தோல்வியில் முடிந்தது மோடியின் தங்க மறுசுழற்சி திட்டம்..!

Written By: Tamilarasu
Subscribe to GoodReturns Tamil

வீடு மற்றும் கோவில்களில் இருக்கும் தங்கத்தை வெளியில் கொண்டு வந்து தங்கத்தை இறக்குமதி செய்வதைக் குறைப்பதற்காகப் பிரதமர் மோடி கொண்டு வந்த தங்கத்தை மறுசுழற்சி செய்யும் திட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 16 மாதங்களுக்குப் பிறகு இப்போது உள்ள கணக்கின் படி வீடு மற்றும் கோவில் உள்ளிட்ட இடங்களில் தேங்கியிருக்கும் 24,000 டன் தங்கத்தில் வெறும் 7 டன் தங்கம் மட்டுமே மறுசுழற்சிக்காகப் பெறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள குடும்பங்களிடம் தான் 80 சதவீதம் தங்கம் தேக்க நிலையில் உள்ளன. இதனால் இந்தத் திட்டம் இன்னும் தேக்க நிலையில் தான் உள்ளன என்று இந்திய ஹால்மாற்க் மையத்தின் தலைவர் ஹர்சத் அஜ்மீறா கூறியுள்ளார்.

தங்க இறக்குமதியில் இந்தியாவிற்கு என்ன இடம்?

சீனாவிற்கு அடுத்தபடியாகத் தங்கத்தை இறக்குமதி செய்வதில் இந்தியா தான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.ஒரு வருடத்திற்கு இந்தியாவில் கிட்டத்தட்ட 800 டன் வரை தங்கம் இறக்குமதி செய்யப்படுகின்றது. இந்தத் தங்கம் எல்லாம் திருமணத்திற்கு மற்றும் கோவில்கள் போன்றவற்றுக்கு வழங்கப்படுகின்றது.

தங்கத்தை மறு சுழற்சி செய்யும் திட்டம் யாரால் எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது?

தற்போது தோல்வியடைந்துள்ள இந்தத் திட்டம் பிரதமர் மோடி அவர்களால் நவம்பர் 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, இந்தத் திட்டத்தினால் இந்திய இறக்குமதி சதவீதத்தில் 27 சதவீதமாக இருக்கும் தங்கத்தின் அளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

 

எதற்காக இந்தத் திட்டம்

இந்தத் திட்டம் வீட்டில் பயன்படுத்தாமல் தங்கத்தை யாரெல்லாம் வைத்துள்ளார்களோ தங்கத்தை முதலீடு செய்தால் அதற்கு வட்டியும், பணமாக வேண்டும் என்றாலும் ரொக்கப்பணமாகவும் அளிக்கப்படும். அரசு இந்தத் திட்டம் மூலம் பெறும் பணத்தை உறுக்கியும், அல்லது நகை கடைக்காரர்களுக்கு ஏலத்திலும் விடப்பட்டு இறக்குமதியைக் குறைக்கும்.

தங்கத்தை முதலீடு செய்வதற்கான கட்டணம்

ஆனால் இந்தத் திட்டத்தில் தங்கத்தை முதலீடு செய்ய வேண்டும் என்றால் தங்கத்தைப் பரிசோதிப்பதற்கான கட்டணம், மற்றும் உறுக்குவதற்கான செலவை முதலீட்டாளர் செலுத்த வேண்டும். ஆனால் 2.5 சதவீதம் மட்டுமே அரசிடம் இருந்து வட்டி விகிதம் லாபம் அளிக்கப்படும். தங்கத்தின் மதிப்பில் 7 முதல் 8 சதவீதம் வரையிலும் இலக்க நேரிடும்.

ஒரு வாடிக்கையாளர் 25 கிராம் வீட்டில் இருக்கும் தங்கத்தை இத்திட்டத்தில் முதலீடு செய்தால் தங்கத்தைச் சுத்தத்தைப் பரிசோதிக்க மட்டும் 3 முதல் 4 சதவீதம் வரை கட்டணமாகச் செலுத்த நேரிடும் என்றும் கோடாக் மகேந்திரா வங்கியின் துணைத் தலைவர் சேகர் பண்டாரி கூறுகிறார்.

