புதிதாக தொழில் தொடங்குவோர் நடைமுறை படுத்தவேண்டிய உலகத்தரமான பணி நெறிமுறைகள்..!

நம்மில் பலர் ஒரு நிறுவனம் நன்றாகச் செயல்பட்டால் அதற்குக் காரணம் அதன் சிறந்த நிர்வாகம் தலைமைப் பண்புகள் என நினைக்கிறோம். இது சில நேரங்களில் உண்மையாக இருந்தாலும் பலரும் மறந்துவிடும் முக்கியமான ஒரு விஷயம

By Jeevan Raj
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மில் பலர் ஒரு நிறுவனம் நன்றாகச் செயல்பட்டால் அதற்குக் காரணம் அதன் சிறந்த நிர்வாகம் தலைமைப் பண்புகள் என நினைக்கிறோம். இது சில நேரங்களில் உண்மையாக இருந்தாலும் பலரும் மறந்துவிடும் முக்கியமான ஒரு விஷயம் உண்டு. அது அந்த நிறுவனத்தின் பண்பாடும் பணியாளர்களின் ஒழுக்க நெறிகளும்தான்.

சக்திவாய்ந்த நெறிமுறைகள் சிறந்த நிர்வாகத்திற்கும் புதுமையான உத்திகளுக்கும் சற்றும் சளைத்தவை அல்ல. உலகத்தரம் வாய்ந்த பணி தொடர்பான நெறிமுறைகள் பல்வேறு விதமான திறமைகள் மூலம் வரையறுக்கப்பட்டாலும், அவற்றில் சில ஒவ்வொரு நிறுவனமும் கண்டிப்பாகத் தன்னுடைய தினசரி செயல்பாடுகளில் நடைமுறைப்படுத்த வேண்டியவையாக இருக்கின்றன. இவை என்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.

ஒழுக்கம்

ஒழுக்கம்

ஒழுக்கம் என்பது குறிப்பிட்ட நேரத்தில் பணியை முடிப்பது மட்டுமல்லாமல் நெறிமுறைகளில் முதலானதும் தலையாவதும் ஆகும். பல பணியாளர்கள் ஓரிரு மணி நேரம் பணிக்குத் தாமதமாக வருவது பணியைப் பாதிக்காத வரையில் ஒன்றும் தவறல்ல எனக் கருதுகிறார்கள்.

ஆனால் அவர்கள் கவனிக்கத் தவறுவது என்னவென்றால் ஒவ்வொரு முறையும் குழுவின் ஒரு பணியாளர் தாமதமாக வரும்போதும் தன்னுடைய கெடுவைத் தவறவிடுவதும் மீட்டிங் அல்லது கூட்டத்தினை மறுதேதியிடுவதும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களின் கட்டுக்கோப்பை சிதைக்கக் கூடியது என்பதுடன் காலம் கடக்கும்போது இது தீவிரமடையக் கூடும்.

உங்கள் பணியாளர்களை நிறுவனத்தின் ஒழுக்க வரைமுறைகளுக்குள் கொண்டுவருவது சற்று சவாலான விஷயம்தான். ஆனால் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஜெர்மானியர்கள் இரண்டாம் உலகப் போரை அதிர்ஷ்டத்தினால் அல்லாமல் அவர்களிடம் இருந்த உலகிலேயே மிக ஒழுக்கமான இராணுவப்படையால் தான் அது முடிந்தது என்பது உங்களுக்குப் புரியும்.

நடைமுறையில் உற்றுப் பார்த்தால் சில நிறுவனங்கள் நேரக் கெடுபிடிகளைத் தங்கள் பணியாளர்களின் மீது சுமத்தவில்லை என்றாலும் நன்றாகக் கவனித்தால் இந்த நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை முழுமையாக எட்டியிருப்பதை உணரமுடியும். அதே நேரம் புதிய தொழில் முயற்சிகள் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட செயல்முறைகளையும் தேவைகளையும் கொண்டவை.

 

நேர்மை

நேர்மை

இது ஒவ்வொரு நிறுவனத்தின் வெற்றிக்கும் அடிப்படையான ஒரு காரணம். மற்ற எந்த ஒரு உறவு முறைகளையும் போல நம்பகத் தன்மையற்ற ஒரு செயல்பாடு விரைவிலேயே வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதோடு நீடிக்கவும் வாய்ப்பில்லை. மேலும் நேர்மையற்ற செயல்பாடு தகவல் தொடர்பு, நம்பிக்கை, மதிப்பு, நாணயம் மற்றும் நிறுவனத்தின் எந்த ஒரு அடிப்படை இலக்கணத்தின் மாண்பையும் பாதிக்கக் கூடியது.

இந்த வளர்ந்துவரும் இன்டெர்நெட் உலகில் ஒரே நேரத்தில் 300 கோடி பேர் இணையத்தில் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சூழ்நிலையில் உங்கள் தொழில் முயற்சிகளில் நீங்கள் மிகவும் நேர்மையான முறையில் இயங்கவேண்டியது மேலும் மேலும் அவசியமாகிறது; அது உங்கள் பணியோ அல்லது உங்கள் பணியாளர்களுடனான பணியோ. தவறான செய்திகள் இந்தத் தகவல் தொழில்நுட்ப யுகத்தில் மின்னல் வேகத்தில் பரவிவிடக்கூடிய வாய்ப்புள்ளது என்பதால் உங்கள் நிறுவனம் தொடர்பான எந்த ஒரு நேர்மையற்ற செயலும் இணையத்தில் செய்தியாகக் கசிந்துவிட்டால் அது மக்களால் மறக்கப்படுவது மிகமிகக் கடினமான ஒன்றாக இருக்கும்.

