ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ துணை வங்கிகளுடன் இணைவது உறுதியானது..!

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5 துணை வங்கிகளுடன் இணைந்து இந்திய வங்கிகள் வரலாற்றில் சரித்திரம் படைக்க இருக்கின்றது.

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5 துணை வங்கிகளுடன் இணைந்து இந்திய வங்கிகள் வரலாற்றில் சரித்திரம் படைக்க இருக்கின்றது.

எனவே எஸ்பிஐ வங்கியுடன் ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் (SBBJ), ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் , ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகளின் சொத்துக்கள் அனைத்தும் ஏப்ரல் 1 முதல் எஸ்பிஐ வங்கிக்கு மாற்றப்படும்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

ஐந்து துணை வங்கிகளுடன் இணைவதால் உலகின் டாப் 50 வங்கிகளில் 37 லட்சம் கோடி சொத்து மதிப்புடன், 22,500 கிளைகளுடன், 58,000 ஏடிஎம் மையங்களுடன், 50 கோடி வாடிக்கையாளர்களுடன் எஸ்பிஐ வங்கி இணைய வாய்ப்பிருக்கின்றது.

புதிய வேலை வாய்ப்பு உறுதி கடிதம்

புதிய வேலை வாய்ப்பு உறுதி கடிதம்

வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவருக்கும் எஸ்பிஐ பெயரில் புதிதாக வேலை வாய்ப்பு உறுதி கடிதமும் அளிக்கப்படும்.

ஊழியர்களின் நிலை

ஊழியர்களின் நிலை

எஸ்பிஐ வங்கி ஊழியர்களுக்கு இதனால் எந்த ஒரு வேலை வாய்ப்பு இழப்பு ஏற்படாது என்று நிர்வாக அறிவித்து இருக்கும் போதிலும், மூத்த அதிகாரிகளை விருப்ப ஓய்வு அளிக்க வற்புறுத்துவதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிற்கு மட்டும் 16,500 கிளைகளும், 36 நாடுகளில் 191 வெளிநாட்டு அலுவலகங்களும் உள்ளன.

பங்குகள்

பங்குகள்

2016 ஆகஸ்ட் மாதம் இணைப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாங்க் ஆப் பிக்கானீர் மற்றும் ஜெய்ப்பூர் பங்குகளில் 10 ஒருவருக்கு இருந்தால் கூடுதலாக 28 பங்குகள் கிடைக்கும் என்றும், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் திருவாங்கூர் வங்கிகளில் 10 பங்குகள் வைத்திருந்தால் கூடுதலாக 22 பங்குகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

பிற துணை வங்கிகள்

பிற துணை வங்கிகள்

ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கிகள் பங்குச் சந்தையில் இல்லாததால் அவர்களுக்கு வேறு திட்டங்களை அளித்துள்ளது எஸ்பிஐ.

சம்பளம்

சம்பளம்

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் துணை வங்கிகள் இணையும் போது ஊழியர்களின் சம்பளம், கொடுபனுவுகள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இருக்காது.

2008-2010 இல் நடந்த எஸ்பிஐ துணை வங்கிகள் இணைப்பு

2008-2010 இல் நடந்த எஸ்பிஐ துணை வங்கிகள் இணைப்பு

எஸ்பிஐ வங்கியுடன் இதற்கு முன்பு 2008-ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் செளராஷ்டிராவும், 2010-ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தூரும் இணைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Five Associate Banks To Merge With SBI From April 1

Five Associate Banks To Merge With SBI From April 1
Story first published: Friday, February 24, 2017, 16:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X