இந்திய வர்த்தக சந்தையை ஆட்டிப் படைக்கும் ‘பனியா’காரர்கள்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

இந்திய வர்த்தக உலகில் சிறந்த நிலையில் உள்ளவர்களில் பலர் பனியா சமூகத்தை சார்ந்தவர்கள்.

பனியா சமூகத்தினர் தொட்டது எல்லாம் தங்கமாக மாறிவிடும். எனவே இவர்கள் இப்படி இருப்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

பனியாதாரம்

வட இந்தியா மற்றும் மேற்கு இந்தியாவில் தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகம் செய்பவர்களாகவே உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட இந்திய கோடிஸ்வர்களில் முதல் 10 இடத்தில் 8 பேர் பனியா சமுகத்தைச் சார்ந்தவர்கள்.

 

பொதுவான இந்திய கோடிஸ்வரர்கள்

இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரர் முகேஷ் அம்பானி, அவரைத் தொடர்ந்து லக்‌ஷ்மி மிட்டல், ரவி ரூயா, சாவித்ரி ஜிந்தால், கவுதம் அதானி, குமார மங்களம் பிர்லா, அனில் அம்பானி, சுனில் மிட்டல் ஆகியோர் பனியா சமுகத்தைச் சார்ந்தவர்கள்தான்.

ஆனால் இந்தியாவில் பனியா சமுகத்தின் மொத்த மக்கள் தொகை வெறும் 1 சதவீதம் மட்டுமே.

 

மரபணுக்கள்

2007-ம் ஆண்டு பிளிப்கார்ட்.காம் நிறுவனத்தைத் துவங்கிய சன்ச்சின் பன்சால், பின்னி பன்சால், 2015-ம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனம் தலைவர் ரோஹித் பன்சால் ஆகியோரும் இந்தச் சமுகத்தை சார்ந்தவர்கள் தான்.

ரோஹித் பன்சாலின் தந்தை விதைகள் வியாபார, இவரது குடும்பமே வர்த்தக குடும்பம் தான்.

 

ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர்கள்

அலகாபாத்தில் பிறந்த மன்மொகன் அகர்வால் தனது 15 வயது முதல் வியாபாரத்தில் இறங்கி உள்ளார். இவருடைய தந்தை றுதியான முடிவுகளை எடுக்க, ரிஸ்க் எடுக்க என்னைப் பழக்கப்படுத்தினார் என்று இவர் கூறியுள்ளார். 8 வருடங்கள் இந்தச் சிறிய வணிகத்தைச் செய்து வந்த இவர் யெபி.காம் என்ற இ-காமர்ஸ் இணையதளத்தைத் துவக்கியதும் குறிப்பிடத்தக்கது.

கணக்காளர்கள்

பனியா என்ற வார்த்தை சமஸ்கிரத மொழியில் இருந்து வந்தது ஆகும். பனியா என்றால் வணிகம் என்று அர்த்தம்.

இவர்கள் தங்களது கணக்கு புத்தகங்களை தினமும் கணக்கை எழுதிச் சரிபார்ப்பார்கள். அந்தப் புத்தகத்தை சோப்டிஸ் என்று கூறுவார்கள். மேலும் தீபாவளி அன்று புது வருடம் இவர்களுக்குத் துவங்குவதால் அன்று முதல் புதிய கணக்கு புத்தகத்தை துவங்குவார்கள்.

 

பணத்தின் வாசனையைத் தெரிந்தவர்கள்

வணிக மூலை உடைய இவர்கள் பணத்தை சம்பாதிக்க உள்ள ஒரு வழிகளையும் விடா மாட்டார்கள். 24 மணி நேரமும் வியாபார சிந்தனையிலேயே இருப்பார்கள்.

எந்தத் துறையில் பணம் சம்பாதிக்க இயலும் என்று நன்கு தெரிந்து செயல்படுவார்கள்.

 

தொட்ட துறையில் எல்லாம் வெற்றியே

வணிகத்தைத் தவிர நாட்டை ஆலக்கூடியவர்களாகவும் இவர்கள் உள்ளார்கள்.

இந்தியாவில் இரண்டு பெரிய அரசியல் தலைவர்களாக உள்ள நரேந்திர மோடி மற்றும் அரவிந் கெஜர்வால் ஆகியோரோம் இந்தச் சமுகத்தை சார்ந்தவர்கள் ஆவர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Trade secrets of Baniyas that make them super rich

Trade secrets of Baniyas that make them super rich
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns