என்னது மோடி இப்படியா..? கொஞ்சம் கஷ்டம் தான்..?

பணியே பெரிதென நினைத்து, மேற்கூறிய உத்திகளையும் தனதாக்கி இருக்கும் பாரத பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவது கடினமான செயல் ஆகும்.

By Siva Lingam
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட பணி நாட்கள், தினசரி விளக்கக் காட்சிகள், கூட்டங்கள், பின் தொடர் கூட்டங்கள் மற்றும் திடீர் சோதனை போன்ற உத்திகளைக் கையாளுவதே சாதாரண மனிதனைத் தலைவனாக்கும். தன் பணியே பெரிதென நினைத்து, மேற்கூறிய உத்திகளையும் தனதாக்கி இருக்கும் பாரத பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவது கடினமான செயல் ஆகும்.

மோடியின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து கிடைத்த சில தகவல்களின் படி, கடந்த வாரம் நடைபெற்ற செயலாளர் குழுவின் கூட்டத்தில் தாங்கள் திட்டமிட்ட பணியை நிறைவு செய்வதற்காக 18 மணி நேர கால அட்டவணையை தயார் செய்து அந்தப் பணியை பிரதமர் முடித்துள்ளார் எனவும் அவரைப் போலவே அயராது உழைத்தால் பிரதமர் மகிழ்ச்சியோடு இருப்பார் எனவும் கூறுகின்றனர்.

கோட்பாடுகள் இல்லை, நடைமுறைப்படுத்துதல் மட்டுமே

கோட்பாடுகள் இல்லை, நடைமுறைப்படுத்துதல் மட்டுமே

கோட்பாடுகள் கொடுக்க வேண்டாம், நடைமுறைப்படுத்துதல் ஒன்றே எந்தச் செயலையும் செவ்வனே செய்து முடிக்க ஏதுவாக இருக்கும் என்ற கொள்கைகள் அவரின் முன்னுரிமை ஆகும்.

பிரதமர் மோடி எவ்வாறு தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றுவார் என அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் கூறிய தகவல்கள் உங்களுக்காக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

"கோட்பாடுகளுக்கு ஆதரவாக இருக்க மாட்டார், நடைமுறை நடவடிக்கைகளை அவர் விரும்புவார். அவர் எல்லா மந்திரிகளையும் கேள்வு கேட்பார். நல்ல பதில்களை எதிர்பார்ப்பார். நீங்கள் அவரின் கேள்விகளுக்கு தயாராக இல்லை என்றால் அதற்கான அவகாசம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு ," என அமைச்சர் ஒருவர் கூறுகிறார்.

 

சிறப்பான மற்றும் எளிய முறையில் கையாளுதல்

சிறப்பான மற்றும் எளிய முறையில் கையாளுதல்

நீங்கள் ஒரு ஆவணத்தை அல்லது அறிக்கையைத் தயார் செய்கிறீர்கள் என்றால் மொத்த கட்டுரையையும் கையில் வைத்திருக்க வேண்டியதில்லை, அந்த அறிக்கையின் மையக் கூறுகளின் சுருக்கத்தை வைத்திருந்தால் போதும் என மற்றொரு அமைச்சர் கூறுகிறார்.

தெளிவற்ற முறையில் இருக்கும் நடைமுறை தடைகளை பிரதமர் வெறுக்கின்றார் எனவும் தெரிவிக்கிறார்.

