களை பணியில் இருந்து வெளியேற்றினர்.
அதில் பிங்க் ஸ்லிப்கள் அளித்து ஊழியர்களை மிரள வைத்த சில நிறுவனங்களின் பட்டியலை இங்குப் பார்ப்போம்
குவிக்கர்
காமன் ஃப்லோர் நிறுவனத்தை ஜனவரி மாதம் வாங்கிய குவிக்கர் நிறுவனம் மார்ச் மாதம் 150 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்களை அளித்தது.
பிளிப்கார்ட்
இந்தியாவின் நம்பர் 1 இணையதள ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் ஜபாங் நிறுவனத்தை வாங்கியதைத் தொடர்ந்து 1,000 சென்ற ஜூலை மாதம் 1,000 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்களை அளித்தது.
டிவிட்டர்
சமுக வலைத்தள நிறுவனமான டிவிட்டர் பெங்களூரில் செயல்பட்டு வரும் தங்களது அலுவலகத்தில் இஞ்சினியரிங் பிரிவில் மட்டும் செப்டம்பர் மாதம் 20 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப்பினை அளித்தது.
ஓலா
டாக்ஸ் ஃபார் ஷூர் நிறுவனத்தைச் சென்ற ஆண்டு வாங்கிய ஓலா நிறுவனம் அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவரும் ஓலா செயலிக்கு மாறியதை அடுத்து 700 ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் பிங்க் ஸ்லிப்பினை அளித்தது.
க்ரோஃபர்ஸ்
இணையதளம் மூலம் நுகர்பொருட்கள் விற்பனை செய்யும் க்ரோஃபர்ஸ் நிறுவனம் 150-முதல் 200 ஊழியர்களுக்கு செப்டம்பர் மாதம் பிங்க் ஸ்லிப் அளித்த பிறகு புதிதாக 67 பேரை வேலைக்கு எடுத்துள்ளது.
சிஸ்கோ
உலகளவில் 14,000 ஊழியர்களும், இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு பிரிவில் மட்டும் 7,000 இஞ்சினியர்களுக்கும் சிஸ்கோ பிங்க் ஸ்லிப்பினை அளித்துள்ளது.
ஆஸ்க்மீ
இகாமர்ஸ் ஷாப்பிங் நிறுவனமான ஆஸ்க்மீ தனது நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளரான அஸ்ட்ரோ ஹோல்டின்ஸ் விலகியதைத் தொடர்ந்து 4000 ஊழியர்களுக்கு பிங்க் ஸ்லிப் அளித்தது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications