ரிலையன்ஸ் ஜியோவின் இண்டர்நெட் வேகம் 20% சதவீதம் சரிவு.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஏர்டெல்..!

ஷாட் அண்ட் ஸ்வீட்டா.. ஹாட்டான பிஸ்னஸ் நியூஸ்: ஸ்பீக்கர் பாக்ஸ்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய விமான நிறுவனங்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் துபாய்..!

இந்திய விமான நிறுவனங்களுக்கு ஓரவஞ்சனை காட்டும் துபாய்..!

துபாய் விமான நிலையத்தில் இந்திய விமான நிறுவனங்களுக்கு டேக் ஆப் செய்யச் சரியான டைம் ஸ்லாட் கொடுக்காமல் பிற நிறுவனங்கள் மத்தியில் ஒரே ஓரவஞ்சனை காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.

இதற்காக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோ கஜபதிராஜு துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குக் கடிதம் எழுதியுள்ளார்.
#Dubai #India

 

ரிலையன்ஸ் ஜியோவின் இண்டர்நெட் வேகம் 20% சதவீதம் சரிவு..!

ரிலையன்ஸ் ஜியோவின் இண்டர்நெட் வேகம் 20% சதவீதம் சரிவு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய டெலிகாம் பிரிவான ஜியோ நிறுவனத்தின் இண்டர்நெட் வேகம் அக்டோபர் மாதத்தில் 7.2 Mbps வேகத்தில் இருந்து 20 சதவீதம் சரிந்து 6 Mbps ஆகக் குறைந்துள்ளது.

இந்தப் பாதிப்பு ஜியோவின் 22 வட்டங்களில் 17 வட்டங்களில் தெரிகிறது என்று டெலிகாம் துறை சார்ந்த ஆய்வு நிறுவனங்கள் கூறுகிறது.
#Jio #Telecom

 

பிரிட்டனும் கைவிட்டது.. சோகத்தில் தத்தளிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள்..!
 

பிரிட்டனும் கைவிட்டது.. சோகத்தில் தத்தளிக்கும் இந்திய ஐடி ஊழியர்கள்..!

நவம்பர் 24ஆம் தேதிக்குப் பின் பிரிட்டன் நாட்டிற்கான 2ஆம் தர ICT (intra-company transfer) விசா பெற வேண்டும் என்றால் ஒருவர் வருடத்திற்கு 30,000 பவுண்டுக்கு அதிகமாகச் சம்பளம் பெற வேண்டும் என அறிவித்துள்ளது. முன்பு இதன் அளவு 20,800 பவுண்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடத்தில் இந்தியாவில் இருந்து பிரிட்டன் வந்த இந்திய மக்களில் 90 சதவீதம் பேர் ICT விசா பயன்படுத்தி வந்துள்ளனர் என்று குடிபெயர்தல் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை அடுத்து பிரிட்டனும் கைவிட்டது.. இந்திய ஐடி ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்..!

இந்த புதிய கட்டுப்பாடுகள் மூலம் இனி யாரு வேண்டுமானலும் அமெரிக்கா, லண்டன் போகலாம் என்னும் நிலை மாறிவிடும்.

#UK #ICT_Visa

 

பிரிட்டன் டாடா ஸ்டீல் நிறுவன விற்பனைக்கு முற்றுப்புள்ளி..?

பிரிட்டன் டாடா ஸ்டீல் நிறுவன விற்பனைக்கு முற்றுப்புள்ளி..?

டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவன டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி திடீரென நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில் இடைக்காலத் தலைவராக இருக்கும் ரத்தன் டாடா, பிரிட்டன் டாடா ஸ்டீல் நிறுவனம் மற்றும் அதன் வர்த்தகத்தை நிறுத்தவும், இதன் குறித்த முடிவுகளை அடுத்த 4 வாரங்களில் எடுக்க உள்ளதாகவும் டாடா சன்ஸ் தெரிவித்துள்ளது.
#UK #TataSteel

ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு..!

ஸ்திரமான நிலையில் ரூபாய் மதிப்பு..!

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் பங்குச்சந்தை வர்த்தகம் முதல் டாலர் மதிப்பு வரை அனைத்தும் சரிந்து வருகிறது.

இந்நிலையில் இன்று நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 66.72 ரூபாயாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
#USD #Rupee #INR

 

மின்சார, எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா-ஸ்வீடன் மத்தியில் ஒப்பந்தம்..!

மின்சார, எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க இந்தியா-ஸ்வீடன் மத்தியில் ஒப்பந்தம்..!

இந்தியாவில் எரிசக்தி மற்றும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க இந்தியா மற்றும் ஸ்வீடன் நாடுகள் மத்தியில் புதிய ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. இத்திட்டத்தில் இந்தியா-ஸ்வீடன் இணைந்து கழிவுகளில் இருந்து மின்சாரம், ஸ்மார்ட் மீட்டர், சோலார் எனர்ஜி, நீர் மின்சாரம் ஆகியவற்றி கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.
#Power #India #Sweden

13 கோடி ரூபாய் நஷ்டத்தில் மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ்..!

13 கோடி ரூபாய் நஷ்டத்தில் மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ்..!

2016ஆம் ஆண்டில் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் 13.12 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 13.07 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Max

பதில் சொல்லுங் ஜெட் ஏர்வேஸ்..!

பதில் சொல்லுங் ஜெட் ஏர்வேஸ்..!

செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் சில பகுதி விமானப் பைலட்கள் மட்டும் பணிக்கு வராத கரணத்தால் சுமார் 50 விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டது.

இதுகுறித்து முழுமையான விளக்கத்தை விமானப் போக்குவரத்துக் கழகம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் கோரியுள்ளது.

பணிக்கு வராத பைலட்கள் அனைவரும் உடல்நல குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
#DGCA #JetAirways

 

23.5 சதவீத லாப உயர்வில் டைட்டன்..!

23.5 சதவீத லாப உயர்வில் டைட்டன்..!

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டைட்டன் நிறுவனம் 18.76 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று லாபத்தில் 23.51 சதவீத உயர்வை எட்டியுள்ளது.

ஆனால் இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகள் 0.1சதவீதம் சரிந்து 2,659.83 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
#Titan #Q2 #Profit

 

விற்பனையில் 55% உயர்வு.. ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் அலிபாபா அதிரடி..!

விற்பனையில் 55% உயர்வு.. ஈகாமர்ஸ் வர்த்தகத்தில் அலிபாபா அதிரடி..!

இந்தியாவில் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வர்த்தகத்தைப் பெற தலைகீழாக நிற்கும் நிலையில் சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் வர்த்தக நிறுவனமான அலிபாபா செப்டம்பர் காலாண்டில் 55 சதவீதம் அதிக வர்த்தகத்தைப் பெற்றுள்ளது.

அதேபோல் இந்நிறுவனத்தின் வருவாய் அளவுகளிலும் இரட்டிப்பைக் கண்டுள்ளது.
#Alibaba #China

 

டாடா சன்ஸ் தலைவர் பதிவியைப் பெற டிசிஎஸ் தலைவருக்கு அதிக வாய்ப்பு..!

டாடா சன்ஸ் தலைவர் பதிவியைப் பெற டிசிஎஸ் தலைவருக்கு அதிக வாய்ப்பு..!

பல காரணங்களுக்கு மத்தியில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைரஸ் மிஸ்திரி வெளியேற ரத்தன் டாடா இடைக்காலத் தலைவராக உள்ளே வந்தார்.

இந்நிலையில் சைரஸ் மிஸ்திரிக்கு அடுத்து யார்..? என்று பார்க்கும் போது, அனைத்துத் தரப்பினரும் டாடா குழுமத்தின் 90 சதவீத வருவாய் அளிக்கும் டிசிஎஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரனைக் கைகாட்டியுள்ளனர்.

தற்போதைய நிலை வரை சந்திரசேகரனுக்குத் தான் அதிக வாய்ப்பு. பொறுத்திருந்து பார்ப்போம்.
#Tata #Tcs

 

 
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

News in 30 seconds - GoodReturns-Tamil - 04112016

News in 30 seconds - GoodReturns-Tamil - 04112016
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X