வளர்ச்சி பாதையில் இருக்கும் ஓரே உணவு ஸ்டார்ப்அப் நிறுவனம் 'பாசோஸ்'..!

ஹாட் நியூஸை ஷாட்டா படிக்க: தமிழ் குட்ரிட்டன்ஸ் இன் 'ஸ்பீக்கர் பாக்ஸ்'

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செபி-யின் புதிய தலைவர் அஜய் தியாகி..!

செபி-யின் புதிய தலைவர் அஜய் தியாகி..!

மத்திய நிதியமைச்சகத்தின் துணை செயலாளராக இருக்கும் அஜய் தியாகி அவர்களை மத்திய அரசு செபி அமைப்பின் தலைவராக நியமித்துள்ளது.

இந்திய பங்குச்சந்தையின் கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தற்போதைய தலைவர் யு.கே.சின்ஹா மார்ச் 1 முதல் இப்பதவியில் இருந்து வெளியேறும் காரணத்தால் இப்பதவியில் அஜய் தியாகி நியமிக்கப்படுகிறார்.

#SEBI

 

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவத்தின் லாபம் 33% உயர்வு..!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவத்தின் லாபம் 33% உயர்வு..!

மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் இந்நிறுவனத்தின் விற்பனை அளவு அதிகளவில் குறைந்தாலும் டிசம்பர் 31 உடன் முடிவடைந்த காலாண்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவத்தின் லாபம் 33% உயர்வடைந்துள்ளது.

இதன் மூலம் இந்நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபத்தின் அளவு 1,112.27 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

#Mahindra #Q3 #profit

 

டாடா கெமிக்கல் நிறுவனத்தின் புதிய முதலீட்டுத் திட்டம்..!

டாடா கெமிக்கல் நிறுவனத்தின் புதிய முதலீட்டுத் திட்டம்..!

டாடா குழுமத்தின் கீழ் இயங்கி வரும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவன டையட்ரி பைபர் மற்றும் சிலிக்கா ஆகியவற்றைத் தயாரிக்க ஆந்திர பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலத்தில் சுமார் 565 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.

இதனுடன் ஜனவரி 27ஆம் தேதியன்று டாடா கெமிக்கல் நிறுவனம் ஆந்திர மாநில நெல்லூரில் 270 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய பயோடெக்னாலஜி பரிவைத் துவங்க இம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

#TATA #TATA Chemicals

 

வளர்ச்சி பாதையில் இருக்கும் பாசோஸ்.. வருவாயில் 65 சதவீத வளர்ச்சி..!

வளர்ச்சி பாதையில் இருக்கும் பாசோஸ்.. வருவாயில் 65 சதவீத வளர்ச்சி..!

இந்தியாவில் உணவு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொர்ந்து வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர்களை இழந்து வரும் நிலையில் பாசோஸ் நிறுவனம் மட்டும் சிறப்பான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இதன்படி 2016ஆம் ஆண்டில் பாசோஸ் நிறுவனத்தின் வருவாய் 37.5 கோடியில் இருந்து 65 சதவீதம் உயர்ந்து 61.9 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நஷ்ட அளவீடுள் 243 கோடி ரூபாயில் இருந்து 54 சதவீதம் குறைந்து 111 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

#Faasos #StartUp #Food

 

டாடா பவர் நிறுவனத்தின் லாபம் 38 சதவீதம் உயர்வு..!

டாடா பவர் நிறுவனத்தின் லாபம் 38 சதவீதம் உயர்வு..!

டாடா சன்ஸ் நிறுவனத்தில் சைர்ஸ் மிஸ்திரி தொடர்பான பிரிச்சனைகள் தணிந்துள்ள நிலையில் இக்குழுமத்தின் கீழ் இருக்கும் நிறுவனங்கள் தங்களது டிசம்பர் மாத காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.

இதன் படி டாடா பவர் நிறுவனத்தின் லாபம் டிசம்பர் மாதத்தில் 38 சதவீதம் உயர்ந்து 599 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 433 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#TATA #TATA Power

 

வெறும் 8 சதவீத லாப உயர்வில் ரிலையன்ஸ் கேபிடல்..!

வெறும் 8 சதவீத லாப உயர்வில் ரிலையன்ஸ் கேபிடல்..!

அனில் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 252 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.

இக்காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 3,964 கோடி ரூபாயாக உள்ளது, இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 68 சதவீதம் அதிகமாகும். டிசம்பர் மாதம் வரை இந்நிறுவனம் 3,35,987 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்களை மேலாண்மை செய்து வருகிறது.

#RelianceCapital #AnilAmbani

 

ஹாஸ்பிட்டல் துறையில் இறங்க ஐடிசி திட்டம்..!

ஹாஸ்பிட்டல் துறையில் இறங்க ஐடிசி திட்டம்..!

இந்தியாவில் விருந்தோம்பல் பிரிவில் ஏற்கனவே சேவை அளித்து வரும் ஐடிசி நிறுவனம், இத்துறையில் தனது வர்த்தகத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல் அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.

சிகரெட் தயாரிப்பு, நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு எனப் பல பரிவுகளில் இருக்கும் ஐடிசிக்கு இப்புதிய வர்த்தகம் பெரிய அளவிலான வளர்ச்சியை அளிக்கும் எனச் சந்தை வல்லுனர்கள் நம்புகின்றனர்.

#ITC

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

News in 30 seconds: Speaker Box GoodReturns Tamil 11022017

News in 30 seconds: Speaker Box GoodReturns Tamil 11022017
Story first published: Saturday, February 11, 2017, 16:53 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X