கருப்பு பணம் ஆசாமிகளை பிடிக்க வருமான வரி துறையின் ‘புதிய கூட்டணி’..!

கணக்கில் காட்டப்படாமல் பண மோசடியில் முன்பு ஈடுபட்ட வழிகளை ஆராயும் போது இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் வர்த்தகர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள கருப்புப் பணத்தை பற்றி விசாரிக்க நான்கு பெரிய கணக்கியல் நிறுவனங்களிடம் இருந்து மூன்று தடயவியல் நிபுணர்களை வருமான வரித்துறை வரவளைத்துள்ளது.

மத்திய அரசு கருப்பு பணத்திற்கு எதிராக 500 மற்றும் 1000 ரூபாய்களைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நவம்பர் 8-ம் தேதி முதல் வருமான வரித்துறை சேகரித்த தகவல்களை இஒய், கேபிஎம்ஜி மற்றும் ப்ரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனங்களின் வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

எதற்கு புதிய கூட்டணி

எதற்கு புதிய கூட்டணி

வருமான வரி துறையினர் சோதனை செய்தவர்களில் சிலர் மோசடி செய்த பணம் அல்லது ஹவாலா வழியில் பெற்ற பணமாக வைத்திருக்கலாம் என்று ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. இது போன்ற கடினமான பரிவர்த்தனைகளை இந்த வல்லுநர்கள் உதவியுடன் வருமான வரித் துறையினர் கண்டறிந்து விசாரிக்கும் என்று கூறுகின்றனர்.

சட்ட ஆலோசகர் கருத்து

சட்ட ஆலோசகர் கருத்து

வருமான வரி செலுத்தாமல் வரம்பு மீறியவர்கள் கணக்கில் வராத பணத்தை டெப்பாசிட் செய்யப் புதுமையான வழிகளைக் கையாண்டு இருக்கலாம் என்றும் எனவே சந்தேகம் ஏற்படுத்தும் பண பரிவர்த்தனைகளுக்கான ரசீதுகள் அனைத்தும் கேட்கப்படாலாம் என்று நாலந்தா சட்ட ஆலோசகர் ராஜிவ் சிங் கூறியுள்ளார்.

ஆனால் கணக்கில் காட்டப்படாமல் பண மோசடியில் முன்பு ஈடுபட்ட வழிகளை ஆராயும் போது இன்னும் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் அது விசாரிக்க உதவும் என்றும் ராஜிவ் குறிப்பிட்டார்.

 

வருமான வரி துறையினரின் சோதனை

வருமான வரி துறையினரின் சோதனை

செல்லா ரூபாய் நோட்டுகளை அறிவித்த உடன் வருமான வரித் துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி உள்ளனர். பாகுபலி திரைப்படத்தின் தயார்பாளர் ஷோபு யார்ல்கட்டா மற்றும் பிரசாத் தேவியானி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான இரண்டு பொறியியல் வல்லுநர்கள் மற்றும் அன்மையில் நடந்த தமிழ்நாடு தலைமை செயலாளர் வீட்டில் நடந்த சோதனைகள் முக்கியமானவை.

கருத்து தெரிவிக்க மறுக்கும் ஆனையர்

கருத்து தெரிவிக்க மறுக்கும் ஆனையர்

இஒய், கேபிஎம்ஜி மற்றும் ப்ரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர்களிடம் இது பற்றி கேட்கப்பட்டதற்கு அவர்கள் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். அதே நேரம் மத்திய நேரடி வரி வாரியத்தின் ஆணையரும் இது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ளார்.

பல அடுக்கு அணுகுமுறை

பல அடுக்கு அணுகுமுறை

வருமான வரித் துறையினரின் இந்த நடவடிக்கைகள் குறித்து தெரிந்த சிலர் கூறும் போது இது விசாரிப்பதற்கான பல அடுக்கு அணுகுமுறைகளில் ஒன்று என்று கூறிருக்கின்றனர். மேலும் சோதனையின் போது தனிநபரிடம் இருந்து பெறப்பட்ட விவரங்கள், தரவுகள், கணினியில் இருந்து எடுக்கப்பட்ட தரவுகள், வங்கி கணக்கு அறிக்கைகள் போன்றவற்றை ஆராய்ந்து பதிவு செய்யப்பட்ட பரிவத்தனைகளை வைத்து எதிர் தரப்பினரை கேள்வி கேட்கப்படும் என்று கூறியுள்ளனர்.

செல்லா ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு அறிவித்ததில் இருந்த வருமான துறை இந்த நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Income Tax department ropes in experts from Big Four to unearth black money

Income Tax department ropes in experts from Big Four to unearth black money
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X