உங்கள் பணியாளர்கள் தங்களுக்கும் தங்கள் குழுப் பணியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஏன் தங்கள் பணிப்பொறுப்புத் தொடர்புள்ள எந்த ஒருவரிடத்திலும் கூட 100 சதவிகிதம் உண்மையாக இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். இன்னும் ஒருபடி மேலே போய்ச் சொல்லவேண்டுமானால் எந்த ஒரு தவற்றையும் விட அதிகம் தண்டிக்கப்படவேண்டியது இந்த நேர்மையற்ற தன்மை எனலாம்.

தவறுகள் நடக்கூடும் என்பதும் தவறு செய்யாதவர் எவரும் இல்லை என்பது நாமறிந்ததே. ஆனால் தவறுகளைச் சரி செய்யவும் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் பணியாளர்கள் அல்லது குழு உறுப்பினர்கள் தங்கள் தவறுகளைக் கூடிய விரைவில் தெரியப்படுத்தவேண்டியது அவசியம்.

 

பரவலாக்கத்திற்கு ஒத்துழைப்பு

பரவலாக்கத்திற்கு ஒத்துழைப்பு

ஒரு நிறுவனம் அல்லது அதன் நிறுவனர் செய்யவேண்டிய மற்றுமொரு முக்கியமான பணி தன்னுடைய குழு பல்வேறு பண்பாட்டுப் பரவலைக் கொண்டதாக இருக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்துவது. ஒரு மொழிக்கும் அதிகமான மொழியை அறிந்த பணியாளர்களைப் பணியில் அமர்த்துவதன் மூலம் இதனை நாம் துவக்க முடியும். நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்பானிய அல்லது ஜெர்மானிய மொழியைக் கற்றவர்களைப் பணியில் அமர்த்துவது ஒரு உதாரணம்.

பண்பாட்டுப் பரவல் என்பது அதிகம் வலியுறுத்தப்படுவதால் வெற்றிகரமான எந்த ஒரு தொழிலுக்கும் ஒரு இன்றியமையாத பகுதியாக உள்ளது. பல்வேறு நாட்டுமக்கள் தங்களுடைய மாறுபட்ட வாழ்க்கை வழிமுறைகளை உங்களுடைய நிறுவனத்திற்குள் கொண்டுவந்து உங்களுடைய பணி செயல்முறைகளை மேம்படுத்த உதவியாக இருப்பர். இதனால் பணி மிகவும் சுமூகமாகவும் குறிக்கோள்களையொட்டியும் நடக்க முடியும்.

 

நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

ஒவ்வொரு உறுப்பினர் அல்லது பணியாளரும் அவருடைய பொறுப்பு எவ்வளவு சிறியதாக அல்லது பெரியதாக இருந்தாலும் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருப்பது அவசியமானதாகிறது. டான்ஸ் ஸ்குவாட் நடனமாடும் குழுக்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவர்கள் பல ஆண்டுகளாகக் கடினமான பயிற்சி மேற்கொண்டு தங்கள் சக நடனக் கலைஞர்களுடனான நம்பகத்தன்மையை வலுவூட்டுவதால் அவர்களால் மேடையில் ஆச்சரியப்படத்தக்க மிக அருமையான அதே நேரம் ஆபத்துக்கள் நிறைந்த நடன அசைவுகளைச் செய்துகாட்ட முடிகிறது.

இந்த அடிப்படை உங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் அணிக்கும் பொருந்தும். அது தலைமை அதிகாரியோ அல்லது அடிமட்ட ஊழியரோ ஒருவரை ஒருவர் சார்ந்து தங்கள் பணியைச் செவ்வனே செய்து முடிக்க முடியாது என்றால் பேயோ பூதமோ புகுந்துதான் அதைச் செய்யவேண்டும். ஏனென்றால் அவர்களால் ஒருவரை ஒருவர் சாராமல் எந்தப் பணியும் செய்து முடிக்க முடியாது.

 

தரத்தின் மீது கவனம்

தரத்தின் மீது கவனம்

இறுதியாக, ஒரு நிறுவனம் வெற்றியடைய வேண்டுமானால் அதற்கு முழுமுதல் முன்னுரிமை வாடிக்கையாளரின் திருப்தி. வாடிக்கையாளர்களின் திருப்தி உங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருள் அல்லது சேவையின் தரத்திற்கு நேரடித் தொடர்பு உடையதாக உள்ளது.

நிச்சயமாகப் பொருள் அல்லது சேவையின் தரம் என்பதைத் தாண்டி வாடிக்கையாளர் சேவையில் நிறைய நுணுக்கங்கள் இருந்தாலும் தரம் அவற்றில் தலையாவதாக இருக்கும். பொருள் அல்லது சேவை தரமற்றதாக இருந்தால், வாடிக்கையாளர் சேவை, சமூக வலைத்தள ஈடுபாடு, உத்திரவாதம், விளம்பரம் ஆகியவை அதிகம் எடுபடாது.

பணி நெறிமுறைகள் உங்கள் நிறுவனத்தின் உள்ளார்ந்த வெற்றியினைப் பிரதிபலிக்கிறது. ஒரு உயரிய பண்பாடு மற்றும் பணியின்பால் சரியான அணுகுமுறை இல்லாமல் எந்த ஒரு நிறுவனமோ அல்லது குழுவோ பெரிய வெற்றிகளை உலகிலேயே சிறந்த தலைமையையும் நிர்வாகத்தையும் கொண்டிருந்தாலும் பெற முடியாது என்பதே உண்மை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Global Work Ethics Every Founder Must Bring to His Startup

5 Global Work Ethics Every Founder Must Bring to His Startup
Story first published: Saturday, February 4, 2017, 10:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X