உஷார்..! எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-இல் கள்ள நோட்டு..!

டெல்லி எஸ்பிஐ ஏடிஎம்-ல் ‘சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப்’ இந்திய பெயரில் 2000 ரூபாய் கள்ளநோட்டு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பல வங்கி ஏடிஎம் மையங்களில் பணமே இல்லாத சூழலில் தெற்கு டெல்லியில் சங்கம் விஹாரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா பெயரில் கள்ள நோட்டு வந்துள்ளது.

 

இந்தக் கள்ள ரூபாய் நோட்டும் அச்சு அசலாகப் புதிய 2000 ரூபாய் நோட்டு போன்றே உள்ளது பார்த்த உடன் கண்டுபிடிக்கவும் முடியாத அளவிற்கு அச்சு அசலாக அதே போன்று இருந்துள்ளது.

பிப்ரவரி 6

பிப்ரவரி 6

பிப்ரவரி 6-ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து எடுக்கப்பட்ட இந்தப் பணத்தில் ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியா பெயருக்கு பதிலாகச் சில்ட்ரன்ஸ் பாங்க் ஆப் இந்தியா என்றும், மத்திய அரசு உத்தரவாதத்திற்குப் பதிலாகக் குழந்தைகள் அரசு உத்திரவாதம் என்றும், ஆர்பிஐ லோகோவிற்குப் பதிலாக ‘பிகே' லோகோ இது போன்ற வித்தியாசங்கள் அந்தக் கள்ள ரூபாய் நோட்டில் இருந்துள்ளன.

புகைப்படம்: Hindustan Times

கள்ள ரூபாய் நோட்டில் என்னவெல்லாம் மாற்றங்கள் இருந்தன

கள்ள ரூபாய் நோட்டில் என்னவெல்லாம் மாற்றங்கள் இருந்தன

பாரதிய ரிசர்வ் வங்கிக்கு பதிலாகப் பாரதிய மனோரஞ்சன் வங்கி என்றும், சீரியல் எண் 000000 என்றும், ரூபாய் குறியீடு இல்லாமலும், ஸ்ட்ரிப்பிக்கிற்குப் பதிலாகச் சர்ன் லேபிலும், ஆர்பிஐ சீலிற்குப் பதிலாகப் பிகே லோகோவும், இந்த இரண்டாயிரம் ரூபாய் மதிப்புடைய நோட்டு என்று கவர்னர் கையெழுத்திற்கு மேல் வரும் வாசகத்தில் 2000 ரூபாய் கூப்பன் என்று, கவர்னர் கையெழுத்து இல்லாமலும், அசோக் சின்னத்திற்குப் பதிலாகச் சர்ன் லேபில் என்றும் மாற்றம் இருந்துள்ளது.

புகைப்படம்: Hindustan Times

காவல் துறை அதிகாரிக்கும் கள்ள நோட்டு
 

காவல் துறை அதிகாரிக்கும் கள்ள நோட்டு

நான்கு நோட்டுகள் கள்ளப்பணமக வந்துள்ளது என்று புகார் காவல் நிலையத்திற்கு வந்த உடன் மூத்த போலிஸ் அதிகாரி துணை காவலர் ஒருவரை அனுப்பிச் சரி பார்த்துள்ளது. அப்போது அவருக்கும் ஒரு கள்ள ரூபாய் நோட்டு வந்துள்ளது என்று காவல் துறை மூத்த அதிகாரி கூறுகின்றார்.

உறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளர்

உறுதி செய்யப்பட்ட வாடிக்கையாளர்

கள்ள ரூபாய் நோட்டு எடுத்தவரின் பெயர் ரோகித் என்றும், அவர் அன்று காலை 7.45 மணிக்கு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்துள்ளார் என்றும் எஸ்பிஐ வாடிக்கையாளர் சேவை மையம் அதிகாரிகள் கண்டறிந்து உறுதி செய்துள்ளனர்.

ரோகித் புகார்

ரோகித் புகார்

ரோகித் இது பற்றிக் கூறுகையில் தனக்கு வந்த 4 நோட்டுகளுமே கள்ள நோட்டாக இருந்ததாகவும், இரண்டாயிரம் ரூபாய்க்குப் பதிலாக 2000 கூப்பன் என்றும், சீரியல் எண் 000000 என்று இருந்ததைப் பார்த்த பிறகே சங்கம் விஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் கூறுகின்றார்.

வேறு யாருக்காவது கள்ள ரூபாய் நோட்டு சென்றுள்ளதா?

வேறு யாருக்காவது கள்ள ரூபாய் நோட்டு சென்றுள்ளதா?

காவல் துறையால் வேறு யாருக்காவது கள்ள ரூபாய் நோட்டு சென்றுள்ளதா என்று கண்டறிய முடியவில்லை, எனவே இது போன்று ஏதேனும் புகார் வருகிறதா என்று கண்காணித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

3 பிரிவுகளில் புகார்

3 பிரிவுகளில் புகார்

கள்ள ரூபாய் நோட்டு யார் மூலமாக வந்தது என்று இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், சங்கம் விஹார் காவல் நிலையத்தில் ஐபிசி 489-பிம் 489-இ, மற்றும் 420 ஆகிய பிரிவுகளில் புகார் பதிவு செய்து விசாரித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

இது குறித்த விசாரணைக்கு ஒரு குழு அமைத்துள்ளதாக எஸ்பிஐ வங்கி செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fake Rs 2000 notes of ‘Children Bank of India’ dispensed from SBI ATM in Delhi

Fake Rs 2000 notes of ‘Children Bank of India’ dispensed from SBI ATM in Delhi
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X