ஜல்லிக்கட்டு அவசியத்தை உணர்த்தும் 'போஸ் இண்டிகஸ்'..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஆதி மனிதன் பூமியில் வாழ்ந்த நாள் முதல், நாகரிக மனிதன் வாழும் இன்றைய காலம் வரை நம்முடன் வாழ்ந்து வரும் விலங்குகளில் ஒன்று மாடுகள்.

10,000 வருடங்களுக்கும் அதிகமான பூர்வீகத்தைக் கொண்ட மாடுகளும் காளைகள் தென் ஆசிய பகுதிகளில் மட்டுமே இன்றைய உலகில் வாழ்ந்து வருகிறது. இதனைப் போஸ் இண்டிகஸ் என்று அழைக்கப்படுகிறது.

போஸ் இண்டிகஸ் வகையைச் சார்ந்த பெருவாரியான மாடுகள் இந்தியாவை மட்டும் சார்ந்துள்ளதாகச் சுருச்சி கன்சல்டன்ஸ் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் நொய்டாவை தலைமையாகக் கொண்டு டைரி துறையில் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளைச் செய்து வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் சுமார் 25 வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது.

போஸ் இண்டிகஸ் வகை மாடுகளுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு..?

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

தமிழர்கள் தற்போது அனைவரும் போராடும் ஜல்லிக்கட்டுக்கான அடிப்படை காரணமாக இருக்கும் சத்தான பால், தமிழ் மக்களின் ஆரோக்கியம், மாடு வளர்ப்பு, பால் வர்த்தகத்தைச் சார்ந்து இருக்கும் தமிழ் மக்களின் வாழ்வாவாதரத்தை காக்கும் முயற்சி எனப் பல காரணங்கள் இருந்தாலும் அனைத்திற்கும் மேலாக நம்முடை பாரம்பரியத்தைக் காப்பது தமிழராகிய நமக்கு முக்கியக் கடமை.

தமிழ்நாடு முதல் உலக நாடுகள் வரை

தமிழ்நாடு முதல் உலக நாடுகள் வரை

இதற்காகத் தமிழக இளைஞர்கள் கையில் எடுத்துள்ள அமைதியான போராட்ட முறை இந்தியாவை மட்டும் இல்லாமல் உலக நாடுகளை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் துவங்கிய முதல் நாம் A1 பால் A2 பால் என்னும் வார்த்தை நாம் காதுகளில் கேட்டுக்கொண்ட இருக்கிறது.

A1 பால் மற்றும் A2 பால் குறித்து அதன் பாதிப்புகள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் மட்டும் அல்லாமல், அதனைச் சார்ந்துள்ள வர்த்தகத்தையும் விவரித்துள்ளது.

 

 A1 பால்

A1 பால்

ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் மாடுகள் குளிர் நிறைந்த இடத்தில் உள்ளதால் இதன் பாரம்பரியமான (போஸ் இண்டிகஸ்) மரபணுவிலேயே மாற்றம் ஏற்பட்டு இவை உற்பத்தி செய்யப்படும் பாலில் இயல்பாக இருக்கும் போலைன் என்னும் ஆமினோ அமிலம் Histidine ஆக மாறியுள்ளது.

இவை மனிதனின் உடலில் செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தி அமினோ அமிலத்தின் அளவு அதிகரித்துவிடும். இவை உடலில் BCM7 என்ற பெப்டைட்-ஐ உற்பத்தி செய்யும்

 

1 லிட்டர் A1 பால்

1 லிட்டர் A1 பால்

சுருச்சி கண்சல்டன்ஸ் செய்த ஆய்வின் படி 1 லிட்டர் A1 பாலில் 34-32 கிராம் கேசின் உள்ளது இதில் 9-12 கிராம் BCM7 உள்ளது.

பாதிப்புகள்

பாதிப்புகள்

குழந்தைகள்: BCM7 குழந்தைகளுக்கு ஆட்டிசம் (Autism), டைப் 1 நீரிழிவு மற்றும் திடீர் மரணத்தையும் ஏற்படுத்தும்.

பெரியவர்களுக்கு: CAD, இதயக் கோளாறு, நீரிழிவு, Ulcerative colitis, Multiple sclerosis, மனநோய், Parkinson மற்றும் Schizophrenia போன்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்தும் என்று சுருச்சி கண்சல்டன்ஸ் தெரிவித்துள்ளது.

 

A2 பால்

A2 பால்

இந்தியாவில் இருக்கும் பாரம்பரியமான மாடுகள் அனைத்தும் (செயற்கை கருவூட்டல் செய்யப்படாத மாடுகள்) தற்போதைய நிலை வரை பாதுகாப்பான A2 பால் சுரக்கிறது என்று மத்திய அரசும் உறுதி செய்துள்ளது.

A1 பாலில் இருக்கும் அடிப்படியான பிரச்சனை செரிமானம். A2 பால் மனித உடலில் எளிதாகச் செரிமானம் ஆகக் கூடியவை என்பதால் மனிதனுக்குப் பாலின் முழுமையாகச் சேர்கிறது.

இது இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதம். இதனை நாம் பாதுகாக்க வேண்டும்.

 

வர்த்தகம்

வர்த்தகம்

தற்போதைய நிலையில் நியூசிலாந்து, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் ஆமெரிக்கா போன்ற பெரு நகரங்கள் A2 பால் வகையை நோக்கிச் செல்ல துவங்கியுள்ளது.

இந்நாடுகளில் ஏற்பட்டுள்ள A2 பால் தட்டுப்பாட்டின் வாயிலாகவே இந்தியாவில் தற்போது பிரச்சனை வெடித்துள்ளது. குறிப்பாகப் பிற மாநிலங்கள் இதை உணராத நிலையில் தமிழ் மக்கள் இதனை உணர்ந்துள்ளனர்.

 

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

ஆஸ்திரேலியாவில் BCM7 இல்லாத A2 பாலின் விலை ஒரு லிட்டர் 28 ரூபாய், சாதாரண A1 பாலின் விலை வெறும் 11 ரூபாய். இதுவே பல கார்பரேட் பால் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கிறது.

இதனாலே இந்தியாவில் இருக்கும் பாரம்பரிய மாடுகள் வெளிநாடுகளுக்கக் கடந்த 5 வருடங்களாகத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

 

ஜல்லிக்கட்டு அவசியம்

ஜல்லிக்கட்டு அவசியம்

இந்தியாவின் பாரம்பரிய மாடுகள் மற்றும் காளைகளின், வீரியம், தன்மையைப் பாதுகாக்கும் ஒரு விளையாட்டு தான் இந்த ஜல்லிக்கட்டு. அதனைத் தமிழனின் பாரம்பரியமாக இருப்பது நம்முடைய சிறப்பு அதனைத் தமிழராகிய நாம் காப்பாற்றாமல் வேறுயார் காப்பார்கள்.

போராட்டம்

போராட்டம்

தமிழ்நாட்டில் தற்போது நடந்து வரும் போராட்டத்தின் மூலம் இந்தியாவில் மாடு மற்றும் பால் ஏற்றுமதிக்கு மத்திய அரசுக்குத் தடை விதிக்க வேண்டும்.

சுருச்சி கன்சல்டன்ஸ்

சுருச்சி கன்சல்டன்ஸ்

இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வுகள்

சுருச்சி கன்சல்டன்ஸ்1
சுருச்சி கன்சல்டன்ஸ்2
சுருச்சி கன்சல்டன்ஸ்3

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Jallikattu is needed to save our Bos Indicus

Jallikattu is needed to save Bos Indicus - Tamil Goodreturns
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X