
உணவு தானிய உற்பத்தி வரலாறு காணாத உயர்வு..!
இந்தியாவில் பருவமழை 2 வருடமாகக் குறைந்திருந்த நிலையில் 2016-17ஆம் நிதியாண்டில் பருவமழை சிறப்பாக இருந்தது, இதன் காரணமாக நாட்டில் உணவு தானியங்களின் உற்பத்தி வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் கோதுமை, அரிசி, பருப்பு, எண்ணெய் விதைகள் மற்றும் பிற தானியங்களின் உற்பத்தி சாரசரி இருப்பு அளவுகளை விடவும் அதிகமாக இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாத முடிவில் மொத்த உற்பத்தி அளவு 271.98 மில்லயன் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#FoodGrain #Production

சமையல் எண்ணெய் இறக்குமதி 19% சரிவு..!
2017 ஜனவரி மாதத்தில் இந்தியாவில் சமையல் எண்ணெய் இறக்குமதி சுமார் 19 சதவீதம் சரிந்துள்ளதுள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணெய்யின் இறக்குமதியின் அளவு 1.02 மில்லியன் டன்னாக உள்ளது. கடந்த வருடம் இதே காலத்தில் இதன் அளவு 1.24 மில்லியன் டன்னாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
#VegetableOil #Oil

5 மாத உயர்வில் டிசிஎஸ் பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..!
வியாழக்கிழமை முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் டிசிஎஸ் நிறுவனம் சந்தை வர்த்தகத்தில் இருக்கும் பங்குகளை வாங்க முடிவு செய்தாக அறிவித்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புப் பிப்.20யில் நடக்கும் இந்நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படும்.
இதன் எதிரொலியாக இன்று காலையில் டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 2.7 சதவீதம் உயர்ந்து 5 மாத உயர்வைப் பதிவு செய்தது.
#TCS #Buyback

25 வருடத்தில் முதல் முறையாக வளர்ச்சி அளவுகளை அறிவிக்கக் காலதாமதம்: நாஸ்காம்
இந்திய ஐடி நிறுவனங்களின் அமைப்பாக விளங்கும் நாஸ்காம் 25 வருடத்தில் முதல் முறையாக இத்துறையின் 2017-18 வளர்ச்சி கணிப்புகளை வெளியிட முதல் முறையாகக் காலதாமதம் செய்து வருகிறது. அமெரிக்கா மற்றும் மேக்ரோஎக்னாமிக் பிரச்சனைகளே இந்தக் காலதாமதத்திற்கு முதற்காரணமாக விளங்குகிறது.
2017ஆம் நிதியாண்டில் இத்துறையில் ஏற்பட்ட பிரச்சனைகள் மூலம் இத்துறையின் வளர்ச்சி 10-12 சதவீதத்தில் இருந்து 8-10 சதவீதம் வரை குறைந்தது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் இத்துறையின் வளர்ச்சி அளவு 6-10 சதவீதமாக இருக்கும் எனத் தோராயமாக இருக்கும் எனத் தனது கணிப்புகளைத் தெரிவித்துள்ளது,
#Nasscom

லாபத்தில் 8 சதவீதம் சரிவு.. பங்குச்சந்தையில் 3 சதவீதம் சரிவு.. சோகத்தில் மூழ்கிய நெஸ்லே..!
2016 டிசம்பர் 31 உடன் முடிந்த காலாண்டில் நெஸ்லே நிறுவனம் தனது இந்திய வர்த்தகத்தில் லாபத்தின் அளவு சுமார் 8 சதவீதம் சரிந்து வெறும் 167.3 கோடி ரூபாய் மட்டுமே பெற்றது.
இதனால் மும்பை பங்குச்சந்தையில் நெஸ்லே இந்தியாவின் பங்குகளின் மதிப்பு 3 சதவீதம் வரை குறைந்து காணப்படுகிறது.
#Nestle

அமேசானின் முதல் கடை..!
சர்வதேச ஈகாமர்ஸ் சந்தையில் முடிசூடா மண்ணாக விளங்கும் அமேசான் இந்தியாவில் முதல் முறையாக உண்மையாக வர்த்தகப் பிரிவை திறக்க உள்ளது.
தற்போது நம் வீட்டின் அருகில் இருக்கும் சூப்பர் மார்கெட் போல அமேசான் புதிய சூப்பர் மார்கெட்-ஐ திறக்க உள்ளது. இங்கு முதல் கட்டமாக உணவுப் பொருட்களை விற்பனை செய்யவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதனால் பிக் பஜார், மோர், டிமார்ட் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வர்த்தகப் போட்டியை சந்திக்க உள்ளது.
#Amazon