நட்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி பயணம்: பிஎஸ்என்எல் அதிரடி..!

நட்டத்தில் இருந்து லாபத்தை நோக்கி பயணம் செய்துள்ள பிஎஸ்என்எல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் கடந்த மூன்று ஆண்டுகளாக நல்ல லாபத்தைப் பெற்று வருகின்றது.

இதற்கு மிகப் பெரிய உதாரணம் ஐந்து வருடங்களுக்குப் பிறகு 2016-ம் ஆண்டு முதல் முறையாக 672 கோடி லாபம் பெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது என்று கூரலாம்.

இருப்பினும், சென்ற வருடங்களை விட வரும் ஆண்டுகளில் நல்ல லாபத்தைப் பிஎஸ்என்எல் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த மூன்று வருடங்களாகப் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஆஃபர்கள், வாடிக்கையாளர் சேவையில் முன்னேற்றம், போட்டி கட்டண திட்டங்கள் அளித்து வருகின்றது. இவை மட்டும் இல்லாமல் முதல் முறையாகப் பிஎஸ்என்எல் இந்தியா முழுவதும் ரோமிங் கட்டணத்தை நீக்கிய பிறகு அதிகப்படியான வாடிக்கையாளர்கள் நெட்வொர்க் போர்ட்டப்ளிட்டி மூலம் பிற நெட்வொர்க்கில் இருந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கிற்கு மாறினர்.

பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் ஐந்து வருடங்களுக்கு முன்பு என்ன ஆஃபர்கள் வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் இப்போது பிஎஸ்என்எல் ஆஃபர்கள் பற்றிப் பலரும் அறியும் வண்ணம் உள்ளது.

இணையதளச் சேவைகள் வழங்குவதில் பல சிறப்பான ஆஃபர்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி அதற்கு ஏற்றவாறே மார்க்கெட்டிங்கிலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றது.

எனவே இங்கு நாம் கடந்த மூன்றா வருடத்தில் பிஎஸ்என்எல் எப்படி லாபத்தை நோக்கிப் பயணித்தது என்று இங்குப் பார்ப்போம்.

சந்தைப்படுத்தலில் முன்னேற்றம்

சந்தைப்படுத்தலில் முன்னேற்றம்

சில வருடங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் ஆஃபர்கள் பற்றி ஆஃபர்கள் மக்களிடம் சரியாகச் சென்று அடையாமல் இருந்தது. ஒருவேலை ஆஃபர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் சரியான விவரங்கள் வாடிக்கையாளர்கள் பெறும் அளவிற்கு எளிமைப்படுத்தவில்லை.

ஆனால் இப்போது பல விதமான விளம்பரங்கள் இணையதளத்தில் பார்க்கக் கூடிய வசதிகளைப் பிஎஸ்என்எல் செய்துள்ளது.

 

வாடிக்கையாளர் சேவை

வாடிக்கையாளர் சேவை

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர் சேவை மையங்கள் சரியாகச் செயல்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. நான்கு வருடங்களுக்கு முன்பு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையம் சரிப்படச் செயல்படா நிலையில் இருந்து வந்தது. இன்று அப்படி இல்லாமல் சிறப்பான முறையில் வாடிக்கையாளர் சேவையைத் தனியார் நிறுவனங்களுக்கு இணையாகச் செயல்பட்டு வருகின்றது.

டாரிப் திட்டங்கள்

டாரிப் திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் முதல் முறையாக இலவச ஆஃபர்களுடன் நுழையும் போது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தான் முறையான ஆஃபர்களுடன் முதல் முறையாக இலவசத்திற்குப் போட்டி போட்டுக்கொண்டு திட்டங்களை வெளியிட்டது.

மேம்பட்ட டேட்டா மற்றும் நம்பகமான பிராட்பேண்ட் வேகம்

மேம்பட்ட டேட்டா மற்றும் நம்பகமான பிராட்பேண்ட் வேகம்

முன்பெல்லாம் பிஎஸ்என்எல் நிறுவனம் தரவு திட்டங்களைப் பொருத்த வரை சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கும். ஆனால் 2015-ம் ஆண்டிற்குப் பிறகு இதில் நல்ல மாற்றங்களைப் பிஎஸ்என்எல் செய்வது மட்டும் இல்லாமல் கிராமங்களில் கூடச் சிறப்பான சேவையை அளித்து வருகின்றது.

பிஎஸ்என்எல் 4ஜி

பிஎஸ்என்எல் 4ஜி

என்ன தான் சிறப்பான சேவையைப் பிஎஸ்என்எல் செய்து வந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாகப் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை வழங்குகிறோம் என்று அறிவித்து வந்து முழுமையான 4ஜி சேவையை வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 2017 முதல் 4ஜி

ஏப்ரல் 2017 முதல் 4ஜி

பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஸ்ரீவத்சவா அன்மையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது ஏப்ரல் 2017 முதல் 4ஜி சேவைகள் துவங்கப்படும் என்று கூறியுள்ளார்.

குறிப்பு

குறிப்பு

பிஎஸ்என்எல் ஆஃபர்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பது பற்றிய உங்கள் கருத்துகளை இங்கே உள்ளிடவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From Incurring Heavy Losses to Profitable: Here’s Everything BSNL has Done in the Past Three Years

From Incurring Heavy Losses to Profitable: Here’s Everything BSNL has Done in the Past Three Years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X