'ஜியோ' இம்சை தாங்க முடியல.. புலம்பி தள்ளும் 'ஏர்டெல், வோடபோன், ஐடியா'..!

வெல்கம் ஆஃபருக்கே ஆடிப்போன ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்கள், ஹேப்பி நியூ இயர் ஆஃபருக்கு தாங்குமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றளவில் 'ஜியோ' என்றாலே மக்களின் முகத்தில் புன்னகை பூக்கும் விஷயமாக மாறிவிட்டது. காரணம் இதன் அறிமுகச் சலுகை திட்டமான 90 நாட்களுக்குக் கால், இண்டர்நெட் டேட்டா, மெசேஜ், லோக்கல், எஸ்டிடி என அனைத்து சேவைகளும் இலவசம் என்ற அறிவிப்பு தான்.

தற்போது 90 நாட்கள் இலவச சேவை காலம், டிசம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்நிறுவனத்தின் 5 கோடி வாடிக்கையாளர்களைச் சிம் கார்டை பயன்படுத்தலாமா, வேண்டாமா எனச் செய்வது அறியாமல் நின்றுக்கொண்டு இருக்கும் வேளையில், இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி புதிய ஒரு அறிவிப்பை வியாழக்கிழமை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பினால் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடுப்பாகி உள்ளது. அப்படி அந்த அறிவிப்பில் என்ன உள்ளது. இதனால் பிற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு என்ன பிரச்சனை.

ரிலையன்ஸ் ஜியோ..!

ரிலையன்ஸ் ஜியோ..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் புதிய தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான ஜியோவின் அறிமுகத்தில் இந்திய சந்தையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் முயற்சியில் வெல்கம் ஆஃபர் என்ற பெயரில் அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவித்தது.

இந்தச் சேவை வருகிற டிசம்பர் 3ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

 

புதிய ஆஃபர்

புதிய ஆஃபர்

ஜியோ தனது சேவையை மக்களுக்கு அறிமுகம் செய்து 89 நாட்களே ஆன நிலையில், 52 மில்லியன் ஆதாவது 5 கோடிய 20 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.

ஆனால் ஜியோ நிர்வாகம் வாடிக்கையாளர் மற்றும் வர்த்தகத்தில் தனது இலக்கை உயர்த்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த இலவச சேவைகளை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.

 

ஏர்டெல், வோடபோன், ஐடியா

ஏர்டெல், வோடபோன், ஐடியா

ஜியோ நிறுவனத்தின் 90 நாட்கள் இலவச சேவை அறிமுகத்திலேயே ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கை கூட்டம் ஆடம்கண்ட நிலையில், தற்போது ஜியோ அறிவித்துள்ள ஹேப்பி நியூ இயர் ஆஃபரை எப்படி எதிர்கொள்ள உள்ளது.

 

 

வர்த்தகம் மற்றும் வருவாய்

வர்த்தகம் மற்றும் வருவாய்

ஐியோ நிறுவனத்தின் இப்புதிய இலவச சேவை திட்டத்தின் மூலம் நாட்டின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமாக இருக்கும் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை டேட்டா சேவையின் வர்த்தக வளர்ச்சி அடுத்த 12 மாதத்தில் 15-20 சதவீதம் வரை குறையும்.

மேலும் இந்நிறுவனங்களின் வருவாய் அளவுகளில் சுமார் 2 சதவீதம் வரை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இண்டர்கனெக்ஷன் பிரச்சனை

இண்டர்கனெக்ஷன் பிரச்சனை

ஏற்கனவே ஜியோ நிறுவனத்துடன் ஏர்டெல், வோடபோன், ஐடியா ஆகியவை இண்டர்கனெக்ஷன் பிரச்சனையில் மிகப்பெரிய பாதிப்பையும், பிரிச்சனையும் சந்தித்த நிலையில் தற்போது புதிய ஆஃபர் மூலம் வரும் வர்த்தகப் பாதிப்பை எப்படி எதிர்கொள்ள உள்ளது.

90 முதல் 20 சதவீதம்

90 முதல் 20 சதவீதம்

இண்டர்கனெக்ஷன் பிரச்சனையில் பல கட்ட ஆலோசனைக்குப் பின் பணப் பரிமாற்றம் புதிய டெலிகாம் டவர்களை நிறுவுதல் போன்ற பணிகள் மூலம் ஜியோ வாடிக்கையாளர்களின் இண்டர்கனெக்ஷன் பிரச்சனை 90 சதவீத்தில் இருந்து தற்போது 20 சதவீதமாகக் குறைந்துள்ளது.

பதில்...

பதில்...

ரிலையன்ஸ் ஜியோவின் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் அறிமுகத்தின் மூலம் வர்த்தகப் பாதிப்புகளைக் குறித்து ஏர்டெல், வோடபோன், ஐடியா நிறுவனங்களிடம் எக்னாமிக்ஸ் டைம்ஸ் நிறுவனம் கேட்ட போது, ஏர்டெல் பதில் கூற மறுத்துள்ளது. வோடபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் எவ்விதமான பதிலையும் அளிக்கவில்லை.

7 மாதம் இலவசம்

7 மாதம் இலவசம்

ஜியோ தற்போது அறிவித்துள்ள ஹேப்பி நியூ இயர் ஆஃபரை சேர்த்தால் சுமார் 7 மாதங்களுக்குத் தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை அளித்துள்ளது.

உலகத்தில் எந்தொரு டெலிகாம் நிறுவனமும் இத்தகைய இலவச சேவையை அறிவித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

என்ன லாபம்..?

என்ன லாபம்..?

7 மாதங்களுக்குத் தொடர்ந்து இலவச சேவை அளிப்பதால் ஜியோ-விற்கு என்ன லாபம்..?

இன்றைய சந்தை வர்த்தகத்தில் எவ்வளவு குறைவான கட்டணத்தில் டெலிகாம் சேவை அளித்தாலும் வாடிக்கையாளர்களைப் பிடிப்பது மிகவும் கடினம். இதற்கு முழுமையான உதாரணம் டாடா டோகோமோ. சென்னை, பெங்களுரூ போன்ற இந்தியாவின் பெரு நகரங்களில் மட்டும் சிறப்பான சேவையை அளிக்கும் நிறுவனம் குறைவான கட்டணத்தை அளித்தாலும் வாடிக்கையாளர் எண்ணிக்கையோ மிகவும் குறைவு.

இத்தகை சிக்கலுக்குள் மாட்டுக்கொள்ளக் கூடாது என்பதற்காகவே நஷ்டத்தைச் சந்தித்தாலும் அதிக வாடிக்கையாளர்களைக் குறுகிய காலக்கட்டத்திற்குள் பெற வேண்டும் என்ற திட்டத்துடன் ஜியோ செயல்படுகிறது.

 

முதல் இடம்..

முதல் இடம்..

எற்கனவே ஜியோ அறிவித்துள்ள கட்டண திட்டங்கள் பார்க்கும் போது, இந்தியாவிலேயே மிகவும் குறைவான கட்டணத்தில் சேவை அளிக்கும் நிறுவனமாக உள்ளது ஜியோ.

இந்நிலையில் அடுத்தச் சில வருடங்களுக்கு இதன் வர்த்தகம் எவ்வித்திலும் பாதிக்கக் கூடாது என்ற திட்டத்துடனே அதிக வாடிக்கையாளர்களைப் பெற இத்தகைய இலவசங்களை அறிவித்துள்ளார் ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.

இதன் மூலம் இந்திய டெலிகாம் சந்தையில் முதல் இடத்தைப் பிடிக்கவும் முடியும்.

 

டிராய்

டிராய்

சில வாரங்களுக்கு முன்பு ஜியோ, டிசம்பர் 3ஆம் தேதி முடிய உள்ள தனது 90 நாட்கள் இலவச திட்டத்தை டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கத் திட்டமிட்ட நிலையில், டிராய் தடை விதித்தது.

தற்போது ஹேப்பி நியூ இயர் ஆஃபர் என்ற புதிய பெயரில் அதேபோன்ற ஆஃபரை அறிவித்துள்ளது ஜியோ

 

டிராய் பதில்.

டிராய் பதில்.

ஜியோ நிறுவனம் இப்புதிய ஆஃபர் மற்றும் அதன் கட்டண விபரங்களை டிராய்-யிடம் சமர்ப்பித்துள்ளது. இதனை முறையாக ஆய்வு செய்தப்பின்னரே நடைமுறைக்கு வரும் என்று டிராய் அமைப்பின் தலைவர் ஆர்எஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

டிராய் அமைப்பின் பதில் நாளை மாலைக்குள் வெளிவரும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Reliance Jio extend free services offer may hurt Airtel, Vodafone, Idea

Reliance Jio extend free services offer may hurt Airtel, Vodafone, Idea - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X