ஜெயலலிதா முதல் முகமது அலி ஜின்னா வரை.. ஒரு ரூபாய் கதை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வேலைக்கு சொல்லும் ஒவ்வொருவருக்கும் சம்பள நாள் என்பது சந்தோசம் பூக்கும் மாதத்தின் முக்கியமான நாள், அது திங்கட்கிழமையாக இருந்தால் கூட மகிழ்ச்சி துள்ளும்.

 

இதுவே உங்களது சம்பளம் 1 ருபாய் என்றால் என்ன செய்வீர்கள்.? கொஞ்சம் கஷ்டம் தான்.

ஆனால் இங்கு பலபேர் வருடத்திற்கே ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்குகின்றனர்.

1 ரூபாய் சம்பளம் பெற்ற முதல்வன்

1 ரூபாய் சம்பளம் பெற்ற முதல்வன்

முதன்முதலாக உலகில் 1 ரூபாய் சம்பளத்தை அறிமுகம் செய்து வைத்தவர் முகமது அலி ஜின்னா அவர்கள் தான். இவர் பாகிஸ்தான் நாட்டின் முதல் கவர்னர் ஜெனரல். இவர் தனது பதவியில் இருக்கும் போது எந்த வித சலுகைகளும் பெறாமல் வெறும் 1 ரூபாய் சம்பளத்தைப் பெற்றார்.

என்டிஆர்

என்டிஆர்

தெலுங்கானா பிரிவினைக்கு முன் இருந்த ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரான என்டி ராமா ராவ், தான் பதவியில் இருந்த காலத்தில் ஒரு ரூபாய் சம்பளத்தை வாங்கியவர்.

இவர் அரசியலில் மட்டும் அல்லாமல் சினிமாவின் வாயிலாக மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்தவர் என்றால் யாரும் மறுக்கமுடியாது.

நாராயணமூர்த்தி
 

நாராயணமூர்த்தி

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் வடிவமைப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கிய 7 நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி இந்நிறுவனத்தின் சீஇஓவாகப் பணியாற்றிய போது வருடத்திற்கு 1 ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றார்.

ஆனால் தற்போது சீஇஓவாக இருக்கும் விஷால் சிக்காவின் சம்பளம் வருடத்திற்கு 72 கோடி ரூபாய்.

ஆல்பபெட் இன்க்

ஆல்பபெட் இன்க்

உலகின் முன்னணி மென்பொருள் நிறுவனமாக இருக்கும் கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் இன்க் நிறுவனத்தின் தலைவரான சர்ஜி பிரின் ஒரு டாலர் சம்பளம் வாங்கும் வர்த்தகத் தலைவர் பட்டியலில் இணைகிறார்.

லேரி எலிசன்

லேரி எலிசன்

டேட்டா பேஸ் சேவையில் உலகவில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தை மட்டும் அல்லாமல் இப்பரிவில் தனிப்பட்ட ஆதிக்கத்தைச் செலுத்தும் ஆரக்கிள் நிறுவனத்தின் தலைவர் லேரி எலிசன் தனது பதிக்காலத்தில் அதிகளவிலான வருடங்கள் 1 டாலர் சம்பளத்தைப் பெற்றவர்.

ஆப்பிள்

ஆப்பிள்

டிஜிட்டல் உலகின் பரிணாம வளர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக ஆதிகாரியாக இருந்தபோது 1 டாலர் சம்பளத்தை மட்டுமே வாங்கினார்.

ஜான் எப்.கென்னடி

ஜான் எப்.கென்னடி

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜான் எப்.கென்னடி தனது பதிவிக்காலத்தில் வருடத்திற்கு 1 டாலர் சம்பளத்தை மட்டுமே வாங்கினார்.

மேலும் இப்பட்டியலில் இணையும் பிற தலைவர்களைப் பார்ப்போமா.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த 10 வருடத்தில் முடிசூடா மண்ணாக இருக்கப்போகும் டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கூட வருடத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கினார்.

லேரி பேஜ்

லேரி பேஜ்

தமிழரான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் இணை நிறுவனரான லேரி பேஜ்.

ஜின்கா

ஜின்கா

ஆன்லைன் மற்றும் மொபைல் கேமிங் நிறுவனமான ஜின்கா நிறுவனத்தின் நிறுவனரான மார்க் பின்கஸ்.

பிராட்காம்

பிராட்காம்

உலகின் முன்னணி டெலிகாம் மற்றும் செமிகன்டாக்டர் துறை நிறுவனமான பிராட்காம் கார்பரேஷன்-இன் துணை நிறுவனரான ஹென்ரி சமுவேல்

எரிக் ஸ்கிமிட்

எரிக் ஸ்கிமிட்

கூகிள் நிறுவனத்தின் உயர் அதிகாரி எரிக் ஸ்கிமிட்.

 அரனால்டு

அரனால்டு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னரான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர் தனது பதவிக்காலத்தில் 1 டாலர் மட்டுமே சம்பளமாக வாங்கினார்.

மெக் வித்மென்

மெக் வித்மென்

ஹெச்பி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மெக் வித்மென் அவர்களும் இப்பட்டியலில் இணைந்துள்ளார்.

மார்க் ஜூக்கர்பெர்க்

மார்க் ஜூக்கர்பெர்க்

உலகின் முன்னணி சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் சுமார் 27 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளைத் தன்னகத்தில் வைத்துள்ள மார்க் ஜூக்கர்பெர்க் வருடத்திற்கு 1 ரூபாய் சம்பளத்தை மட்டுமே வாங்குகிறார்.

ஜாக் டோர்ஸி

ஜாக் டோர்ஸி

டிவிட்டர் நிறுவனத்தின் நிறுவனரான ஜாக் டோர்ஸி இந்நிறுவனத்தின் சீஇஓவாகவும் பதவி வகித்து வருகிறார். இவர் ஒரு வருடத்திற்கு வாங்கும் சம்பளம் ஒரு ரூபாய்.

ஜேன் கோம்

ஜேன் கோம்

மெசேஜிங் சேவை அளிக்கும் முன்னணி நிறுவனமான வாட்ஸ்அப் நிறுவனத்தை உருவாக்கிய ஜேன் கோம் வருடத்திற்கு 1 டாலர் சம்பளத்தை மட்டுமே வாங்குகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech giants to politicians getting 1 rupee or 1 dollar as a salary

Tech giants to politicians getting 1 rupee or 1 dollar as a salary - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X