போர்ப்ஸ் சாதனையாளர் பட்டியலில் 17 வயது இந்திய இளைஞர்..!

30 வயதுக்குட்பட்ட இந்த தொழில் அதிபர்களின் பட்டியலில் அவேரா ஹெல்த் சொலூயூசன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரின் வயது என்ன தெரியுமா?

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017ஆம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பதிப்பகத்தில் முப்பது வயதுக்குட்பட்ட உலகின் மிகச்சிறந்த தொழிலதிபர்கள், கண்டுபிடிப்பாளர்கள் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் சுமார் 30 இந்தியர்கள் இடம்பிடித்து சாதனை செய்துள்ளனர்.

30 வயதுக்குட்பட்ட இந்த தொழில் அதிபர்களின் பட்டியலில் அவேரா ஹெல்த் சொலூயூசன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரின் வயது என்ன தெரியுமா?

வெறும் 17 என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில் அதுதான் உண்மை. இனி இந்தப் பட்டியலில் உள்ள இந்திய தொழிலதிபர்கள் குறித்துப் பார்ப்போம்.

விவேக் கப்பார்த்தி

விவேக் கப்பார்த்தி

நியோலைட் என்ற நிறுவனத்தின் நிறுவனரான இவர் 27 வயது துடிப்பான இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஒரு ஒளிக்கதிர் சாதனைத்தை கண்டுபிடித்துள்ளார். இந்தச் சாதனம் மூலம் நாம் வீட்டிலேயே மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்திவிடலாம். எளிதில் கையில் கொண்டு செல்லக்கூடிய வகையில் தயாராகியுள்ள இந்தச் சாதனம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்குப் பயனை தருகிறது. மேலும் இவர் குழந்தைகளுக்கான சாதனம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.

பிரார்த்தனா தேசாய்

பிரார்த்தனா தேசாய்

டிரோன் மூலம் மருந்து பொருட்களை சப்ளை செய்யும் தொழிலை செய்து வரும் பிரார்த்தனா தேசாய் வெறும் 27 வயதை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிறந்த இவர் தற்போது இந்தச் சேவையை ருவாண்டாவில் செய்து வருகிறார். இவருடைய ஜிப்லைன் என்ற நிறுவனம் அந்நாட்டு மக்களுக்கு மருந்து பொருட்களை மிகச்சரியாக டிரோன் மூலம் சப்ளை செய்து வருகிறது.

ஷான் பட்டேல்

ஷான் பட்டேல்

28 வயது இளைஞரான ஷான் பட்டேல், ஏராளமான விஞ்ஞான புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிட்டு வருகிறார். ஹார்வர்ட் மெடிக்கல் பள்ளியில் படித்த இவர் ஆர்தோநிஞ்சா என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஒரே ஒரு மொபைல் ஆப் மூலம் மருத்துவர்கள் நேரடியாகச் சிகிச்சை பெற உள்ளவர்களிடம் ஸ்ட்ரீம்லைன் மூலம் சிகிச்சை தரும் வசதியை விரைவில் உருவாக்க உள்ளார்.

ரோஹன் சூரி

ரோஹன் சூரி

இவர்தான் இந்தக் கட்டுரையின் கதாநாயகன். வெறும் 17 வயதே உள்ள இவர் அவேரியா ஹெல்த் சொல்யூஷன் என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிறுவனம் ஒரு மேம்பட்ட மூளை அதிர்ச்சி பரிசோதனையை செய்து வருகிறது.

வருண் சிவராம்

வருண் சிவராம்

27 வயதை உடைய வருண் சிவராம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி டாக்டர் பட்டம் பெற்றவர். மேலும் ஸ்டான்போர்டு எனர்ஜி அமைப்பில் போர்டு அட்வைசராக இருந்தவர். மேலும் ஜார்டவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரச்சார யுக்தியின் அட்வைசராகவும் இருந்தவர். இவர் தற்போது எனர்ஜி செக்யூரிட்டி என்ற நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார்.

நேஹா குப்தா

நேஹா குப்தா

28 வயதே ஆன இந்தப் பெண், DAQRI என்ற நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சப்ளை பொறுப்பை நிர்வகித்து வருகிறார். மேலும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆதார தேவைகள் குறித்த பணிகளையும் பார்த்து வருகிறார்.

ஆதித்யா அகர்வாலா

ஆதித்யா அகர்வாலா

கிஷான் நெட்வொர்க் என்ற அமைப்பின் இணை நிறுவனராக ஆதித்யா அகர்வாலா, வெறும் 23 வயதை மட்டுமே உடையவர். சமூக பார்வையுடன் கூடிய தொழிலதிபரான இவர், சிறிய அளவில் விவசாயம் செய்பவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய விவசாயம் செழிக்க காரணமாக இருப்பவர்

அக்சயகண்ணா

அக்சயகண்ணா

இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள விளையாட்டு வீரர். 29 வயதான அக்சய கண்ண, அமெரிக்கன் கால்பந்து அணியான பிலடெல்பியா 76 என்ற அணியின் உதவி பிரசிடெண்ட் ஆக இருப்பவர்.

அனார்க்யா வர்தனா

அனார்க்யா வர்தனா

28 வயதான அனார்க்யா வர்தா, முதலில் கடந்த 2015ஆம் ஆண்டில் மேவரான் என்ற நிறுவனத்தில் முதலீட்டு ஆலோசகராகப் பணிபுரிந்து பின்னர் ரோதன்பெர்க் வெண்ட்சர் என்ற நிறுவனத்தில் இணைந்தார். முதலீடு குறித்த ஆலோசனை கூறுவதில் வல்லவர். இவர் கடந்த 2010ஆம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் அட்வேர்ட்ஸ் எக்ஸ்பிரஸ் பிரிவில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அக்சய் கோயல்

அக்சய் கோயல்

ஸ்டார்வுட் கேபிடல் என்ற நிறுவனத்தின் துணை தலைவராக உள்ள அக்சய் கோயலுக்கு வயது 28. ஸ்டார்வுட் கேபிடல் நிறுவனத்தில் மிக இளவயது துணை தலைவர் என்ற அந்தஸ்து இவருக்குக் கிடைத்தது. ஓட்டல் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களது வியாபாரம் மற்றும் வருமானத்தை அதிகரிப்பது இவரது பணி.

அஜய் யாதவ்

அஜய் யாதவ்

ரூமி என்ற நிறுவனத்தின் நிறுவனரான அஜய் யாதவுக்கு வயது 29. கன்ஸ்யூமர் டெக்னாலஜி பிரிவில் உள்ள இவர் அபார்ட்மெண்ட் வாடகைக்கு, ரூம் மேட், மற்றும் ரியல் எஸ்டேட் குறித்த பணிகளை செய்யும் நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

17-Year-Old Indian-Origin Entrepreneur Features In Forbes List

17 Year Old Indian Origin Entrepreneur Features In Forbes List
Story first published: Friday, January 13, 2017, 15:13 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X