வெளிநாட்டில் பல்லாயிரம் கோடி சொத்துக்கள்.. விஜய் மல்லையாவின் ராஜ தந்திரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

'கிங் ஆப் குட் டைம்ஸ்' என்ற பெயருக்கு பேர்போன விஜய் மல்லையா 9,000 கோடி கடன் வழக்கால் தன்னிடம் உள்ள 13 விலைமதிப்பற்ற சொத்துக்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

 

பெரும்பாலும் இந்தியாவில் 10 ரூபாய் மதிப்புடைய சொத்திற்கு 100 ரூபாய் வரை இவர் கடன் பெற்று இருக்கின்றார். அதனால் தான் இவரது சொத்துக்களை அதிக விலை கொடுத்து வாங்க யாரும் முன் வராததிற்கான காரணம் என்றும் கூறப்படுகின்றது.

ஆனால் நாம் இங்குப் பார்க்கப்போகும் இவருடைய காஸ்ட்லியானா சொத்துக்களை வைத்து இவர் கடனும் வாங்கவில்லை, இவை இந்தியாவிலும் இல்லை.

லே கிராண்ட் ஜார்டின், 60 மில்லியன் டாலார்

லே கிராண்ட் ஜார்டின், 60 மில்லியன் டாலார்

சயின்டே-மார்குயரிடே தீவில் மல்லையாவிற்கு ஒரு தீவே உள்ளது. லேரின்ஸில் உள்ள நான்கு காஸ்ட்லியான தீவில் இதுவும் ஒன்று. ‘லே கிராண்ட் ஜார்டின்' அல்லது ‘தி கார்டன் கிராண்ட்' என்று பிரபலமாக அனைவராலும் இந்த இடம் அடையாளம் காணப்படுகின்றது.

60 மில்லியன் டாலர் கொடுத்து இந்த இடத்தை மல்லையா வாங்கி உள்ளார். இங்கு உள்ள தீவுகளில் இது மட்டுமே தனிநபர் தீவாகும்.

மாபுலா விளையாட்டு லாட்ஜ், 6 மில்லியன் டாலர்

மாபுலா விளையாட்டு லாட்ஜ், 6 மில்லியன் டாலர்

12,000 ஹெக்டேர் மதிப்புடைய மாபுலா விளையாட்டு லாட்ஜ் தென் ஆப்ரிக்காவில் மிகவும் பிரபலமான தனியார் விளையாட்டு இருப்புக்கள் ஆகும்.

25,000 ஏக்கர் மதிப்புள்ள இந்த விளையாட்டு இருப்பில் மல்லையாவிற்கு 99.5 சதவீத பங்குகளை வைத்துள்ளார்.

கலிபோர்னியா வீடு, 1.2 மில்லியன் டாலர்
 

கலிபோர்னியா வீடு, 1.2 மில்லியன் டாலர்

சவுயூசாலிடோவில் உள்ள மல்லையாவின் வீடு சான் பிரான்சிஸ்கோவில் இருந்து பே பிரிட்ஜ் செல்லும் வழையில் முக்கியமான ஒரு வீடாகும்.

11,000 சதுர அடி பரப்பளவில் உள்ள இந்த வீட்டை 1.2 மில்லியன் டாலர் கொடுத்து மல்லையா 2003-ம் ஆண்டு வாங்கியுள்ளார்.

டிரம்ப் பிளாசா

டிரம்ப் பிளாசா

நியூ யார்க்கில் உள்ள மிகவும் விலை உயர்ந்த டிரம்ப் பிளாசாவில் 2010-ம் ஆண்டு மல்லையா பென்ட்ஹவுஸ் ஒன்றை 2.4 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்தியன் எம்ப்ரஸ்

இந்தியன் எம்ப்ரஸ்

ஆடம்பரமான பார்ட்டிகளை நடத்துவதில் பேர் போனவர் மல்லையா. இவர் 95 மீட்டர் உள்ள இந்தியன் எப்ரஸ் எனப்படும் தனியார் ஆடம்பர படகை 2010-ம் ஆண்டு 93 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். இந்தப் படகில் காசினோ எனப்படும் சூதாட்டம் நிகழ்வுகளும் நடக்கும்.

இந்தப் படகு உலகளவில் 33 வது மிகப் பெரிய தனியார் ஆடம்பர படகாகும். இது மட்டும் இல்லாமல் 3 மில்லியன் டாலர் செலவில் கலிஸ்மா எனப்படும் இன்னொரு ஆடம்பர படகை 1995 ஆம் ஆண்டு இவர் வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.

விமானம்

விமானம்

மல்லையா தனக்கு உலகம் முழுவதும் உள்ள 2 டஜன்களுக்கும் மேற்பட்ட தோட்ட இல்லங்களுக்குத் தனியார் போயிங் 727 சிறிய ரக விமானத்தை வைத்துள்ளார்.

ஏர்பஸ் ஏ 319 விமானத்தை 40 மில்லியன் செலவில் இவர் வாங்கியதும், இவரது தனியார் விமானமும் 50 மில்லியன் டாலர் மதிப்புடையது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரிதான கார்கள்

அரிதான கார்கள்

உலகின் அரிதான கார்களில் ஒன்று ரோல் ராய்சின் கோஸ்ட் கார் , இதுவும் மல்லையாவிடம் உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜாகுவார் XJ220, ஜாகுவார் XJR15 ரேஸ் கார், ஃபெராரி 1965 கலிபோர்னியா ஸ்பைடர் கார்களும் மல்லையாவிடம் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Here are Vijay Mallya's prized possessions that he has to let go

Here are Vijay Mallya's prized possessions that he has to let go
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X