இஸ்ரோ 'சூப்பர்ஸ்டார்ஸ்'.. மயில்சாமி அண்ணாதுரை முதல் குன்ஹிகிருஷ்ணன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: உலகின் மற்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களை ஒப்பிடும்போது பட்ஜெட் அளவில் இஸ்ரோ மிகவும் சிறியது. உதாரணமாக அமெரிக்காவின் நாசா $1.9 பில்லியன் செலவு செய்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவின் இஸ்ரோ $1.1 பில்லியன் மட்டுமே செலவு செய்து வருகிறது.

ஆனால் சாதனையில் இந்தியா உலகமே வியக்கும் வகையில் உள்ளது. இதற்கு இஸ்ரோவில் உள்ள ஆண், பெண் இருபாலர் விஞ்ஞானிகளே காரணம். இஸ்ரோவின் முக்கிய விஞ்ஞானிகள் குறித்துத் தற்போது பார்ப்போம்.

விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்
 

விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர்

VSCC என்று கூறப்படும் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டர் என்ற அமைப்புத் திருவனந்தபுரத்தில் உள்ளது. விண்வெளியில் செலுத்தக்கூடிய ராக்கெட்டுக்களை டிசைன் செய்வது, அதை டெலவலப் செய்வது இந்தச் செண்டரின் பணி. ராக்கெட்டின் டிசைனில் இருந்து அதற்குரிய எரிபொருள் மற்றும் தேவையான பொருட்கள், வழிகாட்டும் மறைகள் ஆகிய அனைத்தும் இந்த அமைப்பின் முக்கியப் பணிகளாகும்.

சமீபத்தில் இந்திய விஞ்ஞானிகளின் உலகச் சாதனை நிகழ்வான ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி ராக்கெட் இங்கு உருவாக்கப்பட்டதுதான்.

டாக்டர் கே.சிவன், இயக்குனர் VSCC

டாக்டர் கே.சிவன், இயக்குனர் VSCC

விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் தலைமையாக இருந்து செயல்பட்டவர் தான் டாக்டர் கே.சிவன். இவர் இஸ்ரோவில் கடந்த 1982ஆம் ஆண்டு முதல் பணிபுரிந்து வருகிறார்.

இவர் உருவாக்கிய SITARA என்ற மென்பொருள் தான் ராக்கெட்டுக்களை விண்ணில் அனுப்ப இஸ்ரோ பயன்படுத்தும் முக்கிய மென்பொருள் ஆகும்

மேலும் இவர் RLV-TD என்ற புரொஜக்டிலும் தன்னுடைய உழைப்பைக் கொட்டியுள்ளார். அதன் டிசைன் தரம், காற்று இயக்கவியல் தரம், மற்றும் ஹார்ட்வேர் டெவலப்மெண்ட் ஆகிய பணிகளும் இவருடைய பொறுப்பில் தான் உள்ளது. பி.எஸ்.எல்.வி C37 என்ற செயற்கைக்கோள்கள் அதன் சுற்றுப்பாதையில் சரியாகச் செல்ல இவருடைய தலைமை தான் காரணம்.

இந்தச் செயற்கைக்கோள் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் நேவிகேஷன் முறையைப் பயன்படுத்திப் பல புதுமையான சோதனைகள் செய்யப்பட்டன.

எஸ்.சோம்நாத். இயக்குனர் LPSC
 

எஸ்.சோம்நாத். இயக்குனர் LPSC

கடந்த 1985 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த இவர் செயற்கைக்கோள் டிசைன் செய்வதில் வல்லவர். ஆரம்பக் காலத்தில் பி.எஸ்.எல்.வி ராக்கெட் உருவாக்க உறுதுணையாக இருந்தவர்களில் ஒருவர்.

முதல் இரண்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட் இவருடைய மேற்பார்வையில் தான் இயங்கியது. பின்னர்ப் பி.எஸ்.எல்.வி ராக்கெட் புரொஜக்ட்களின் தலைமையாகச் செயல்பட்ட இவர் சீரிய முறையில் தன்னுடைய திறமையை நிரூபித்தார். விண்ணில் பறக்கும் செயற்கைக்கோள்களின் மெக்கானிசம் இவரது உழைப்பால் ஏற்படுத்தப்பட்டது.

மேலும் இவருடைய தலைமையின் கீழ்தான் திரவ நிலை எரிபொருள் உடைய ராக்கெட்டுக்கள் சோதனை செய்யப்பட்டன. GSLV என்று கூறப்படும் இந்த வகை ராக்கெட்டுக்கள் விண்வெளித்துறையில் புரட்சியை ஏற்படுத்தியது. GSLV Mk3 LVM3-X என்ற ராக்கெட்டின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர் சோம்நாத் எனப்து குறிப்பிடத்தக்கது.

பி.குன்ஹிகிருஷ்ணன், இயக்குனர் SDSC SHAR

பி.குன்ஹிகிருஷ்ணன், இயக்குனர் SDSC SHAR

கடந்த 1986ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்த இவரது முக்கியப் பணி, விண்ணிற்குச் செல்ல தயாராகிய ராக்கெட்டுக்களை ஆய்வு செய்து அதற்குச் சான்றிதழ் கொடுக்கும் பணியில் இருந்தார்.

