
ஜீடா சூப்பர் கார்டு- இந்திய சந்தையில் குதித்துள்ளது புதிய பேமெண்டு சேவை
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை அறிவிப்பு மக்களை எந்த அளவிற்குப் பாதிப்படைந்துள்ளது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதனை வாய்ப்பாகவும், மக்கள் எளிமையான மற்றும் பாதுகாப்பான பணப் பரிமாற்றம் செய்யும் சேவையைத் துவங்கியுள்ளார் தொடர் டெக்னாலஜி தொழிலதிபரான பாவின் துராகியா.
தனது ஜீடா நிறுவனத்தின் கீழ் ஜீடா சூப்பர் கார்டு என்னும் புதிய பேமெண்டு தளத்தைச் செய்துள்ளார். இந்தத் தளத்தின் மூலம் இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களும் வர்த்தகர்கள்-வாடிக்கையாளர் மத்தியிலான இந்தப் பணப் பரிமாற்ற சேவை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
#Zeta

இனி டோல்களில் டிஜிட்டல் அடையாள அட்டை தான் பயன்படுத்த வேண்டும்..!
இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய்த் தடையினால் பணப் பரிமாற்றம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணங்களை டிசம்பர் 31 வரை முழுமையாக ரத்து செய்துள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு அனைத்து வாகன உரிமையாளர்களையும் இனி டிஜிட்டல் அடையாள அட்டை மூலம் டோல் கட்டணங்களைச் செலுத்த வலியுறுத்தி வருகிறது.
பொதுவாகக் கனரக வாகனங்கள், தினசரி பேருந்துகள் மட்டுமே டிஜிட்டல் அடையாள அட்டை(RFID) பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கார் உட்பட அனைத்து வாகன உரிமையாளர்களையும் பயன்படுத்த வலியுறுத்தி வருகிறது. இதனால் வாயிலாக அனைத்து பணமும் சரியான முறையில் கணக்குக் காட்டப்படும் என்பது மத்திய அரசின் திட்டம்.
#TOLL #Highway #RFID

ஜன் தன் வங்கி கணக்குளில் 21,000 கோடி ரூபாய் வைப்பு..!
நாட்டு மக்கள் அனைவருக்கும் வங்கி சேவை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து அனைவருக்கும் இலவச வங்கி கணக்கு என்ற ஜன் தன் திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் கீழ் பல லட்ச வங்கி கணக்குகள் துவங்கப்பட்டாலும் இதன் வாயிலாக வரும் வைப்பும், முதலீடும் மிகவும் குறைவாகவே இருந்தது.
ஆனால் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடைக்குப் பின் ஜன் தன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட வங்கி கணக்குளில் 21,000 கோடி ரூபாய் வைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 45,636.61 கோடி ரூபாயாக இருந்த வைப்பு நிதி அளவு தற்போது 66,636 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
#JanDhan

ஈ-வேலெட் சேவையில் தளர்வு.. ஆர்பிஐ அறிவிப்பால் நிறுவனங்கள் மகிழ்ச்சி..!
பணப் பரிமாற்றம் அதிகளவில் முடங்கியுள்ள இத்தகைய தருணத்தில் ஈ-வேலெட் சேவையின் மூலம் ஒரு நாளுக்குத் தனிநபர் ஒருவருக்கு 20,000 ரூபாயும், வர்த்தகர்களுக்கு 50,000 ரூபாய் வரை பணப் பரிமாற்றம் செய்யும் வகையில் அளவுகோலை உயர்த்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை, பேமெண்ட் மற்றும் ஈ-வேலெட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் வரவேற்பு அளித்துள்ளது.
இதற்கு முன் தனிநபருக்கான அளவுகோல் 10,000 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
#E-Wallet

இந்தியாவில் வளர்ச்சி 6.8 சதவீதமாகக் குறையும்..!
2015ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய்த் தடையினால் நாட்டின் வளர்ச்சி 6.8 சதவீதமாகக் குறையும் எனக் கோல்டுமேன் சாச்சஸ் நிறுவனம் தனது ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.
#India #GDP #Goldmansachs

டொனால்டு டிரம்ப் அமைச்சகத்தில் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்வு..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் பல விமர்சனங்களுடன் வெற்றிப்பெற்றுள்ள டொனால்டு டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க நாட்டின் அதிபராக பதிவியேற்ற உள்ளார். இந்நிலையில் அவர் தலைமையில் அமையப்போகும் அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சார்ந்த நக்கி ஹேலி முதல் பெண் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சார்ந்தவர்கள் இத்தகைய பெரும் பதவில் நியமிக்கப்பட்டது நக்கி ஹேலி இதுவே முதல் முறை.
#Trump #NikkiHaley