இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், இதனால் மக்கள் ஒவ்வொரு பணப் பிரிமாற்றத்தின் போது கவனமாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது.

3ஆம் தரப்பு நிறுவனங்கள்
கடந்த சில வாரங்களாக, வங்கிகள் தங்களது ஏடிஎம்களில் பணத்தை நிரப்புவதற்காகப் பல 3ஆம் தரப்பு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது. இவர்களின் வாயிலாக ஏடிஎம்களில் போலி அல்லது கள்ள நோட்டுகள் புழக்கத்திற்குள் வந்துள்ளதை கண்டுப்பிடிக்கப்பட்டள்ளது. இப்படிப்பட்ட சம்பவங்கள் கடந்த சில வாரங்களில் அதிகளவில் ஏற்பட்டுள்ளதை வங்கிகள் சந்தித்துள்ளது.

15,000 கோடி ரூபாய் புழக்கம்
இந்தியாவில் தினமும் 15,000 கோடி ரூபாய் அளவிலான தொகை ஏடிஎம் வாயிலாகச் சந்தையில் புழக்கத்திற்கு வருகிறது. இதில் 5,000 கோடி ரூபாய் நிதியை 3ஆம் தரப்பு நிறுவனங்களின் வாயிலாகக் கையாளப்படுகிறது.

மோசடி
3ஆம் தரப்பு நிறுவனங்களின் செய்ய மோசடி சம்பவங்கள் ஹைதராபாத், டெல்லி மற்றும் சென்னையின் பல பகுதிகளில் வங்கிகள் சந்தித்துள்ளது. ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின் மோதும் 80 லட்சம் முதல் 4 கோடி ரூபாய் வரையிலான தொகை மோசடி செய்யப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

10 கோடி ரூபாய்
ஹைதராபாத்தில் கேஷ் ரீசைகிளர் RCI மூலம் ஜூன் மாத்தில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வு
சந்தையில் கேஷ் லாஜிஸ்டிக்ஸ் வல்லுநர்கள் கூறுகையில், ரிசர்வ் வங்கி 3ஆம் தரப்பு நிறுவனங்களைச் சரியான அளவு கோள் உடன் ஆய்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

சென்னை
சில நாட்களுக்கு முன் சென்னை ஆவடி பகுதிகளில் இருக்கும் சில ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் சுமார் 70 லட்சம் ரூபாய் வரை 3ஆம் தரப்பு நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு ஏடிஎம் டெக்னிஷன் மோசடி செய்துள்ளார். இதனைக் கண்டுபிடித்த காவல் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.

மக்களே
ஹைதராபாத் மற்றும் சென்னை சம்பவங்கள் மூலம் இந்தியாவில் பல இடங்களில் ஏடிஎம் வாயிலாகக் கள்ள நோட்டுகள் சந்தையில் புழக்கத்திற்கு வருவது உறுதியாகியுள்ளது. எனவே மக்கள் அனைவரும் எந்த இடத்தில் பணப் பரிமாற்றம் மேற்கொண்டாலும் சரி கவனமாக இருக்க வேண்டும்.
இந்திய ரூபாய்
இந்திய ரூபாய் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..?
கள்ள நோட்டுப் புழக்கத்தைத் தடுக்க ரூ.500, ரூ.1,000 தாள்களில் 7 புதிய மாற்றங்கள்: ரிசர்வ் வங்கி