டாடாவின் சைரஸ் மிஸ்ட்ரியை போன்று சர்ச்சைக்குரிய வழிகள் வெளியேறிய 5 பிரபல வணிக தலைவர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: டாடா நிறுவனத்தில் இருந்து சைரஸ் மிஸ்ட்ரியை வெளியேற்றியது இந்திய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் உலகளவில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

 

சைரஸ் மிஸ்ட்ரி, டாடா

சைரஸ் மிஸ்ட்ரி, டாடா

சைரஸ் மிஸ்ட்ரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியதற்குப் பெரிதாக காரணம் ஏதும் இல்லை என்றாலும் இவரது செயல்பாடுகளில் நிர்வாகம் திருப்தி அடையவில்லை என்பது மட்டும் உன்மை. அதிலும் முக்கியமாக அதிக லாபம் இல்லாத வணிகங்களை முன்னேற்ற முயலாமல் விற்றது மற்றும் இழுத்து மூடியது என்றும் கூரலாம்.

இது போன்ற நிகழ்வு இப்போது தான் முதல் முறையா என்றால் அதுதான் இல்லை. உலகளவில் இது போன்ற பெறும் பதவியில் வகித்த பலருக்கு இது போன்று நடந்துள்ளது.

உங்களுக்காக நாங்கள் அந்தப் பாட்டியலில் இருந்து டாடாவின் சைரஸ் மிஸ்ட்ரியை போன்று சர்ச்சைக்குரிய வழிகள் வெளியேறிய 5 பிரபல வணிக தலைவர்கள் பற்றி இங்குப் பார்ப்போம்.

மார்ட்டின் வின்டர்காம், வோக்ஸ்வாகன்

மார்ட்டின் வின்டர்காம், வோக்ஸ்வாகன்

ஜெர்மனியைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலகின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைவரான மார்ட்டின் வின்டர்காம் அமெரிக்காவில் விற்கப்பட்ட தனது வாகனங்களில் விதியை மீறி அதிக மாசு ஏற்படுத்தக் கூடிய இயந்திரங்களைப் பொருத்தி விற்பனை செய்ததை சில மென்பொருள் பயன்படுத்தி ஏமாற்றி விற்பனை செய்திருந்தனர்.

இதனைச் சோதனை அடிப்படியில் கண்டறிந்த அமெரிக்க மாசு கட்டுப்பாடு வாரியம் வோக்ஸ்வாகன் நிறுவனத்திடம் பெறும் தொகையை இழப்பாகக் கேட்டது. இதற்குப் பொறுப்பேற்ற மார்ட்டின் வின்டர்காம் தானாகவே ராஜினாமா செய்து வெளியேறினார்.

பெர்னார்ட் எபர்ஸ், வேர்ல்காம்
 

பெர்னார்ட் எபர்ஸ், வேர்ல்காம்

2000 ஆம் ஆண்டு வேர்ல்காம் என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தைத் துவங்கிய பெர்னார்ட் எபர்ஸ் இவருடைய சொத்து மதிப்பாக 1 பில்லியன் டாலர் எனக் குறிப்பிட்டு இருந்தார்.

ஆனால் 2002 ஆண்டு நடப்பெற்ற ஒரு விசாரணையில் வேர்ல்காம் நிறுவனம் கணக்கு வழக்குகளில் பெறும் ஊழல் செய்து 11 பில்லியன் டாலர் ஏமாறி இருப்பது கண்டறியப்பட்டது.

2005 ஆம் ஆண்டு இந்த ஊழல் உறுதி செய்வதற்கு முன்பு தொலைத் தொடர்பு துறையின் முடி சூடா மன்னனாக இவர் திகழ்ந்தார்.

சஞ்சய் குமார், கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்

சஞ்சய் குமார், கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ்

கொழுமபுவை சேர்ந்த சஞ்சய் குமார் 1987 ஆம் ஆண்டு கம்ப்யூட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தில் சேர்ந்ததில் இருந்து மேக வேகமாக வளர்ச்சி பெற்று 1994 ம் ஆண்டு 31 வயதில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பை ஏற்றார்.

பத்து வருடம் தொடர்ந்து இந்தப் பதவியில் இருந்த இவர் 2004 ஆம் ஆண்டு பத்திர மோசடி வழக்கில் சிக்கி 2006 ஆ ஆண்டு உறுதி செய்யப்பட்டு மியாமியில் உள்ள ஃபெடரல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் ஜனவரி 2017 விடுதலை ஆகிறார்.

ராமலிங்க ராஜூ, சத்யம் கம்ப்யூட்டர்

ராமலிங்க ராஜூ, சத்யம் கம்ப்யூட்டர்

ஓஹியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர் 1987 ஆம் ஆண்டு சத்தியம் நிறுவனத்தைத் துவங்கினார். பின்னர் இந்தியாவின் நான்காம் மிகப் பெரிய மென்பொருள் சேவை வழங்கும் நிலைக்கு வந்தார்.

2009 ஆ ஆண்டு இவர் பல ஆண்டுகளாகத் தனது வருமானத்தை உயர்த்திக் காட்டி அதாவது 1.5 பில்லியன் சொத்து மதிப்பை 71.36 பில்லியனாக காட்டிப் பல சொத்துகளைத் தவறாக பயன்படுத்தி, அரசை ஏமாற்றியதனால் நிறுவனத்தின் மொத்த சொத்துக்களும் முடக்கப்பட்டதுடன் 7 வருடம் சிறை தண்டன் பெற்றார்.

ஜான் பிரவுன், பிபி(BP)

ஜான் பிரவுன், பிபி(BP)

பிரிட்டிஷ் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஜான் பிரவுன் பணியாற்றிய காலம் நிறுவனத்திற்குப் பொன்னான காலம் என்று கூறலாம்.

அமோகோ நிறுவனத்துடன் இணைந்தது, ரஷியன் எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து டிஎன்கே-பிபி போன்றவற்றை துவங்கியது எனப் பல முன்னேற்றங்களுக்கு உதவினார்.

ஆனால் 2007 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் தனக்கு ஜெஃப் செவாலியர் என்ற ஒருவருடன் உறவு உள்ளது என்றும் நாங்கள் இருவரும் காலையில் ஜாக்கிங் செல்லும் போது முதன் முதலில் சந்தித்ததாகவும் அப்படியே இவர்களது உறவு நீடிக்கத் துவங்கியதாகவும் பொய் கூறியிருந்தார்.

அதுவே பின்னர் இவர்கள் இருவரும் ஒரு எஸ்கார்ட் ஏஜென்சி முலம் தான் முதன் முதலில் சந்தித்தனர் என்று த்ரிய வரும் போது ராஜிநாமா செய்து வெளியேறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Business leaders who had controversial exits in the world like Tata's Cyrus Mistry

Business leaders who had controversial exits in the world like Tata's Cyrus Mistry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X