வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர்களின் வருமானம் 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாயாக இருக்கும் போது 10 சதவீதமாக இருந்த வருமான வரியை 5 சதவீதமாகக் குறைத்து 2017 பட்ஜெட்டில் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம்
இதுவே 50 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை வருமான இருப்பவர்களுக்கு 30 சதவீத வரிக்குக் கூடுதலாக 10 சதவீதம் கூடுதல் கட்டணமாக விதித்துள்ளது.
2017 பட்ஜெட்டில் அறிவித்துள்ள வருமான வரி அளவீடுகள் ஏப்ரல் 1 முதல் எப்படி இருக்கும் என்று இங்குப் பார்ப்போம்.

பொதுப் பிரிவினர் (60 வயதுக்கு உட்பட்டோர்)
60 வயதுக்கு உட்பட்ட பொதுப் பிரிவினர் 2.5 லட்சம் வரை வருமான உள்ளவர்கள் வரி ஏதும் செலுத்த தேவையில்லை. 2,50,001 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும், இதுவே 5,00,001 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீத வரியும், 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

மூத்த குடிமக்கள்
60 வயது முதல் 80 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை, இதுவே 3,00,001 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வருமான உள்ளவர்கள் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இதுவே 5,00,001 ரூபாய் முதல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.

அதி மூத்த குடிமக்கள்
80 வயதுக்கும் அதிகமான அதி மூத்த குடிமக்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 500,001 ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும். 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமான உள்ளவர்கள் 30 சதவீதம் வரை வரி செலுத்த வேண்டும்.