நாம் கஷ்டப்பட்டு என்ன வேண்டும் என்றால் சம்பாதிக்கலாம் ஆனால் தங்கத்தில் முதலீடு செய்ய நாம் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். தங்கத்தைத் திருப்பிச் செலுத்திவிட்டு நான் ஏன் அதனைப் பணமாக மாற்ற வேண்டும் என்று 54 வயதான கனபத் ஷெல்கே கூறுகின்றார்.

 

வங்கிகளிடம் உள்ள தயக்கம்

இந்தத் திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கத்தை முதலீடு செய்யலாம் என்று சென்றாலும் பல சிக்கல்களைச் சந்திக்க நேர்கின்றது.

இத்திட்டத்தின் கீழ் 4 வங்கிகளில் தங்கத்தை முதலீடு செய்யலாம் என்று சென்றாலும் அனைவரும் வாங்க மறுக்கின்றனர் என்கிறார் கொல்கத்தாவை சேர்ந்த குஷால் சாட்டர்ஜி எனும் வணிகர்.வங்கிகள் இது குறித்த முறையான விவரங்கள் எங்களிடம் இல்லை என்று கூறுவதாகவும் அவர் கூறினார்.

மும்பையில் மட்டும் குறைந்தது 5 வங்கிகள் தங்கத்தை மறுசுழற்சி செய்வதற்கு எங்கள் தலைமை அலுவலகங்கள் அளிக்கவில்லை என்று தங்கத்தைப் பெற மறுத்துள்ளனர் என்று தமிழ்குட்ரிட்டர்ன்ஸ் ஆய்வு தெரிவிக்கின்றது.

 

லாபம் இல்லாத திட்டம்

இந்திய வங்கிகள் சங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது பற்றிக் கூறுகையில் இத்திட்டத்தினால் வங்கிகளுக்கு அதிக லாபம் இல்லை என்றும் சில நேரங்களில் அசல் மட்டும் தான் கிடைக்கின்றது என்று கூறுகின்றார்.

இத்திட்டத்தில் தங்கத்தைப் பெறும் வங்கிகளுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பெயர் கூற விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரிடம் இது பற்றிக் கேள்வி கேட்டதற்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.

 

இரண்டு மடங்கான மறுசுழற்சி

தங்கத்தை மறுகுழற்சி செய்யும் சங்கத்தின் செயலாளர் ஜேம்ஸ் இது பற்றிக் கூறுகையில் கடந்த சில வருடங்களாகத் தங்க மறுசுழற்சிக்கு வருவது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது ஆனால் தற்போது மறுசுழற்சி செய்வதைவிட அதிகளவில் செய்யக்கூடிய திறன் இருந்தும் குறைவான அளவே தங்கத்தை மறுசுழற்சி செய்வதாகக் கூறப்படுகின்றது.

நாங்கள் எவ்வளவு தான் மறுசுழற்சி முறையில் தங்கத்தை உறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாலும் வங்கிகளின் ஆதரவு இல்லாமல் தேக்க நிலையில் திட்டம் உள்ளதாக ஜான் கூறுகின்றார்.

 

மக்களிடம் விழிப்புணர்வு

இந்தியா புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் சங்கம் அரசிடம் இத்திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் வங்கிகளிடம் அழுத்தத்தைத் தர வேண்டும் என்று கூறிவருகின்றது.

இப்படிச் செய்யவில்லை என்றால் இந்தியாவின் இறக்குமதி சதவீதம் குறையாது என்று கூறுகின்றார் இந்தியா புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் சங்கம் செயலாளர் சுரேந்திர மேத்தா.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi's household gold refineries scheme failed

Modi's household gold refineries scheme failed
Story first published: Monday, March 13, 2017, 18:25 [IST]
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns