முதல் வாக்குறுதியை நிறைவேற்றினார் 'டொனால்டு டிரம்ப்'..!

அமெரிக்க மக்கள் மத்தியில் அதிபர் பதவிக்கு வரும் முன்பே அதிகளவிலான வெறுப்பை சம்பாதித்துள்ள டொனால்டு டிரம்ப் நிறைவேற்றிய முதல் வாக்குறுதி.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேண்டா வெறுப்பா பிள்ளையைப் பெத்து காண்டாமிருகமென்னு பேரு வைச்ச மாதிரி, வேறு வழியே இல்லாமல் அமெரிக்காவில் Republic கட்சியினர் டொனால்டு டிரம்ப், அதிபர் தேர்தலில் நிற்கவைத்து வெற்றியும் பெற வைத்துள்ளனர். இவரது வெற்றியைக் கொண்டாடுவோர் எண்ணிக்கையை விட வெறுப்பவர்கள் தான் அதிகம்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அடுத்த 4 வருடத்திற்கு அமெகரிக்கா என்னும் மிகப்பெரிய வல்லரசு நாட்டை ஆழப்போவதும் டொனால்டு டிரம்ப் தான்.

இந்நிலையில் தனது தேர்தல் பிரச்சாரத்தில் அள்ளிவிட்ட வாக்குறுதிகளில் முதல் வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் டொனால்டு டிரம்ப்.

1 டாலர் சம்பளம்

1 டாலர் சம்பளம்

இயல்பாக அமெரிக்க அதிபராக இருப்போருக்கும் அமெரிக்க அரசு வருடத்திற்கு 4,00,000 அமெரிக்கா டாலரைச் சம்பளமாக அளிக்கும்.

ஆனால் டொனால்டு டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தான் சம்பளம் வாங்க மாட்டேன் எனக் கூறி அதிகளவிலான ஆதரவைச் சேகரித்தார்.

 

முதல் வாக்குறுதி

முதல் வாக்குறுதி

தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப் பின் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த 70 வயதான டொனால்டு டிரம்ப், சட்டத்தின் படி தான் சம்பளம் பெறாமல் வேலை செய்ய முடியாத காரணத்தால் தான் வருடத்திற்கு 1 டாலர் சம்பளத்தைப் பெற உள்ளதாகக் கூறினார்.

மேலும் அவர் விடுமுறையே எடுக்கக் கூடாது என முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

உண்மை உழைப்பு..

உண்மை உழைப்பு..

நிறைய வேலைகள் உள்ளது. விரைவாகப் பல பணிகளைச் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மக்கள் நலனுக்காக அனைத்தும் துரிதமாகச் செய்து முடிக்க வேண்டும் என விரும்புகிறேன் எனவும் டொனால்டு டிரம்ப் கூறினார்.

முக்கியத் திட்டங்கள்

முக்கியத் திட்டங்கள்

அமெரிக்காவில் இனி வரிகள் குறைக்கப்பட உள்ளன, சுகாதாரம் மற்றும் மருத்துவத்தைக் காக்கவேண்டும். எனவே நாட்டில் விரைவாக முடித்து வைக்க வேண்டிய பணிகள் அதிகளவில் உள்ளது எனவே விடுமுறை எடுக்கவோ அல்லது ஓய்வெடுக்கவோ நேரம் இருக்காது.

வெற்றி

வெற்றி

தேர்தலுக்கு முந்தைய கணிப்புகளை அனைத்தும் ஹிலாரி கிளின்டனுக்குச் சாதகமாக இருந்த சூழ்நிலையில் எப்பிஐ வழக்கு அவருக்கு எதிராக அமைந்தது. இதன் பின் எப்பிஐ ஹிலாரி கிளின்டன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவ்விதமான குற்றங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின் மீண்டும் ஹிலாரி கிளின்டன் மக்கள் மத்தியில் அதிகளவிலான ஆதிக்கத்தைப் பெற்றார். ஆனால் தேர்தல் முடிவுகள் முற்றிலும் மாற்றுப்பட்டு இருந்தது.

 

வீடியோ

இந்த செய்தியின் முதல் வரிக்கு சான்று தான் இந்த வீடியோ.

இதுப்போல் எந்த ஒரு நாட்டு மக்களும் அதிபர் பதிவிக்கும் வரும் முன்னரே அதிபர் மக்கள் மத்தியில் இத்தகைய வெறுப்பை பெற்றதில்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Donald Trump confirming his first promise he made in campaign: US Election

Donald Trump confirming his first promise he made in campaign: US Election - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X