மேகி நூடல்ஸை மீண்டும் திரும்பப் பெறுகின்றது நெஸ்ட்லே...!

மேகி நூடில்ஸை திரும்பப் பெறுகின்றோம்..! ஆனால் அது சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மேகி நூடில்ஸை இந்தியாவில் இருந்து ஆறு மாநிலங்கள் மற்றும் நேப்பாலில் இருந்தும் நடத்தப்பட்ட ஆய்வில் அதிகமான ஈயம் கலக்கப்பட்டு இருந்ததாகப் புகார் எழுந்துள்ளதால் சூப்பர் மார்க்கெட் சந்தைகளில் இருந்து மேகி நூடில்ஸை மீண்டும் திரும்பப் பெறுகின்றது நெஸ்ட்லே இந்தியா.

 

நெஸ்ட்லே நிறுவனத்தில் அதிகப்படியாக விற்பனையாகும் தயாரிப்பான மேகி நூடல்ஸ் குறித்த தற்போதைய சூழலை வெள்ளிக்கிழமை விளக்கிய இந்திய பிரிவு அந்தப் புகார் ஆதாரமற்றவை என்றும் உண்ணுவதற்கு ஏற்றதே என்றும் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இல்லை என்று கூறியுள்ளது.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

கடந்த சில நாட்களாக 12 சதவீதம் வரை நெஸ்ட்லே இந்தியாவின் பங்குகள் விலை குறைந்துள்ளது. இது 9 வருடக் குறைவு என்று புதன் கிழமை நெஸ்ட்லே தயாரிப்புகள் ஆய்வின் போது அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறு நகரங்களில் ஆய்வு

சிறு நகரங்களில் ஆய்வு

சிறு நகரங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மேகி நூடல்ஸ்களைத் தொடர்ந்து ஆய்வு செய்ததில் 7 மடங்கு அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக ஈயம் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நம்பிக்கை இழப்பு
 

நம்பிக்கை இழப்பு

ஒரு வேலை மீண்டும் மேகி நூடல்ஸ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அப்போது முற்றிலும் பாதுகாப்பானது என முடிவுகள் வந்தாலும் நெஸ்ட்லே நிறுவனத்திற்கு இந்திய வாடிக்கையாளர்களிடம் மீண்டும் நம்பிக்கை கொண்டுவர பெரிதாக வேலை செய்ய வேண்டும் என்றும் ப்ளூம்பெர்க் புலனாய்வு நுகர்வோர் பொருட்கள் ஆய்வாளர் தோமஸ் கூறினார்.

இறக்க வாய்ப்பு

இறக்க வாய்ப்பு

கடந்த 30 வருடங்களாக மேகி நூடல்சை இந்தியாவில் விற்று வருகின்றது நெஸ்ட்லே. அதிகபட்ச அளவான ஈயத்தை உணவில் எடுத்துக்கொள்ளும் போது இறப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உணவுப் பொருட்களில் இருந்து அதனை அவ்வளவு எளிதாகப் பிரித்து எடுக்கவும் இயலாது.

நேப்பால்

நேப்பால்

மேகி நூடுல்சை இறக்குமதி மற்றும் விற்பனை என அனைத்துக்கும் தடை விதித்துள்ள நேப்பால் அரசு நுகர்வோரையும் இந்த உணவுப் பொருட்களை உன்ன வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸ்களுக்குச் சிங்கப்பூரில் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் புகார்கள்

குற்றவியல் புகார்கள்

இந்தியாவில் இருந்து குறைந்தது ஆறு மாநிலங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு விளம்பர தூதுவர்கள் மீதும் குற்றவியல் புகார்கள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் இந்திய உணவுத் துறையும் இது குறித்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

ரீடெய்ல் நிறுவனங்கள்

ரீடெய்ல் நிறுவனங்கள்

இந்தியாவின் மிகப் பெரிய ரீடெய்ல் நிறுவனங்களான ஃபியூச்சர் குழுமம், வால் மார்ட் ஸ்டோர்ஸ் நிறுவனம், இந்திய இராணுவ கேண்டின் உள்ளிட்ட இடங்களில் தற்காலிகமாக மோகிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nestle withdraws Maggi noodles, but insists product is ‘safe’

Nestle withdraws Maggi noodles, but insists product is ‘safe’
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X