'சைரஸ் மிஸ்ட்ரி' ஏன் வெளியேற்றப்பட்டார்? டாடா நிறுவனத்திற்கு இவரது பணியில் திருப்தியா? அதிருப்தியா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டாடா குழுமத்தில் சைரஸ் மிஸ்ட்ரியின் பணிக்கலாம் இவ்வளவு குறைந்த நாட்களில் முடிந்துவிடும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.

 

டாடா போன்ற நிறுவனத்தை மிஸ்ட்ரிக்கு புரிந்து கொள்ள நிறையக் காலம் தேவைப்பட்டு இருக்கலாம்.

எனினும், இங்கு நாம் சைரஸ் மிஸ்ட்ரி வெளியேற்றப்பட என்னவெல்லாம் காரணமாக இருக்கும் என்று இங்குப் பார்ப்போம். டாடா நிறுவனம் இவர் நீண்ட காலத்திற்கு பயன்பட மாட்டார் என்று வெளியேற்றியதற்கான காரணம் என்ன? நிறுவனத்திற்கு இவரது பணியில் திருப்தியா..? அதிருப்தியா..?

வெல்ஸ்பன் நிறுவனம் கையகப்படுத்தியது

வெல்ஸ்பன் நிறுவனம் கையகப்படுத்தியது

இரண்டு மாதங்களுக்கு முன்பு வெல்ஸ்பன் சூரிய மின்சக்தி நிறுவனத்தை டாடா நிறுவனத்திற்காக மிஸ்ட்ரி கையகப்படுத்தினார். ஆனால் இதற்கான டாடா நிறுவனத்தின் முக்கிய தலைவர்கள் மற்றும் முதன்மை பங்குதாரர்களிடம் இருந்து முறையான அனுமதிகளைப் பெறாமல் இதை செய்தார்.

இதனால் பங்கு நிறுவனங்கள் இவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்தனர்.

நிர்வாக சீர் அமைப்பு

நிர்வாக சீர் அமைப்பு

டாடா நிறுவனத்தில் முக்கிய பொறுப்பை மிஸ்ட்ரி பெற்றது முதல் இந்தியன் ஹோட்டல் மேணேஜ்மெண்ட் நிறுவன தலைவரான ரேமண்ட் பிக்சன் 2014 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டர். பின்னர் ரேனம்ண்டிற்கு அடுத்தபடியாக அந்த பொறுப்பை ஏற்ற ஹயாத் வெட்ரன் ராகேஷ் சர்னா மீது குறை கூறி கொண்டே இருந்துள்ளார்.

திறன் மிக்கவர்களை வேலைக்கு எடுப்பதில் இவர் நாட்டம் காட்டியதில்லை. இவர் முக்கிய பணிகளுக்கு எடுத்த பலரில் ஒருவர் கூடு சொல்லிக் கூடிய அளவுக்குப் பணியில் சிறக்கவில்லை.

குறிக்கோள் இல்லை
 

குறிக்கோள் இல்லை

டாடா நிறுவனத்திற்கும் இவருக்கும் இடையே அடிப்படியிலேயே சரியான புரிதல் இல்லாமல் இருந்துள்ளது.

நெடுந்தூர குறிக்கோள் ஏதும் இல்லாமல் நிறுவனத்தின் குறிக்கோள், நெறிக்கு, மதிப்புகள் மற்றும் பாதை என எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருந்து வந்துள்ளார்.

மிஸ்ட்ரியிடம் நிறுவனத்தின் குறிக்கோள், ஐந்து வருடத் திட்டம் போன்று எழுத்துப்பூர்வமான கேள்வி கேட்ட போது இவர் அளித்த பதில்கள் தெளிவற்றும், குறிப்பிடும்படியாக ஏதும் இல்லை.

கடுமையான முடிவுகள்

கடுமையான முடிவுகள்

இந்தியன் ஹோட்டல் நிறுவனத்தின் வெளிநாட்டுச் சொத்துக்கள் சிலவற்றை விற்பனை செய்தது மற்றும் இங்கிலாந்தில் உள்ள ஸ்டீல் நிறுவனத்தை மூடியது.

ஸ்டீல் மற்றும் ஹோட்டல் வணிகத்தை மீண்டும் நல்ல நிலைமைக்குக் கொண்டு வராமல் விற்பனை செய்ததால் டாடா குழுமம் பெறும் ஏமாற்றம் அடைந்தது.

அதே போன்று டாடா டோகோமோ நிறுவனத்தினால் 1.2 பில்லியன் டாலர் கட்டவேண்டிய சூழலுக்கும் டாடா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

ஐரிஷ் குடியுரிமையை விட்டுக் கொடுக்க மறுப்பு

ஐரிஷ் குடியுரிமையை விட்டுக் கொடுக்க மறுப்பு

டாடா குழுமத்தின் ஐரிஷ் குடியுரிமையை விட்டுக் கொடுக்க மறுத்தது மற்றும் தனது தந்தை நிறுவனமான ஷபூர்ஜி பல்லோஞ்சி குழுமத்திற்கு டாடா நிறுவனத்தின் பல பணிகளை அவுட்சோர்ஸ் செய்தது போன்றவையும் இந்தச் சிக்கலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What went wrong and why Cyrus Mistry was shown the door?

What went wrong and why Cyrus Mistry was shown the door?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X