 

தொடர் நடவடிக்கைகள் மூலம் பின் தொடர்தல்

தொடர் நடவடிக்கைகள் மூலம் பின் தொடர்தல்

பல அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி, எண்ணிப் பார்க்க வேண்டிய கருத்து தெளிவாக இல்லை என்றாலோ, அவரது கேள்விகளுக்கு முழுமையான பதில்கள் இல்லாத பட்சத்திலும் பிரதமர் பின் தொடர் கூட்டங்களை வலியுறுத்துகிறார். இதனால், அதிகாரிகள் மீண்டும் அவரது அலுவலகத்திற்கு வேகமாகச் செல்ல வேண்டும். 'அது ஒரு பெரிய தனியார் நிறுவனங்களில் நடக்கும் ஆட்சிக் குழு கூட்டத்தினைப் போல் இருக்கும்' என அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

நீண்ட கால பணி நாட்கள்

நீண்ட கால பணி நாட்கள்

பட்ஜெட்டை சமர்ப்பிக்க வேண்டியதன் காரணமாக இந்த நாட்களில் பணிக்கான கால அட்டவணையானது மிகவும் கடினமாக உள்ளது.

குறிப்பாக, மந்திரிகள், நிதி சார்ந்த அதிகாரிகள், தொழில் மற்றும் வணிகம் சார்ந்த அமைச்சர்கள், உள்கட்டமைப்பு அமைச்சர்கள் இந்த நீண்ட கால நாட்களில் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் அனைத்து அமைச்சரவை மந்திரிகள் காலை 9.00 மணிக்கு தங்கள் அலுவலகங்ளுக்கு வருவதற்கு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மூத்த அதிகாரிகளுடன் ஆன ஆலோசனைக் கூட்டம் சரியாக இரவு 9.00 மணிக்கு தொடங்கும்.

 

இடைவெளி இருக்குமா?

இடைவெளி இருக்குமா?

திட்டமிட்ட படி புதிய நிதிநிலையை தாக்கல் செய்துவிட்டால் அதன் பின்னர் வாழ்க்கை எளிதாக அமையும். ஆனால் பெரும்பாலும் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. வேலை செய்யும் பாணியை மோடி அரசு மாற்றச் சாத்தியமில்லை. நான் காலை 9.00 மணிக்கு என் அலுவலகத்திற்கு வந்து விடுவேன், ஆனால் இரவு 9.00 மணிக்குள் வீட்டுக்குச் செல்வது மிகவும் அரிதான ஒன்று என அமைச்சர் ஒருவர் கூறினார்.

'babus' குறித்த கருத்து

'babus' குறித்த கருத்து

அமைச்சர்கள் அலுவலகத்தில் இருக்கும் வரை அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல முடியாது. மோடியின் வழியைப் பின்பற்றி, பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க மாலைப் பொழுது மிகவும் கடந்து விட்ட நேரத்திலும், அதிகாலையிலும் கூட அழைப்பு வரும் என அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தூய்மை இந்தியா திட்டம்

தூய்மை இந்தியா திட்டம்

தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் கோட்பாடு. இதனை அவருக்குக் கீழ் இயங்கும் அரசாங்கமும் மெதுவாக ஏற்றுக் கொண்டது.

பிரதமர் மோடி ஒரு நாள் அலுவலகத்தில் புகை சூழ்ந்திருப்பதைக் கண்டார், அமைதியாக வெளியே வந்து 'இங்கே புகை பிடிக்காதீர்கள்' என்ற பலகையை வைத்தார். மேலும் மேசைகள் மீது சிதறிக் கிடந்த பல அழுக்கு தேநீர் கப்புகளை அகற்றி அலுவலகங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற அச்சாரத்தை தொடங்கி வைத்தார். அவரின் இச்செயல் தூய்மையைப் பற்றி ஆணி அடித்தாற் போல் எங்களுக்கு விளக்குவதற்கு போதுமான செய்தியாக இருந்தது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

பிரதமர் மோடியை ஏமாற்றுவது எளிதா?

பிரதமர் மோடியை ஏமாற்றுவது எளிதா?

வேலையைத் தவிர்கின்ற அல்லது வேலையைச் செய்யாமல் இருப்பவர்களைக் கண்டறியும் தந்திரங்கள் பிரதமர் மோடிக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் அவர்களைப் பிரதமர் கணக்கெடுப்பது பற்றி ஆச்சர்யம் இல்லை என அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What it takes to work with a workaholic PM like Modi

What it takes to work with a workaholic PM like Modi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X