வரிச் சேமிப்பு என்ற பெயரில் தவறான திட்டத்தில் முதலீடு செய்யாதீர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மார்ச் மாதம். ஆம் இது மார்ச் மாதம் தான். இந்த மாதத்தை நினைத்துத் தூக்கத்தைத் தொலைத்தவர்களில் நீங்களும் ஒருவரா. நிதி உலகில் மார்ச் சிண்ட்ரோம் ஆரம்பித்து விட்டது. இந்த மாதத்தில், நிதி நிலையைத் திட்டமிடுவோர் எண்ணற்ற தவறுகளைப் செய்கின்றனர். முதலீட்டாளர்களின் மோசமான மாதம் இதுவாகும். அவர்கள் வரியைச் சேமிக்கின்றேன் என்கிற தோற்றத்தில் பல்வேறு தவறுகளைப் செய்கிறார்கள்.

 

இந்த நிதியாண்டில், எக்கணாமிக் டைம்ஸின் மிகச் சிறந்த வரிச் சேமிப்பு முதலீடுகளுக்கான தரவரிசைப் பட்டியலில், இஎல்எஸ்எஸ் நிதித் திட்டம் முதலிடத்தைப் அளித்துள்ளது.

எனினும், நிதி ஆலோசனை வல்லுநர்கள், திட்டமிட்ட முதலீடுகளைப் (SIP) பரிந்துரைக்கின்றனர். SIP திட்டங்களில் புழங்கும் 20 சதவீதத்திற்கும் குறைவான நிதியே இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றது.

பாரம்பரியமான ஆயுள் காப்பீடு திட்டங்கள் 5 முதல் 6 சதவீத வருமானத்தைக் கொடுத்தாலும், இத்தகைய திட்டங்கள், மார்ச் மாதங்களில் அதிகமாக விற்பனையாகின்றது. பொது வருங்கால வைப்பு நிதி என்று வரும் போது, இளைய தலைமுறையினர் கூட, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்து, தங்களுடைய பணத்தை அதில் முடக்கி, சுமாரான வருமானத்தையே பெறுகின்றனர்.

தவறுகளும்.. தீர்வுகளும்..

தவறுகளும்.. தீர்வுகளும்..

இத்தகைய தவறுகளில் இருந்து எப்படி வரி செலுத்துவோர் தப்பிக்க முடியும்? இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்கள் நீண்ட கால நோக்கில் செல்வத்தை உருவாக்க உதக்கூடிய பங்கு சார்ந்த திட்டங்களாகும்.

இத்தகைய திட்டங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில், வருடம் தோறும் சுமார் 20.2 சதவீத வருமானத்தையும், கடந்த ஐந்து ஆண்டுகளில் வருடந்தோறும் 16.4 சதவீத வருமானத்தையும் தந்துள்ளன.

எனினும் ஒருவர் ஒரு திட்டத்தில், ஒரே நேரத்தில் மிகப் பெரிய அளவு முதலீடு செய்யாமல், மாதாந்திர sip திட்டங்களின் மூலம் முதலீடு செய்வது நல்லது. அதுவும் பங்குச் சந்தைகள் தன்னுடைய உச்சத்தில் இருக்கும் பொழுது இது மிகவும் பொருந்தும்.

முதலீடும்.. வரி பயனும்..

முதலீடும்.. வரி பயனும்..

நீங்கள் மார்ச் 31 க்கு முன் வருமான வரி பிரிவான 80 சி இன் கீழ் ரூ 50,000 முதல் 60,000 வரை முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், இது போன்ற இ எல் எஸ் எஸ் திட்டங்களில் சுமார் 15000 முதல் 20000 வரை முதலீடு செய்துவிட்டு, மீதி தொகையைப் பொது வருங்கால வைப்பு நிதி அல்லது NSC போன்ற மிகவும் பாதுகாப்பான பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கின்றோம்.

நீங்கள் புதிய நிதியாண்டில், மாதாந்திர sip திட்டங்களின் மூலம் இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்களில் அதிகமாக முதலீடு செய்யலாம்.

கவனிக்க வேண்டும்
 

கவனிக்க வேண்டும்

வரி செலுத்துவோர் தங்களுடைய போர்ட்ஃபோலியோவில் உள்ள ஒவ்வொரு முதலீடுகளும் தன்னுடைய நோக்கத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு வகிக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.

அவர்கள் தங்களுடைய நோக்கத்தை நிறைவேற்றாத துறைகளைக் கண்டறிந்து, அந்த இடைவெளிகளை நிரப்பக்கூடிய முதலீடுகளைத் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் பங்குசார்ந்த திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் இஎல்எஸ்எஸ் நிதித் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.

நிதி அபாயம்

நிதி அபாயம்

மேலும், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்வது, உங்களுடைய நிதி அபாயத்தைத் தாங்கும் திறனைப் பொருத்தது. உங்களுடைய போர்ட்போலியோவில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனத்தின் பங்குகள் அதிக அளவில் இருந்தால், அதனால் ஏற்படக் கூடிய அபாய அளவும் அதிகம்.

அதே வேளையில் உங்களிடம் மிகப் பெரிய கம்பெனியின் பங்குகள் இருந்தால், அதனால் விளையக் கூடிய நிதி அபாயம் மிகவும் குறைவு.

லாக் இன் பீரியட்

லாக் இன் பீரியட்

மிக முக்கியமாக, மூன்று ஆண்டுகளைப் பூட்டி வைக்கும் காலமாக இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்களுக்கு அமைக்கக்கூடாது. நீண்ட காலத்திற்குப் பங்குகளை வைத்திருந்தால், அவை நல்ல வருமானத்தைக் கொடுக்கும்.

பொது வருங்கால வைப்பு

பொது வருங்கால வைப்பு

இதேபோல், பொது வருங்கால வைப்பு நிதியானது நீண்ட காலச் சேமிப்பு நோக்கில் ஒரு நல்ல திட்டமாகும். பொது வருங்கால வைப்பு நிதி, உங்களுடைய கடன் சார்ந்த திட்டங்களுக்கான போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றாலும், இளைய தலைமுறையினர் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவதில்லை.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சேமலாப நிதியத்தில் ஒருவருடைய மாதாந்திர பங்களிப்பு, அவருடைய தனிப்பட்ட கடன் சார்ந்த முதலீட்டுப் பகுதியை உருவாக்க போதுமானதாக இருக்கின்றது. பொது வருங்கால வைப்பு நிதியில் செய்யப்படும் முதலீடு, உங்களுடைய முதலீட்டு மதிப்புகளைக் குறைத்து, மற்றும் ஒட்டுமொத்த வருமானத்தைப் பதம் பார்த்து விடுகின்றது.

உங்கள் தேவைக்கான முதலீட்டைத் திட்டமிட்டுத் தேர்ந்தெடுங்கள்

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

தவணைக் காலம்: 15 ஆண்டுகள்

வருமானம்: 8%

போர்ட்ஃபோலியோவின் நோக்கம்: நீண்ட காலச் சேமிப்பு. வரி இல்லா சேமிப்பு.

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

செல்வ மகள் சேமிப்புத் திட்டம்

முதலீட்டுக் காலம்: பெண் குழந்தைகளின் 18 வயது வரை

வருமானம்: 8.5%

போர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்டகால நிதி உருவாக்கம். வரி இல்லா சேமிப்பு.

காப்பீட்டுத் திட்டங்கள்

காப்பீட்டுத் திட்டங்கள்

முதலீட்டுக் காலம்: திட்டங்களைப் பொருத்து

வருமானம்: 5-6%

போர்ட்ஃபோலியோ நோக்கம்: காப்பீடு, வரி இல்லா சேமிப்பு.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்

முதலீட்டுக் காலம்: 5 வருடங்கள்

வருமானம்: 8.5%

போர்ட்ஃபோலியோ நோக்கம்: ஓய்வுகாலத்தில் நிரந்தர வருமானம். வருமானத்துக்கு வரி விதிக்கப்படும்.

தேசிய ஓய்வூதிய திட்டம்

தேசிய ஓய்வூதிய திட்டம்

முதலீட்டுக் காலம்: ஓய்வுபெறும் வரை

வருமானம்: சந்தையுடன் இணைந்தது

போர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்ட காலச் சேமிப்பு. சேமிக்கப்பட்ட நிதியில் 40 % க்கு வரி விலக்கு.

இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்கள்

இஎல்எஸ்எஸ் நிதி திட்டங்கள்

முதலீட்டுக் காலம்: 3 ஆண்டுகள்

வருமானம்: சந்தையுடன் இணைந்தது

போர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்ட கால நித் உருவாக்கம். வரி இல்லா சேமிப்பு.

NSCs மற்றும் வங்கி வைப்பு நிதிகள்

NSCs மற்றும் வங்கி வைப்பு நிதிகள்

முதலீட்டுக் காலம்: 5 வருடங்கள்

வருமானம்: 7.5-8%

போர்ட்ஃபோலியோ நோக்கம்: நீண்டகால நிதி உருவாக்கம். வரி இல்லா சேமிப்பு.

வருமான வரிச் சட்டம் 80சி

வருமான வரிச் சட்டம் 80சி

இந்தச் சேமிப்புகள் மற்றும் செலவுகளுக்கு வருமான வரிச் சட்டம் 80சி இன் கீழ் வரிவிலக்கு உண்டு:

* ஊழியர் சேமலாப நிதிக்கான கட்டாயப் பங்களிப்பு, தேசிய ஓய்வூதிய திட்டம்

* இரண்டு குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம்

* வீட்டுக் கடன் EMI ல் அந்த வருடத்தில் திரும்பச் செலுத்திய மொத்த அசல் தொகை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Making last-minute investments to save tax

Making last-minute investments to save tax - Tamil Goodreturns
Story first published: Tuesday, March 21, 2017, 18:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X