வங்கிகளுக்கு போட்டியாக ‘பேடிஎம்’ கட்டண உயர்வு.. கடுப்பான வாடிக்கையாளர்கள்..!!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

பேடிஎம் இணையதளம் அல்லது செயலியில் ஏதேனும் பொருட்களை வாங்கும்போது அல்லது ரீசார்ஜ் செய்யும் போது அல்லது பிற பரிவர்த்தனைகள் ஏதேனும் செய்யும் போது பலவகையான பணமளிப்பு முறையில் பணம் செலுத்த முடியும்.

அன்மையில் பேடிஎம் செயலி யூபிஐ மற்றும் ஐஎம்பிஎஸ் என இரண்டு முறையில் பணம் அளிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக் கணக்கான மக்கள் பேடிஎம் பயன்படுத்தி பண பரிவத்தனை செய்து வருகின்ற்னர்.

செல்லா ரூபாய் நோட்டு

மத்திய அரசு செல்லா ரூபாய் அறிவித்த பிறகு கட்டணம் ஏதும் இல்லாமல் சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் பரிவர்த்தனை முறையை நவம்பர் மாதம் பேடிஎம் அறிமுகப்படுத்தியது. இதனால் பல லட்சம் வணிகர்கள் பேடிஎம் செயலியில் இணைந்து பயன்பெற்று வந்தனர்.

கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கிய சேவை

என்ன தான் வணிகர்கள் பேடிஎம் மூலம் பணம் பெற்று வந்தாலும் அதனை வங்கி கணக்கிற்கு மாற்றினால் தான் பணமாக எடுக்க முடியும். ஆனால் செல்லா ரூபாய் நோட்டுகள் அறிவித்ததில் இருந்து அதையும் பேடிஎம் கட்டணம் இல்லாமல் இலவசமாக வழங்கி வந்தது. இதனால் கடைக்காரர்கள், வணிகர்கள் எனப் பலர் தனிநபர் பேடிஎம் கணக்குகளை பயன்படுத்தியும் பணத்தை பெற்று வந்தனர்.

முறைகேடான வழியில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியதன் விழைவு

இந்தக் கட்டணம் இல்லா சேவையை பலர் முறையான வழிகளில் பயன்படுத்தி வந்தாலும் சில முறைகேடான வழியிலும் பயன்படுத்தத் துவங்கினர். கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.

எனவே சில வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டில் இருந்து பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றி அதனை வங்கி கணக்கிற்கு இலவசமாக பணத்தை பரிமாற்றம் செய்து பயன்படுத்தி வந்தனர்.

 

பேடிஎம் நிறுவனத்திற்கு நட்டம்

கிர்டிட் கார்டு பயன்படுத்தி என்ன பரிவர்த்தனை செய்தாலும் பேடிஎம் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும். இது வாலெட்டில் உள்ள பணத்தை வங்கி கணக்கிற்கு அனுப்பும் போது கட்டணம் செலுத்த வேண்டு வரும். ஆனால் கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை பேடிஎம் வாலெட்டிற்கு ஏற்றி அதில் இருந்து வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பும் போது பேடிஎம் இதனை நாட்களாக பணத்தை இழந்து வந்தது.

இதுவே பணத்தை பேடிஎம் வாலெட்ட் பயன்படுத்தி வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பாமல் இணையதளம் மற்றும் செயலி பயன்படுத்தி மட்டும் பரிவர்த்தனை செய்யும் போதே நிறுவனத்திற்கு வருவாய் கிடைக்கும்.

 

விதிமுறைகளில் திருத்தம்

எனவே இது போன்ற தவறான வழியில் பயன்படுத்தும் முறையைத் தடுப்பதற்காக தங்களது விதிமுறைகளில் பேடிஎம் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதனால் பேடிஎம் பயன்படுத்தி ஷப்பிங் செய்யும் போது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் கட்டணம் ஏதும் இல்லை. இதுவே வாலெட்டில் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றும்போது 2 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

கூப்பன்

இப்படி 2 சதவீதம் கட்டணமாக செலுத்தும் தொகைக்கு நிகராக 24 மணி நேரத்தில் சலுகை கூப்பன்கள் அளிக்கப்படும். இதனால் பேடிஎம் தளத்தை தவறாக பயன்படுத்துவது குறையும் என்று நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

டெபிட் கார்டுகள், இணையதள வங்கி, யூபி மற்றும் ஐஎம்பிஸ் சேவைக்குக் கட்டணம் உண்டா?

இல்லை, பேடிஎம் தளம் அல்லது செயலியில் டெபிட் கார்டுகள், இணையதள வங்கி, யூபி மற்றும் ஐஎம்பிஸ் சேவை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் கிடையாது.

ஒவ்வொரு முறையும் பேடிஎம் தளத்தில் பரிவர்த்தனை செய்யும் போது 2 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டுமா?

பேடிஎம் செயலில் வாலெட்டில் பணத்தை சேர்க்கும் போது மட்டும் தான் சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். நேரடியாகப் பொருட்களை டெபிட்/கிரெடிட் கார்டுகள், இணையதள வங்கி, யூபி மற்றும் ஐஎம்பிஸ் பயன்படுத்தி வங்கும் போது கட்டணம் கிடையாது. வால்லெட் பயன்படுத்தும் போதும் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஊபர், கிழித்து, ஜோமேட்டோ, பிக் பேஸ்கெட், ஸ்விகி போன்ற பிற பயன்பாடுகளிலும் பேடிஎம் பயன்படுத்தி கட்டணம் செலுத்தும் போது கூடுதல் கட்டணம் கிடையாது.

ஒன்று மேற்பட்ட முறை பணத்தை வால்லெட்டில் ஏற்றும் போதும் இரண்டு சதவீதத்திற்கு கூப்பன் வழங்கப்படுமா?

ஆம், ஒன்று மேற்பட்ட முறை பணத்தை வால்லெட்டில் ஏற்றும் போதும் இரண்டு சதவீதத்திற்கு கூப்பன் வழங்கப்படும். ஆனால் தனித்தனியாகவே வழங்கப்படும். ஒரே நேரத்தில் இரண்டு கூப்பன்களை பயன்படுத்த முடியாது.

 

கூப்பனை பாதி பாடியாக பயன்படுத்த முடியுமா?

இல்லை, கூப்பனை பாதி பாதியாகப் பயன்படுத்த முடியாது.

கூப்பனின் காலாவதியாகும் தேதி என்ன?

2017 டிசம்பர் 31 வரை பயன்படுத்தாமல் இருந்தால் கூப்பன் காலாவதியாகிவிடும். ஒருவேலைத் தேதியை நீட்டிக்க வேண்டும் என்றால் அதற்கு மின்னஞ்சல் அனுப்பினால் தேதி நீட்டிக்கப்படும்.

எப்போது முதல் இந்தத் திட்டம் அமலுக்கு வருகின்றது?

2017 மார்ச் 8 முதல் பேடிஎம் நிறுவனத்தின் செயலி மற்றும் இணையதளத்தில் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Paytm to levy 2% fee on recharge via credit cards: Announcing few changes in Paytm Wallet

Paytm to levy 2% fee on recharge via credit cards: Announcing few changes in Paytm Wallet
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns