அட பக்கிகளா விளம்பரம் செய்ய ஒரு அளவில்லையா..?

By: குட்ரிட்டன்ஸ்
Subscribe to GoodReturns Tamil

இந்தச் செய்தியை முதலில் கேட்டபோழுது எங்களுக்கு ஆச்சர்யமாகத் தான் இருந்தது. டியூரெக்ஸ் பிஆர் ஏஜென்சி நிறுவனம் பத்திரிக்கையாளர்களை ஏமாற்றுவதற்காக அழைக்கின்றதா என்ற எண்ணமும் மனதில் ஓடியது.

அந்த அழைப்பிதழில் ரெக்கிட் பென்கீசர் அதிகாரப்பூர்வமாக 'டியூரெக்ஸ் ஜீன்ஸ்' தயாரிப்பை அறிவிக்க இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதில் என்ன ஆச்சர்யம் என்று நீங்கள் கேட்கலாம். டியூரெக்ஸ் ஒரு ஆணுறை தயாரிக்கும் நிறுவனம். இந்த நிறுவனத்தின் விளம்பர தூதறாகத் தான் ரன்வீர் சிங் உள்ளார்.

அழைப்பிதழ்

அவர்கள் அனுப்பிய அழைப்பிதழை உறுதி செய்யும் விதமாக இதற்கான டீசரை தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். இதனைப் பார்க்கும் போது பலரும் என்ன ஆணுறை நிறுவனம் ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்பில் இறங்கியுள்ளதா என்றும் நம்பும் வண்ணம் உள்ளது.

முக்கியத் திருப்பம்

ஆனால் இதில் தான் திருப்பம் உள்ளது என்றும் டியூரெக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்திற்காக மக்களை ஏமாற்ற இருக்கின்றது என்றும் இந்த நிறுவனம் மக்களை ஏமாற்றப் பல முறை சமுக வலைத்தளங்களில் விளம்பரம் தேடியுள்ளது.

ஹைட்ரேட் பக்கெட் நீர்

ஒரு வருடத்திற்கு முன்பு வாடிக்கையாளர்களின் அந்தரங்க வாழ்க்கைக்கான ஹைட்ரேட் பக்கெட் நீர் அறிமுகம் செய்கிறோம் என்றும் விளம்பரம் தேடியது. இந்தப் பாலியல் ஆரோக்கிய பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் இது போன்று பலவற்றை முன்பும் செய்துள்ளது.

ஆணுறை எமோஜி

மேலும் இந்த நிறுவனம் ஆணுறை எமோஜி என்ற பெயரில் பாதுகாப்பான காம எமோஜி படங்கள் போன்றவற்றை ஸ்மார்ட்போனில் இளைஞர்கள் பயன்படுத்திப் பாதுகாப்பாகக் காம வாழ்க்கை பற்றிப் பேசலாம் என்றும் அறிமுகம் செய்தது. இதனால் எழுந்த சர்ச்சைகளால் இந்த நிறுவனத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது.

சுவாரஸ்யமான நடவடிக்கை

இப்போது டியூரெக்ஸ் ஜீன்சும் இந்த நிறுவனத்தின் ஒரு விளம்பர உத்தியாகவே கூட இருக்கலாம், அப்படி இல்லை என்றால் இது இந்த நிறுவனத்தின் சுவாரஸ்யமான நடவடிக்கை என்றும் கூறலாம்.

100 வருடப் பாரம்பரிய நிறுவனம்

டியூரெக்ஸ் நிறுவனம் 1915-ம் ஆண்டுத் துவங்கப்பட்டு 100 பாரம்பரிய நிறுவனம் என்ற பெயரையும் எடுத்துள்ளது. முதன் முதலில் இறக்குமதி செய்யப்பட்ட ஆணுறைகளையும், முடிதிருத்தும் கடை பொருட்களையும் தான் இந்த நிறுவனம் விற்று வந்தது.

பிற தயாரிப்புகள்

டியூரெக்ஸ் ஆணுறை மட்டும் இல்லாமல் காம வாழ்க்கைக்கான லூப்ரிகண்டுகள், வைப்ரேட்டர்கள் உள்ளிட்ட தயாரிப்புகளையும் விற்பனை செய்து வருகின்றது.

இ-காமர்ஸ்

டியூரெக்ஸ் அதன் தயாரிப்புகளைப் பிரபல இந்திய இ-காமர்ஸ் நிறுவனங்களின் உதவியுடன் இந்தியாவிலும் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Great marketing move of Ranveer Singh and Durex

Great marketing move of Ranveer Singh and Durex
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns