ஐன.31க்குள் ஓய்வூதிய கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.. மத்திய அரசு உத்தரவு..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil

டெல்லி: தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஜனவரி 4-ம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1995 ஆம் ஆண்டின் ஊழியர்கள் பென்ஷன் திட்டம்(EPS) மற்றும் பிற ஓய்வூதிய திட்டங்களில் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் என அனைவரும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆதார் அட்டைக்கு விண்ணப்பித்து இன்னும் அட்டை பெறாதவர்கள் ஆதார் சேர்க்கை எண்ணை அளிக்க வேண்டும்.

கடைசி நாள்: ஜனவரி 31

ஓய்வூதியம் வாங்கும் உறுப்பினர் இன்னும் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவில்லை என்றால் 2017 ஜனவரி 31-ம் தேதிக்குள் அருகில் உள்ள ஆதார் அட்டைச் சேர்க்கை மையங்களை அணுகி விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதார் அட்டைச் சேர்க்கை மையங்கள் அருகில் இல்லாதவர்களுக்கு ஊழியர்கள் வருங்கால வைப்பு ஆணையம் ஆதார் அட்டைச் சேர்க்கைக்கான வசதிகளைச் செய்து தரும்.

 

ஆதார் அட்டை எண் இல்லாதவற்கள் என்ன செய்ய வேண்டும்?

ஓய்வூதிய உறுப்பினர்கள் அல்லது தனிநபர்கள் இன்னும் ஆதார் எண்ணைப் பெறவில்லை என்றால் அல்லது இன்னும் இனிமேல் தான் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்கள் என்றால் பின்வரும் ஆவணங்களை ஓய்வூதிய திட்டங்களின் கீழ் சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அளித்த அடையாள சான்றிதழ் மற்றும் யூஏஎன் இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.

ஓய்வூதிய உறுப்பினர் அல்லது ஓய்வூதியம் பெறும் சந்தாதாரின் ஆதார் சேக்கை ஐடி அல்லது ஆதார் சேர்க்கை கோரிக்கைக்கான நகலைச் சமர்ப்பிக்க வேண்டும்.

 

பின்வரும் ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டும்

1. வாக்காளர் அடையாள அட்டை
2. பான் கார்டு
3. பாஸ்போர்ட்
4. ஓட்டுநர் உரிமம்
5. அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் அல்லது ஒரு தாசில்தார் தனது உத்தியோகபூர்வ லெட்டர்பேட் மூலம் அளித்த புகைப்படத்துடன் கூடிய அடையாள சான்று.
6. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அளித்த பிற ஆவணம் ஏதேனும் ஒன்று.

மேலே கூறியுள்ள ஆவணங்களை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அமைத்துள்ள அலுவலரால் அவர்களது அலுவலக இணைப்புகளுடன் சரிபார்த்து பெற்றுக்கொள்வார்.

 

வெளிப்படையான ஆவணம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் இது பற்றி அறிக்கை வெளியிடும் போது மத்திய அரசு சேவைகள் மற்றும் பலன்களைப் பெறக்கூடியதற்கான ஒரு வெளிப்படையான ஆவணமாகவே ஆதார் அட்டை விவரங்கள் பெறப்படுவதாகத் தெரிவித்தனர்.

எதற்காக ஆதார் அட்டையை இணைக்க வேண்டும்

மேலும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சகம் ஓய்வூதிய உறுப்பினர்களுக்கு உதவுதற்காகச் சில ஏற்பாடுகளையும், இலவச சலுகைகளையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே தொடர்ந்து EPS, 1995-ன் கீழ் ஓய்வூதிய சலுகைகளைப் பெற ஆதார் விவரங்கள் தேவை என்று ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Aadhaar made mandatory for receiving benefits under EPS

Aadhaar made mandatory for receiving benefits under EPS
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns