ஏர்டெல், வோடாபோன் நிறுவனங்களுக்கு எதிராக கூட்டு சேர்ந்த ஜியோவும் டாடாவும்..!

இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் என்பது ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் போது அழைப்பு செய்யப்படும்.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோவும் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனமும் பார்தி ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ள இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் குறித்த வழக்கிற்கு எதிராகப் பேசியுள்ளன.

 

இண்டர்கனக்ட் பயன்பாடு கட்டணங்கள் என்பது ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் பிற நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் போது அழைப்பு செய்யப்படும் நிறுவனம் எதிர் தரப்பு நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டிய கட்டணமாகும்.

டிராய் விதித்துள்ள கட்டணங்கள்

டிராய் விதித்துள்ள கட்டணங்கள்

இப்போது உள்ள சூழலில் தரை வழியில் இருந்து வயர்லெஸ் இணைப்புகளைத் தொடர்பு கொள்ளும் பொது இலவசமாகவும், வயர்லெஸில் இருந்து வயர்லெஸ் நெட்வொர்க்கை தொடர்பு கொள்ளும் போது நிமிடத்திற்கு 14 பைசா கட்டணமாகவும் உள்ளது. இதனை நெறிப்படுத்த வேண்டும் என்று ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் டெல்லி உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளன.

இந்த வழக்கிற்கு எதிராக ரிலையன்ஸ் நிறுவனமும், டாடா டெலி சர்விசஸ் நிறுவனமும் தலைமை நீதிபதி ஜி ரோகினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்ரா சேகலிடன் மனுக்களை அளித்துள்ளனர்.

 

வழக்கறிஞர் கருத்து

வழக்கறிஞர் கருத்து

ஒரு தரப்பிறாகாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் ப சிதம்பரம் இது பற்றி கூறும் போது குறைந்த அளவிலான வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனங்களுக்கு எந்தச் சிக்கலும் இதில் இல்லை என்றும் அதிக வாடிக்கையாளர்கள் உடைய நிறுவனங்களே இதில் பாதிக்கப்படுகின்றன என்று கூறுகிறார்.

மேலும் இவர் வாதாடும் போது டிராய் நிர்னைத்துள்ள இந்த விலையால் சேவை வழங்குநர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெறும் நட்டத்தை எதிர்கொள்வதாகவும் வாதாடினார்.

 

எடுத்துக்காட்டு
 

எடுத்துக்காட்டு

என்னுடன் நல்ல உள்கட்டமைப்பு உள்ளது அதனை பயப்படுத்தி பிறர் லாபம் பார்க்கின்றார் என்றால் அதில் இருந்து குறிப்பிட்ட வருவாயை எனக்கு அளிக்க வேண்டும் என்று இவை கூறினார். அடுத்து இந்த வழக்கு ஜனவரி 9-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகின்றது.

வழக்கு

வழக்கு

வோடாபோன் நிறுவனம் முதலில் இந்த வழக்கை நவம்பர் 2015-ம் ஆண்டு துவங்கியது. பின்னர் ஏர்டெல் நிறுவனமும் டிராயிக்கு எதிரான இந்த வழக்கில் இணைந்தது. இப்போது ஜியோவும், டாடா நிறுவனமும் ஏர்டெல் மற்றும் வோடாபோனுக்கு எதிராக மனுவைத் தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jio, Tata oppose Airtel, Voda plea on TRAI's interconnect usage charges rules in HC

Jio, Tata oppose Airtel, Voda plea on TRAI's interconnect usage charges rules in HC
Story first published: Wednesday, January 4, 2017, 20:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X