2016-ம் ஆண்டு மூடப்பட்ட 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்..!

2016-ம் ஆண்டின் காலாண்டில் மட்டும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது மற்றும் நிறுவனத்தையே மூடியது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2015-ம் ஆண்டு தினமும் 3 முதல் 4 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்பட்ட நிலையில் 2016-ம் ஆண்டின் காலாண்டில் மட்டும் பல நிறுவனங்கள் ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது மற்றும் நிறுவனத்தையே மூடியது.

நிதிப் பற்றாக்குறை, ஆதரவு சரிவு, விற்பனை சரிவு, போட்டி அதிகரிப்பு பொன்றவை இதற்குக் காரணமாக கூறப்பட்டது. இந்தப் பட்டியலில் பெரிதும் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் என்றாடல் அது உணவு ஸ்டார்ட் அப் நிறுவனங்களே ஆகும்.

இதோ உங்களுக்கான 2016-ம் ஆண்டு மூடப்பட்ட 10 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் பட்டியல்.

டைனிஅவுள் (TinyOwl)

டைனிஅவுள் (TinyOwl)

2014-ம் ஆண்டு உணவு ஆர்டர் செய்யும் நிறுவனமாகத் துவங்கப்பட்டது. 2016 மே மாதத்துடன் மும்பையைத் தவிர மற்ற எல்லா 11 நகரங்களில் இருந்தும் தனது கிளையை இழுத்து மூடியது. 2015 செப்டம்பர் முதல் 2016 ஜனவரி மாதத்திற்குள் 600 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் இருந்து வேலையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

டேசோ(Dazo)

டேசோ(Dazo)

டேசோ செயலியின் மூலம் உணவை டெலிவரி செய்யும் நிறுவனமாகும். அக்டோபர் மாதம் திடீர் என்று தனது செயல்பாடுகளை நிறுத்திக்கொண்டது இந்த நிறுவனம். இந்த நிறுவனத்தின் பின் கூகுள் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜன் ஆனந்தன், டாக்ஸி பார் ஷூர் இணை நிறுவனம் அபர்மேயா ராதாகிருஷ்னா ஆகியோர் இருந்தும் நிறுவனம் மூடப்பட்டது பெறும் ஆச்சர்யத்தை அளித்தது. 2016-ம் ஆண்டு பல உணவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முட்டப்பட்டுள்ளது.

பெப்பர்டேப் (PepperTap)

பெப்பர்டேப் (PepperTap)

மளிகை பொருட்கள் டெலிவரி செய்யும் நிறுவனமான பெப்பர்டேப் 2014 நவம்பர் மாதம் துவங்கப்பட்டது. ஆனால் கோஃபர்ஸ், பிக்பேஸ்கெட் போன்ற நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராகத் தாக்குப்பிடிக்க முடியாமல் நிறுவனம் ஏப்ரல் 2016-ம் ஆண்டு மூடப்பட்டது.

பேஷனரா (Fashionara)

பேஷனரா (Fashionara)

பெங்களுரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமான பேஷனரா 2012-ம் ஆண்டு ரிலையன்ஸ் ட்ரெண்டின் முன்னால் தலைமை செயல் அதிகாரியான அருண் மற்றும் டைம்ஸ் இண்டெர்னெட் நிறுவனத்தின் தலைமை டெக்னாலஜி தலைவர் டார்பன் முஞ்சல் இருவரால் துவங்கப்பட்டு மே 2016 உடன் மூடப்பட்டது.

இந்நிறுவனம் முட்டப்பட்ட காரணமாகத் தேவையான முதலீடு இல்லாதது மற்றும் வாடிக்கையாளர்களைக் கவராதது போன்றவை என்றே கூறப்படுகின்றது.

 

பர்பள் ஸ்குரில் (Purple Squirrel)

பர்பள் ஸ்குரில் (Purple Squirrel)

மேட்ரிக்ஸ் நிறுவனத்தின் பக்கபலத்துடன் பர்பள் ஸ்குரில் என்ற எட்-டெக் நிதி ஸ்டார்ட் அப் நிறுவனம் மே 2016-ம் ஆண்டுடன் மூடப்பட்டது.

மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் மாணவர்களை நேரடியாக நிறுவனத்தின் தலைவர்களுடன் இணைத்து நிறுவனத்தின் சூழல் மற்றும் பயிற்சி போன்றவற்றை அளிப்பதற்காகத் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்க்மீ (AskMe)

ஆஸ்க்மீ (AskMe)

வாடிக்கையாளர் இணையதள தேடல் நிறுவனமான ஆஸ்க்மீ ஆகஸ்ட் மாதத்துடன் சர்வர் குளறுபடி மற்றும் தனது நிறுவனத்தின் முதலீட்டாளர் அஸ்ட்ரோ ஹோல்டின்ங்ஸ் திட்டமிடப்படாமல் வெளியேறியதைத் தொடர்ந்து மூடப்பட்டது.

ஜூபெர்மீல் (Zupermeal)

ஜூபெர்மீல் (Zupermeal)

உலக புகழ் பெற்ற சஞ்சீவ் கபூர் செஃப் முதலீடு செய்துள்ள ஜூபெர்மீல் நிறுவனம் மூடப்பட்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தச் செயலியின் மூலம் அருகில் உள்ள உணவகங்களில் இருந்தும் உணவை ஆர்டர் செய்யலாம். 2015 அக்டோபர் மாதம் ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து இந்நிறுவனத்திற்கு முதலீடு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த நிறுவனம் சஞ்சீவ் கபூரிடம் இருந்து முதலீடு பெற்ற 8 மாதத்தில் மூடப்பட்டது.

ஆடோஆன்கேப்(AUTOnCAB)

ஆடோஆன்கேப்(AUTOnCAB)

குர்கானை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆடோஆன்கேப் ஓலா, உபர் பொன்ற நிறுவனங்களின் சலுகை விலை போட்டியால் சமாளிக்க முடியாமல் மூடப்பட்டது. இதனால் 40 ஊழியர்கள் தங்கலது பணியை இழந்தனர்.

க்ரோக் ஷாப்(GrocShop)

க்ரோக் ஷாப்(GrocShop)

மளிகை பொருள் ஷாப்பிங் நிறுவனமான க்ரோக் ஷாப் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது. மைக்ரோசாப்ட்டின் ஸ்டார்ட் அப் நிகழ்வில் இடம்பெற்ற இந்த நிறுவனம் லாபம் ஏதும் பெறாமல் இயங்கி வந்ததால் மூடப்பட்டது.

பிரான்க்ளிமீ( FranklyMe)

பிரான்க்ளிமீ( FranklyMe)

விடியோ மைக்ரோ பிளாக் இணையதளமான இது அபிஷேக் குப்தா மற்றும் நிகுஞ் இருவரால் 2014 ஜூன் மாதம் துவங்கப்பட்டது.

ஆனால் சரியான பயனர்களைச் சென்று அடையாததால் 2016 பிப்ரவரி மாதம் முதல் தனது நிறுவனத்தின் செயல்பாடுகளை இந்நிறுவனம் நிறுத்தியது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 startups that shut down in 2016

10 startups that shut down in 2016
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X