சன் டிவி நிறுவன தலைவர் கலாநிதி மாறனின் வெற்றி கதை..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1991-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி துவங்கப்பட்ட சன் நெட்வொர்க் 27 வருடங்களை நிறைவு செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்களைப் பொருத்த வரை இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக என்று கேட்டாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது சன் டிவி தான். இப்படித் தமிழ் மக்கள் மட்டும் இல்லாமல் உலகத் தமிழ் மக்களிடமும் பிரபலமான சன் நெட்வொர்க் தலைவரான கலாநிதி மாறனின் வெற்றிக் கதை தான் இன்று நாம் வெற்றிக் கதையில் பார்க்க இருக்கின்றோம்.

 

காலச் சக்கரம் யாருக்காகவும், எதற்காகவும் நிற்பதில்லை. அதிலும் காலத்துடன் இணைந்த அதிர்ஷ்டச் சக்கரம் மிகவும் வேகமாகச் சுழலக்கூடியது. இந்த அதிர்ஷ்டச் சக்கரத்தில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். இந்தச் சக்கரத்தின் சுழற்சியில் மேலே இருப்பவர் கீழே வருவதும், கீழே இருப்பவர் மேலே வருவதும் மிகவும் சாதாரணம்.

இவ்வாறு கீழிருந்து மேலேறியவர்களின் வாழ்க்கை பிறருக்கு மிகப் பெரிய படிப்பினையைத் தருகின்றது. இவர்கள் தோல்வியைச் சந்தித்தாலும் அயராமல் போராடி வெற்றியை ருசிக்கின்றனர். இதற்கு மிகச் சமீபத்திய உதாரணம் கலாநிதி மாறன் ஆவார். இவர் சந்திக்காத வெற்றி மற்றும் தோல்விகளே கிடையாது.

பிறப்பு

பிறப்பு

கலாநிதி மாறன் 1965 ம் ஆண்டில், தமிழ்நாட்டில் பிறந்தார். அவர் நாட்டின் மிக முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் குடும்பத்தின் மிக முக்கியமான வாரிசு ஆவார். இவருடைய தந்தை முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சர், திரு முரசொலி மாறன் ஆவார்.

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

இவர் திருக் கருணாநிதி, தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர், அவர்களின் மருமகன் வழிப் பேரன் ஆவார். அவர் ஆரம்பத்தில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் உரிமையாளராக இருந்தார். அந்த நிறுவனம் தொடர் இழப்புகள் மூலம் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்ட பொழுது, அந்த நிறுவனத்தை அதனுடைய பங்குதாரர்களில் ஒருவருக்கு விற்று விட்டு அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.

இயக்குனர் மற்றும் தலைவர்
 

இயக்குனர் மற்றும் தலைவர்

தற்போது இவர் மிகப் பெரிய ஊடக நிறுவனமான சன் டிவி நெட்வொர்க்கின் இயக்குனர் மற்றும் தலைவராக இருக்கின்றார். இருவருடைய தலைமையின் கீழ் அந்த நிறுவனம் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்து வளமான காலத்தை அனுபவித்து வருகின்றது.

குழந்தைப் பருவம்

குழந்தைப் பருவம்

கலாநிதி மாறன், சென்னை எழும்பூரில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றார். அதன் பின்னர் அவர் சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் பட்டம் பெற்றார். மாணவப் பருவத்தில் அவர் ஒரு சராசரி மாணவராக இருந்த போதிலும், அவர் மிகவும் தீவிரமாக அரசியலில் ஈடுபட்டிருந்தார். அவர் மாணவர் ஒன்றியத்தின் தலைவராக இருந்தது பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தார். பட்டப் படிப்பை முடித்த பிறகு, அவர் எம்பிஏ பட்டம் பெற ஸ்க்ராண்டன் பல்கலைக் கழகம், பென்சில்வேனியா, அமெரிக்கா சென்றார்.

இளமை வாழ்க்கை

இளமை வாழ்க்கை

கலாநிதி மாறன் தன்னுடைய பொருளாதார வாழ்க்கையைச் சுமங்கலி பதிப்பகத்தில் காரியதரிசியாகத் தொடங்கினார். 1980-களின் பிற்பகுதியில், கலாநிதி மாறன் குங்குமம் என்கிற ஒரு தமிழ் வாரப் பத்திரிகையில் தன்னுடைய வேலையைத் தொடங்கினார். அதன் பிறகு அவர் பின்னர் 1990 இல், பூமாலை என்கிற ஒரு மாத வீடியோ செய்திகள் பத்திரிகையை வீடியோ கேசட் வடிவத்தில் அறிமுகப்படுத்தினார். இந்த வீடியோ பத்திரிகை வெளிநாட்டில் கூட வெளியிடப்பட்டு அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக விளங்கியது. எனினும் இந்த இதழ் காப்புரிமை பிரச்சனை காரணமாக 1992ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

சன் டிவி

சன் டிவி

அதன் பின்னர் இவர் ஏப்ரல் 14, 1993-ல், ஒரு வங்கியில் $86, 000 கடனாகப் பெற்று சன் டிவி நிறுவனத்தைத் தொடங்கினார்.

இப்பொழுது கலாநிதி மாறன் ஆசியாவின் மிகப்பெரிய டிவி நெட்வொர்க்கான சன் நெட்வொர்க்கின் சொந்தக்காரராக விளங்குகின்றார். சன் நெட்வொர்க் ஊடகத் துறை சார்ந்த நிறுவனமாக விளங்குகின்றது. சன் டிவியின் தொடக்கக் காலக் கட்டத்தில், மூன்று மணி நேர தமிழ் நிகழ்ச்சிகள் ஏடிஎன் தொலைக்காட்சியில், சன் டிவி என்கிற பெயருடன் ஒளிபரப்பாகியது.

பிற மொழிகளில் சன் நெட்வொர்க்

பிற மொழிகளில் சன் நெட்வொர்க்

சன் டிவியின் புகழ் படிப்படியாக அதிகரித்த பின்னர்ச் சன் டிவி நெட்வொர்க் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி போன்ற பல்வேறு மொழிகளில் 24 மணி நேரமும் ஊடக சேனலை நடத்தி வருகின்றது.

உச்சங்களைத் தொட்ட சன் நெட்வொர்க்

உச்சங்களைத் தொட்ட சன் நெட்வொர்க்

கலாநிதி மாறன் மீடியா துறையில் மிக நிதானமாக அதே சமயத்தில் மிகவும் அழுத்தமாகத் தன்னுடைய கொடியைப் பறக்க விட்டுள்ளார். இவருடைய தலைமையின் கீழ் பல உச்சங்களைத் தொட்ட சன் நெட்வொர்க் பல்வேறு சேனல்களை நடத்தி வருகின்றது. மேலும் இந்த நிறுவனத்திற்கு ஒரு பில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் இந்தியா தொடங்கி, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உள்ளனர். இந்த நிறுவனம் ஏப்ரல், 2004 அன்று மும்பை பங்குச் சந்தையில் ($ 133 மில்லியன்) பட்டியலிடப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

கலாநிதி மாறன் கடந்து வந்த பாதை ஒன்றும் பூக்கள் நிறைந்தது அல்ல. அவர் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளார். எனினும் அவருக்கு அதிர்ஷ்டமும் அவ்வப்பொழுது கைகொடுத்தது. மிகவும் பிரபலமான அரசியல் குடும்பத்தில் வந்தவர் இவர். இதுவே அவருடைய பலமாகவும், பலவீனமாகவும் இருக்கின்றது. குடும்பப் பின்னணி காரணமாக இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றது. இவருக்குப் பக்க பலமாக இருந்த அரசியல் கட்சி, 2007 ஆம் ஆண்டில் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டது அதன் பின்னர் 2010 ல், இவர் மீது ஜாக் கம்யூனிகேஷன்ஸ் என்கிற நிறுவனம் கிரிமினல் குற்றம் சாட்டியது.

தனிப்பட்ட வாழ்க்கை

தனிப்பட்ட வாழ்க்கை

1991 ஆம் ஆண்டில், கலாநிதி மாறன் கர்நாடகத்தைச் சேர்ந்த காவேரி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். திருமதி காவேரி மாறன் அவர்கள் சன் டிவி நெட்வொர்க் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி பெற்றுள்ளார். இவர்களுக்குக் காவ்யா என்கிற ஒரு பெண் குழந்தை 1992 ம் ஆண்டுப் பிறந்தது.

சாதனைகள்

சாதனைகள்

கலாநிதி மாறன் சிஎன்பிசி-ன் எர்னஸ்ட் & யங்-ல் இருந்து சிறந்த இளம் தொழிலதிபராக விருது வழங்கப்பட்டுக் கவுரவிக்கப்பட்டார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sun network Chairman Kalanithi Maran Success Story

Sun network Chairman Kalanithi Maran Success Story
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X