மாறன் சகோதரர்கள் விடுதலையால் சன் நெட்வோர்க் பங்குகள் தடாலடி உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலாநிதி மாறனின் தென் இந்தியாவில் மிகப் பெரிய நெட்வொர்க்கான சன் டிவி பங்குகளின் விலை 52 வாரங்களுக்குப் பிறகு இன்று 23.92 சதவீதம் உயர்ந்தது.

 

2014-ம் ஆண்டு மாறன் சகோதரர்கள் மற்றும் மலேஷிய தொழில் அதிபர் டி ஆணந்த கிருஷ்னா ஆகியோர் மீது ஏர்செல் நிறுவனத்தை வலுக்கட்டாயமாக மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க செய்ததாக சிபிஐ வழக்குத் தொடர்ந்தது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தீர்ப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தீர்ப்பு

இந்த வழக்கை விசாரித்து வந்த டெல்லி சிபிஐ கோர்ட் நேற்று அளித்த தீர்ப்பில் போதுமான ஆதாரம் இல்லாததால் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் மற்றும் பிறரை வழக்கில் இருந்து விடுதலை செய்தது அறிவித்தது.

2ஜி அழைகாற்று

2ஜி அழைகாற்று

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தீர்ப்பளித்த சிறப்பு நீதிபதி ஓ பா சாய்னி தான் 2ஜி அலைக்காற்று வழக்கையும் விசாரித்து வருகின்றார். ஆனால் இந்த வழக்கு 2ஜி வழக்கில் இருந்து தனியாக விசாரிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிபுனர்கள் கருத்து
 

நிபுனர்கள் கருத்து

கோடாக் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஸ்ரீகாந்த் சவுகான் இது பற்றிக் கூறுகையில் நீண்ட காலத்திற்குப் பிறகு சன் டிவி பங்குகள் நல்ல முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. எனவே ஒரு பங்கின் விலை 750 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பங்குகளின் தற்போதைய நிலை

பங்குகளின் தற்போதைய நிலை

இன்று பங்குச் சந்தை முடிந்த பிறகு 23.92 சதவீதம் உயர்ந்து ஒரு பங்கின் விலை 683.85 ரூபாயாக உள்ளது. எப்போது சராசரியாக 86,000 பங்குகள் தினமும் வர்த்தகம் ஆவது இன்று மாட்டும் 7.82 லட்சம் சன் டிவி பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளன.

மாறன் சகோதரர்களுக்கு இன்று இருக்கும் இரண்டு ஆப்பு

மாறன் சகோதரர்களுக்கு இன்று இருக்கும் இரண்டு ஆப்பு

ஆனால் இந்த வழக்கில் பண பரிமாற்றத்திற்கு உதவியதாக ப சிதம்பரம் மீது உள்ள வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 2 மணிக்கும், வியாழக்கிழமை இருவரையும் விடுவித்ததை எதிர்த்து சிபிஐ சுப்ரீம் நீதிமன்றத்தில் மேல் முறையிடு செய்வதும் நடக்க உள்ளது. இந்த இரண்டு கண்டத்தில் இருந்து இருவரும் வெளிவந்தால் மட்டுமே மாறன் சகோதரர்கள் முழுமையாக வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun TV Shares Surge 27%, Hit Fresh 52-Week High

Sun TV Shares Surge 27%, Hit Fresh 52-Week High
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X