வங்கி ஏடிஎம்-இல் 2,000 ரூபாய் அதிகமாகவும், 500 ரூபாய் குறைவாகவும் இருக்க காரணம் தெரியுமா..?

2,000 ரூபாய் இளஞ்சிவப்பு நிறத்திலும், 500 ரூபாய் டாலர் நிறத்திலும் உள்ளதற்கான காரணம் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றுக் கொண்டு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் வெளியிடுவதில் ஏறப்பட்டுள்ள தட்டுப்பாட்டின் கீழ் ஒரு பெரிய கதையே உள்ளது.

 
வங்கி ஏடிஎம்-இல் 2,000 ரூபாய் அதிகமாகவும், 500 ரூபாய் குறைவாகவும் இருக்க காரணம் தெரியுமா..?

2,000 ரூபாய் இளஞ்சிவப்பு நிறத்திலும், 500 ரூபாய் டாலர் நிறத்திலும் உள்ளதற்கான காரணம் தெரியுமா..?

காரணம்

காரணம்

விடை மிகவும் எளிது. 2000 ரூபாய் நோட்டு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் அச்சகத்தில் இருந்தும் அதே நேரம் 500 ரூபாய் நோட்டு அரசுக்குச் சொந்தமான நாசிக், மகாராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேசத்தில் உள்ள தேவாஸ் அச்சகத்திலும் அச்சிடப்பட்டது.

பழைய நோட்டுகளை மாற்றுவதில் மத்திய வங்கி எடுத்த முடிவுக்கு எங்களை ஏன் கேலி செய்ய வேண்டும் என்று ஆர்பிஐ அதிகாரிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.

 

எங்களை ஏன் குற்றம் சாட்ட வேண்டும்..?

எங்களை ஏன் குற்றம் சாட்ட வேண்டும்..?

அரசு எல்லா முடிவுகளையும் எடுத்துவிட்டு நிதி அமைச்சர் அறிக்கை வெளியிட்ட பிறகே எங்களுக்குச் செய்தி வருகிறது என்றும் குறைவான அளவு நோட்டுகள் முதலில் விநியோகிக்கப்பட்டதற்குக் காரணம் பண பரிவர்த்தனை பற்றி அரசு எடுத்த தவறான முடிவே என்றும் ஆர்பிஐ வட்டாரம் கூறுகிறது.

புழக்கத்தில் உள்ள நோட்டுகள் எண்ணிக்கை
 

புழக்கத்தில் உள்ள நோட்டுகள் எண்ணிக்கை

2,000 ரூபாய் நோட்டுகள் 500 ரூபாய் நோட்டு அரசு அச்சகத்தில் இருந்து வெளிவருவதற்கு முன்பே அச்சிடத் துவங்கப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

ஆர்பிஐ தரவின் படி 9026.6 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாகவும் அதில் 24 சதவீதம் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு ஆகும்.

 

முன்னால் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கருத்து

முன்னால் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கருத்து

முன்னால் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் கணக்கு படி புதிய நோட்டுகளை மாற்ற இன்னும் 7 மாதங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். இதற்குக் காரணமாக 1570 கோடி ஒரு நாணயமாகவும், 530 கோடி ஒரு நாணயமாகவும் என 21,000 கோடி நோட்டுகள் அச்சிடப்பட வேண்டும் என்றும் கூறுகிறார்.

ஆனால் நமது ரூபாய் நோட்டு அச்சகங்களில் இருந்து ஒரு நாளைக்கு 300 கோடிகள் மட்டுமே அச்சிட முடியும். அதனால் தான் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தியுள்ளதாகச் சிதம்பரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.

 

ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி

ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி

ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி கூறுகையில் ஆர்பிஐ 2,000 ரூபாய் நோட்டுகளைத் துரிதமான முறையில் அச்சிட்டு வெளியிட்டது. ஆனால் 500 ரூபாய் நொட்டுகள் அதிகளவு வணிகர்களுக்குத் தேவை பட்ட நிலையில் மக்கள் சில்லறை கிடைக்காது எனு வங்கிகளில் பலர் 2000 ரூபாய் நோட்டுகளைப் பெற மறுத்துவிட்டனர் என்றும் கூறுகிறார்.

போக்குவரத்து சிக்கல்

போக்குவரத்து சிக்கல்

அது மட்டும் இல்லாமல் ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வதிலும் பல சிக்கல்கள் ஏற்பட்டதாகவும் ஏடிஎம் இயந்திரங்களைப் புதுப்பிக்கவும் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது என்றும் கூறுகின்றனர்.

இவை மட்டும் இல்லாமல் புதிய 500 ரூபாய் நோட்டின் அளவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here's the real reason why your ATM has more Rs 2,000 & less of the new Rs 500 notes

Here's the real reason why your ATM has more Rs 2,000 & less of the new Rs 500 notes
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X