6 மாதத்தில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம்: இந்தியாவின் மிகப் பெரிய ஊழியர்கள் வெளியேற்றம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் 14,000 ஊழியர்களை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.

 

ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததற்கு காரணம் வர்த்தகம் குறைந்தது தான் என்றும், இது ஒரு வணிக உத்தி தான் என்றும் பின்னாளில் அதிகமான வணிகம் ஏற்படும் போது ஆட்கள் மீண்டும் எடுக்கப்படும் என்று நிறுவனத்தின் நிதி அலுவலக தலைவர் ஆர் ஷங்கர் ராமன் கூறினார்.

மொத்த ஊழியர்கள்

மொத்த ஊழியர்கள்

எங்கள் நிறுவனத்தில் இருக்கும் அனைத்துக் கிளைகளிலும் மொத்தம் 1.2 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வந்தனர் என்றும், அதில் 14,000 ஊழியர்கள் 2017 ஆண்டின் முதல் பாதிக்குள் வெளியேற்ற இருப்பதாகவும் தெரிவித்தார்.

பாரபட்சம் பார்க்கப்படாத துறைகள்

பாரபட்சம் பார்க்கப்படாத துறைகள்

இந்தப் பணி நீக்கம் ஒரு துறையில் இருந்து மட்டும் அல்ல அனைத்துத் துறைகளில் இருந்தும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் கனிமங்கள் மற்றும் உலோகங்கள் பிரிவில் இருந்தும் கூட பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராமன் தெரிவித்தார்.

மேலும் இன்னும் பல வணிகங்களில் நிறுவனம் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருவதாகவும் அலுவலகத்தை மேலும் டிஜிட்டல் மையம் ஆக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

டிஜிட்டல்
 

டிஜிட்டல்

எப்போது எல்லாம் நிறுவனத்தை டிஜிட்டல் ஆக்க வேண்டிய கட்டாயம் உள்ளதோ அப்போது எல்லாம் மற்றி உள்ளோம். எனவே 10 நபர்கள் வேலை செய்ய வேண்டும் என்றால் அங்கு 5 நபர்களாகக் குறைக்கும் முயற்சிகள் நடந்துவருவதாகவும் ராமன் கூறினார்.

சுறுசுறுப்பாகவும், ஸ்மார்டாகவும்

சுறுசுறுப்பாகவும், ஸ்மார்டாகவும்

நிறுவனத்தில் உள்ள மிகக் குறைவான வணிகத்தை அளிக்கும் துறைகளை ஆராய்ந்து வருகிறோம் என்றும் போட்டியான உளகில் சுறுசுறுப்பாகவும், ஸ்மார்டாகவும், முன்நோக்கிச் செல்ல உள்ளதாகவும் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவருமான எஸ் என் சுப்பிரமணியன் கூறினார்.

மோடி, ஓபாமா போன்ற பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

L&T lays off 14,000 employees during Apr to Sept period

L&T lays off 14,000 employees during Apr to Sept period
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X