அனைத்து PSLV மற்றும் GSLV ராக்கெட்டுக்கள் இவரது இறுதிக்கட்ட ஆய்வுக்குப் பின்னரே அனுப்பப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டு வரை இவரது தலைமையில் சோதனை செய்யப்பட்டு 13க்கும் மேற்பட்ட ராக்கெட்டுக்கள் வெற்றிகரமாக எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் விண்ணில் செலுத்தப்பட்டன

இவற்றில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட PSLV-C19 ராக்கெட்டும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

PSLV ராக்கெட்

PSLV ராக்கெட்

இந்த PSLV ராக்கெட் இந்தியாவின் புகழை உலகிற்கே கொண்டு சென்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இவர் சதீஷ் சவான் ஸ்பேஸ் செண்டரின் இயக்குனாராக உள்ள உள்ள இவரது உத்தரவிற்குப் பின்னர்த் தான் ஒவ்வொரு ராக்கெட்டும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கிளம்பும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகக்குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்ட PSLV-C37 என்ற ராக்கெட் 104 செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது இவருடைய ஆய்விற்குப் பின்னர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பான் மிஸ்ரா, இயக்குனர் SAC

தப்பான் மிஸ்ரா, இயக்குனர் SAC

SAC என்று கூறப்படும் ஸ்பேஸ் அப்ளிகேஷன் செண்டர் என்ற இந்த அமைப்புதான் இந்தியாவில் இருந்து செல்லும் அனைத்து செயற்கைக்கோள்களுக்கும் காரணமாக உள்ளது.

தப்பான் மிஸ்ரா தலைமையின் கீழ்தான் இந்த அமைப்பு இயங்குகிறது. இவர் கடந்த 1984ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்து பின்னர் 1990 ஆம் ஆண்டு ஜெர்மன் விஞ்ஞானிகளின் சிறப்பு விருந்தினராகக் கௌரவிக்கப்பட்டார்.

செயற்கை இடைத்தரவு சிந்தெட்டிக் டேட்டா என்ற அல்காரிகத்தை இவர் தான் எழுதினார். மேலும் டிராக் ஸ்டீரிங் அல்காரிதம் என்பதைக் கண்டுபிடித்ததும் இவர்தான். இந்த அல்காரிதம் விண்வெளித்துறைக்குப் பயன்படும் மிக முக்கியமான SAR டேட்டா என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய தலைமையின் கீழ்தான் Cartosat 2D என்ற சாட்டிலைட் உருவாக்கப்பட்டது. அது மட்டுமின்றி முதன்முதலாக 3D பிரிண்ட் மிர்ரர் சப்போர்ட்டிங் அமைப்புக் கண்டுபிடிக்கப்பட்டது. மல்டிஸ்பெக்ட்ரல் கேமிரா மூலம் 3D எபெக்ட்டில் பல புகைப்படங்கள் சாட்டிலைட் அனுப்புவதற்கு இந்தக் கண்டுபிடிப்புதான் காரணம். மேலும் சாட்டிலைட்டில் குறைந்த இடத்தில் நவீன டெக்னாலஜி கேமிரா அமைக்கவும் வழிவகுத்தது. மேலும் இவரது பெயரில் இரண்டு காப்புரிமைகள், 6 நிலுவையில் உள்ள காப்புரிமைகள், 5 காப்பிரைட்ஸ் உரிமை மற்றும் 25 ஆவணங்கள் உள்ளன.

டாக்டர் எம்.அண்ணாதுரை. இயக்குனர் ISAC

டாக்டர் எம்.அண்ணாதுரை. இயக்குனர் ISAC

அனைத்துத் துணை கிளைகளில் இருந்து தயாராகும் சாட்டிலைட்டுக்கு உரியப் பொருட்கள் அனைத்தும் மொத்தமாக வந்து சேரும் இடம்தான் இஸ்ரோ. இங்குதான் அனைத்துப் பாகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு முழுச் சாட்டிலைட் உருவாக்கப்படுகிறது.

சமீபத்தில் சாதனை செய்த PSLV-C37 -ல் உள்ள முக்கியப் பொருட்களில் ஒன்றான Cartosat 2D என்பது ISAC உருவாக்கப்பட்டது. இதன் இயக்குனராகத்தான் டாக்டர் அண்ணாதுரை உள்ளார்.

விரைவான பணிகள் மூலம் வெற்றி

விரைவான பணிகள் மூலம் வெற்றி

இஸ்ரோ நிறுவனத்தின் சேர்மன் அவர்களால் இந்தச் சாட்டிலைட்டுக்கு தேவையான அனைத்தையும் ஜனவரி 26க்குள் முடிக்க டாக்டர் அண்ணாதுரையிடம் கேட்டுக்கொண்டது. ஆனால் கொடுக்கப்பட்ட காலத்திற்கு முன்பாகவே இவரது குழு மிகச்சரியாகத் தனக்கு ஒப்படைக்கப்பட்ட பணியை முடித்துக் கொடுத்துச் சாதனைச் செய்தது.

பொதுவாக இதுபோன்ற பணிகளை முடிக்க வருடக்கணக்கில் காலம் தேவைப்படும். ஆனால் அண்ணாதுரை மற்றும் அவரது குழுவினர்களின் கடுமையான உழைப்புக் காரணமாகக் கச்சிதமாகக் குறித்த காலத்திற்குள் முடித்துக் கொடுத்தனர்.

மேலும் விரைவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தக்குடிய GSAT சாட்டிலைட்டுக்களைத் தயாரிக்கும் பணியில் தற்போது அண்ணாதுரை அவர்களின் குழு ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழர் என்பதில் நாம் அனைவருக்கும் பெருமை.

'இஸ்ரோ'-வின் பிசினஸ் படு ஜோர்

'இஸ்ரோ'-வின் பிசினஸ் படு ஜோர்

அசாதாரண விஷயத்தையும் அசால்ட்டாக கலக்கும் 'இஸ்ரோ'-வின் பிசினஸ் படு ஜோர்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ISRO’s World Record 104 Satellite Launch: Men Who behind

ISRO’s World Record 104 Satellite Launch: Men Who behind
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more